ஜம்மு - காஷ்மீர் | சிறையில் இருந்தபடியே Ex முதல்வரை வீழ்த்திய சுயேட்சை வேட்பாளர்... யார் இந்த ரஷீத்?

ஜம்மு - காஷ்மீரின் பாரமுல்லா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதலவரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவருமான உமர் அப்துல்லா கடும் பின்னடைவைச் சந்தித்தார்.
உமர் அப்துல்லா, ஷேக் அப்துல் ரஷீத்
உமர் அப்துல்லா, ஷேக் அப்துல் ரஷீத்எக்ஸ் தளம்

18ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணி 293 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 232 இடங்களிலும் முன்னிலையில் இருந்துவருகின்றன. இந்த முறை பாஜக ஆட்சி அமைப்பதற்கே கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைப் பெற வேண்டியுள்ளது. இதனால் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் கைகள் ஓங்கி வருகின்றன.

இந்த நிலையில், ஜம்மு - காஷ்மீரின் பாரமுல்லா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவருமான உமர் அப்துல்லா கடும் பின்னடைவைச் சந்தித்தார். இந்த தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய ஷேக் அப்துல் ரஷீத் என்ற என்ஜினீயர் ரஷீத் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி முகத்தைப் பெற்றுள்ளார்.

தற்போதைய நிலவரப்படி ரஷீத், 2,02,642 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். இதையடுத்து, உமர் அப்துல்லா தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார். தோல்வி குறித்து அவர், “தவிர்க்க முடியாததை ஏற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது என்று நான் நினைக்கிறேன். வடக்கு காஷ்மீரில் வெற்றி பெற்ற பொறியாளர் ரஷீத்துக்கு வாழ்த்துகள். அவரது வெற்றி அவரை சிறையில் இருந்து விடுவிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: பாஜக-க்கு குடைச்சல் கொடுக்கும் I.N.D.I.A கூட்டணி... கிங் மேக்கராக உருவான சந்திரபாபு நாயுடு! எப்படி?

உமர் அப்துல்லா, ஷேக் அப்துல் ரஷீத்
ஆந்திரா | படுதோல்வி அடையும் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்.. மாஸாக ஆட்சியை பிடிக்கும் தெலுங்கு தேசம்!

யார் இந்த ஷேக் அப்துல் ரஷீத்?

பொறியாளரான ஷேக் அப்துல் ரஷீத், தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செய்த வழக்கில் தற்போது டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவாமி இத்தேஹாத் கட்சிக்கு தலைமை தாங்கி இரண்டு முறை (2008 மற்றும் 2014) எம்எல்ஏவான அவர், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தார். அந்த ஆண்டுதான் பயங்கரவாத நிதி நடவடிக்கைகள் தொடர்பான குற்றச்சாட்டில் தேசிய புலனாய்வு முகமையால் (என்.ஐ.ஏ.) ரஷீத் கைது செய்யப்பட்டார்.

தற்போது டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஷீத், சிறையில் இருந்தபடி, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டார். அவருக்கான தேர்தல் பிரசார பணிகளை அவரது மகன்கள் அப்ரர் ரஷீத், அஸ்ரர் ரஷீத் ஆகியோர் மேற்கொண்டனர். பேரணிகளில் காணப்பட்ட பெருந்திரளான மக்கள் ரஷீத்திற்கு வாக்குகளாக மாறும் என்று நம்பிக்கை தெரிவித்தனர். அதன் பயனாக அவர் இன்று பார்முல்லாவின் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்.

இதையும் படிக்க: கேராளாவில் சுரேஷ் கோபி வெற்றி.. தென்னிந்தியாவில் I-N-D-I-A கூட்டணி-க்கு டஃப் கொடுத்த பாஜக!

உமர் அப்துல்லா, ஷேக் அப்துல் ரஷீத்
ஒடிசா| ஆட்சியை இழக்கிறாரா நவீன் பட்நாயக்.. அரியணை ஏற தயாராகும் பாஜக! 70 இடங்களுக்கு மேல் முன்னிலை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com