இரண்டாவது தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த காங்கிரஸ்!

மக்களவைத் தேர்தலில் 99 தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி இரண்டாவது தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
காங்கிரஸ்
காங்கிரஸ்PT Web

நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியதில் இருந்தே காங்கிரஸ் கட்சிக்கு சற்று ஆறுதல் தரக்கூடிய முன்னிலை நிலவரங்களே வெளிவந்தன. இறுதியில் காங்கிரஸ் கட்சி 99 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மட்டுமல்லாது காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி போன்ற கட்சிகளை உள்ளடக்கிய I.N.D.I.A. கூட்டணி 234 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.

காங்கிரஸ்
தனிப்பெரும்பான்மை பெறாத பாஜக... மத்தியில் ஆட்சி அமைப்பதை காங்கிரஸால் தடுக்க முடியுமா?

இதனால் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர். கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி தான் போட்டியிட்ட இரு இடங்களிலும் வெற்றியைப் பெற்றுள்ளார். அதேபோல் AMETHI தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியைத் தோற்கடித்துள்ளார்.

காங்கிரஸ்
பாஜக-வின் Star Candidates.. தோல்வியைத் தழுவிய ஒரே அமைச்சர்!

இது காங்கிரஸ் கட்சிக்கு அதிக நம்பிக்கையைத் தந்துள்ளது. அதே போல் தமிழகம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் I.N.D.I.A. கூட்டணிக் கட்சிகளின் செயல்பாடு வியக்கத்தக்க வகையில் அமைந்துள்ளது.

கேரளாவில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது. மல்லிகார்ஜூன கார்கே தலைமையிலான காங்கிரஸ் கட்சி 2ஆவது தனிப்பெரும் கட்சி என்ற இடத்தைப் பிடித்துள்ளதால் அக்கட்சித் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். கடந்த மக்களவைத் தேர்தலில் மக்களவையில் எதிர்க்கட்சி என்ற நிலையை கூட காங்கிரஸ் கட்சி எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மு.க.ஸ்டாலின் - ராகுல் காந்தி
மு.க.ஸ்டாலின் - ராகுல் காந்திட்விட்டர்

இந்நிலையில் அடுத்த கட்டம் குறித்து முடிவு செய்ய I.N.D.I.A. கூட்டணி கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

முன்னாள் கூட்டணிக்கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் கட்சிகளை கூட்டணிக்குள் அழைப்பது பற்றி ஆலோசிக்கப்படும் என்று அக்கட்சி கூறியுள்ளது. டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல்காந்தி உள்ளிட்டோர் நேற்று செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தபோது இத்தகவலை தெரிவித்தனர்.

பிரதமர் மோடி - எம்.பி ராகுல் காந்தி
பிரதமர் மோடி - எம்.பி ராகுல் காந்திமுகநூல்

அப்போது பேசிய ராகுல்காந்தி, ”கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசித்தே எந்த முடிவும் எடுக்கப்படும். இந்தத் தேர்தல் இந்திய அரசியல் சாசனத்தை காப்பதற்கான தேர்தல். நாட்டின் ஏழை மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும் அரசியல் சாசனத்தை காக்க ஒன்றிணைந்துள்ளனர். அரசியல் சாசனத்தை காக்க காங்கிரசுக்கு ஆதரவு அளித்த உத்தரப்பிரதேச மக்களுக்கு நன்றி” என்று தெரிவித்தார்.

காங்கிரஸ்
கோட்டையிலேயே பாஜகவுக்கு விழுந்த அடி... தேசிய அரசியலில் பெரிய திருப்பத்தை தந்த உத்தரப் பிரதேசம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com