மோடி டூ பிரஜ்வல் ரேவண்ணா | பாஜக-வுக்கு அதிர்ச்சியும், ஆச்சர்யமும் தந்த தொகுதி முடிவுகள் என்னென்ன?

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், சில முக்கிய வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிகளின் முடிவுகள், ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன. அந்த முக்கிய வேட்பாளர்கள், அவர்களது தொகுதியின் முடிவுகள் குறித்து தற்போது காணலாம்..
பிரஜ்வல் - சுரேஷ் கோபி - மோடி - அண்ணாமலை - ஸ்மிருதி இரானி
பிரஜ்வல் - சுரேஷ் கோபி - மோடி - அண்ணாமலை - ஸ்மிருதி இரானிபுதிய தலைமுறை

பிரதமர் மோடி - வாரணாசி தொகுதி

உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி, ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தார். இருப்பினும் வெற்றிக்கான வாக்கு வித்தியாசம், கடந்த இரு தேர்தல்களை விட இந்தமுறை மிகவும் குறைந்துள்ளது.

2014 ஆம் ஆண்டு 3,71,784 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பிரதமர் மோடி, 2019 ஆம் ஆண்டு 4,79,505 வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தார். ஆனால் இந்தமுறை, வெறும் 1,52,513 வாக்குகள் வித்தியாசத்திலேயே அவர் வென்றுள்ளார்.

ராகுல் காந்தி - ராய் பரேலி மற்றும் வயநாடு தொகுதிகள்

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தான் போட்டியிட்ட ராய் பரேலி மற்றும் வயநாடு ஆகிய இரு தொகுதிகளிலும், மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளார். வயநாட்டில் 3,64,422 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற அவர், ராய் பரேலியில் 3,89,341 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தார்.

அமேதி தொகுதி - ஸ்மிருதி இரானி

மேலும், அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியை, காங்கிரஸின் கிஷோரி லால் சர்மா வீழ்த்தியுள்ளார். 2019 ஆம் ஆண்டு ராகுல் காந்தியை வென்ற ஸ்மிருதி இரானி, இந்த முறை நேரு குடும்ப விசுவாசியிடம் தோல்வியடைந்துள்ளார்.

பிரஜ்வல் - சுரேஷ் கோபி - மோடி - அண்ணாமலை - ஸ்மிருதி இரானி
பாஜக-வின் Star Candidates.. தோல்வியைத் தழுவிய ஒரே அமைச்சர்!

சுரேஷ் கோபி - திருச்சூர் தொகுதி

கேரளாவின் திருச்சூர் தொகுதியில், பாஜக சார்பில் போட்டியிட்ட சுரேஷ் கோபி வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம், கேரளாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பாஜக மக்களவை உறுப்பினர் என்ற பெருமையை சுரேஷ் கோபி பெற்றுள்ளார்.

மாதவி லதா - ஹைதராபாத் தொகுதி

ஹைதராபாத் தொகுதியில் அசாதுதீன் ஓவைசியிடம், பாஜகவின் மாதவி லதா தோல்வியடைந்தார். முன்னதாக மாதவி லதா, மசூதியை நோக்கி அம்பு விடுவதை போல் சைகை செய்து, சர்ச்சையில் சிக்கியிருந்தார்.

பிரஜ்வல் - சுரேஷ் கோபி - மோடி - அண்ணாமலை - ஸ்மிருதி இரானி
40 ஆண்டுகால கோட்டை... ஐதராபாத்தில் மீண்டும் சாதித்த அசாதுதீன் ஓவைசி!

பிரஜ்வல் ரேவண்ணா - ஹசன் தொகுதி

பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா, கர்நாடகாவின் ஹசன் தொகுதியில் தோல்வியை சந்தித்திருக்கிறார். ஹசன் தொகுதி வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னரே, பிரஜ்வல் ரேவண்ணா மீதான புகார் பூதாகரமாக வெடித்தது குறிப்பிடத்தக்கது.

பிரஜ்வல் - சுரேஷ் கோபி - மோடி - அண்ணாமலை - ஸ்மிருதி இரானி
இரண்டாவது தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த காங்கிரஸ்!

ஆதிர் ரஞ்சன் சவுத்திரி - பஹராம்பூர் தொகுதி

மேற்கு வங்கத்தின் பஹராம்பூர் தொகுதியில், காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்திரிக்கு தோல்வி கிட்டியுள்ளது. தொடர்ந்து 4 முறை அத்தொகுதியில் வென்றிருந்த அவர், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதானிடம், வெற்றியை பறிகொடுத்தார்.

பிரஜ்வல் - சுரேஷ் கோபி - மோடி - அண்ணாமலை - ஸ்மிருதி இரானி
’தேர்தலிலும் சிக்சர் விளாசல்’ - மேற்குவங்கத்தில் காங்கிரஸ், பாஜக இரண்டையும் காலிசெய்த யூசுப் பதான்!

ஓமர் அப்துல்லா - பாரமுல்லா பாரமுல்லா

காஷ்மீரில் பாரமுல்லா தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா, சுயேட்சை வேட்பாளரும், உபா சட்டத்தின் கீழ் சிறையில் உள்ளவருமான அப்துல் ரஷீத் என்பவரிடம் தோல்வியடைந்துள்ளார். திஹார் சிறையில் இருந்தபடி அவர் போட்டியிட்டு வெற்றி பெற்றிருப்பது, அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரஜ்வல் - சுரேஷ் கோபி - மோடி - அண்ணாமலை - ஸ்மிருதி இரானி
ஜம்மு - காஷ்மீர் | சிறையில் இருந்தபடியே Ex முதல்வரை வீழ்த்திய சுயேட்சை வேட்பாளர்... யார் இந்த ரஷீத்?

அதேபோல் காஷ்மீரின் மற்றொரு முன்னாள் முதல்வரான மெகபூபா முப்தி, தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளரிடம் தோல்வியடைந்துள்ளார்.

அண்ணாமலை - கோவை தொகுதி

கோவை தொகுதியில் போட்டியிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரிடம் 118068 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருக்கிறார்.

பிரஜ்வல் - சுரேஷ் கோபி - மோடி - அண்ணாமலை - ஸ்மிருதி இரானி
தமிழ்நாட்டில் இரண்டாமிடம் பிடித்த அதிமுக.. மூன்றாம் இடத்தில் பாஜக! நாம் தமிழர் கட்சி?

என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழ்நாடு முழுக்க நடைபயணம், பிரதமர் 8 முறை வந்து வாக்கு சேகரிப்பு என்ன என்னென்னவோ செய்தும்கூட, அண்ணாமலையால் வெற்றிபெற முடியவில்லை. கோவை மட்டுமன்றி, தமிழ்நாட்டில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தோல்வியையே அடைந்தன.

அண்ணாமலை
அண்ணாமலை@annamalai_k

காங்கிரஸை பொறுத்தவரை சசிதரூர், திரிணாமூல் காங்கிரஸின் மகுவா மொய்த்ரா உள்ளிட்டோர் தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில், காங்கிரஸின் கன்னையா குமார், ஓய் எஸ் சர்மிளா ஆகியோர் தோல்வியை தழுவினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com