40 ஆண்டுகால கோட்டை... ஐதராபாத்தில் மீண்டும் சாதித்த அசாதுதீன் ஓவைசி!

ஐதராபாத் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளரான மாதவி லதாவைவிட ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வாக்குகள் முன்னிலை பெற்றிருக்கிறார் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவரும் சிட்டிங் எம்.பியுமான அசாதுதீன் ஓவைசி.
அசாதுதீன் ஓவைசி
அசாதுதீன் ஓவைசிFile image

1984-லிருந்து தொடர்ந்து ஐதராபாத் தொகுதி ஓவைசி குடும்பத்தின் தொகுதியாக இருந்து வருகிறது. இந்தமுறை கண்டிப்பாக தோற்கடிக்க வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு களம் இறங்கியது பாஜக, ஆனால் தற்போது ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் முன்னிலை பெற்று வெற்றி முகத்தில் இருக்கிறார் ஓவைசி.

மாதவி லதா
மாதவி லதாட்விட்டர்

ஹைதராபாத் நாடாளுமன்றத் தொகுதியில் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசிக்கு எதிராக, மாதவி லதா என்கிற இந்துத்துவ செயற்பாட்டாளரை களமிறக்கியது பாஜக. வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்பாக பாஜகவின் உறுப்பினராகக் கூட இல்லாத மாதவி லதாவை களமிறக்கக் காரணம் என்ன?. அதைப் பார்ப்பதற்கு முன்பாக அசதுதீன் ஓவைசி குறித்து பார்ப்போம்..,

அசாதுதீன் ஓவைசி
மைக்கை சுழற்றிய சீமான்...! அங்கீகரிக்கப்பட்ட கட்சியாகிறதா நாதக?

மாநகர தேர்தல், சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு வந்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி முதன்முறையாக 1984-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கியது. ஹைதராபாத் தொகுதியில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றது. அசாதுதீன் ஓவைசியின் தந்தை சலாவுதீன் ஓவைசி எம்.பியானார். தொடர்ந்து, 1989, 91, 96, 98, 99 என மொத்தமாக ஆறு முறை ஐதராபாத் தொகுதியின் எம்.பி-யாக சலாவுதீன் தேர்தெடுக்கப்பட்டார்.

அசாதுதீன் ஓவைசி
அசாதுதீன் ஓவைசிpt desk

அசாதுதீன் ஒவைசி முதன்முதலாக 2004 நாடாளுமன்றத் தேர்தலில், தன் தந்தை தொடர்ச்சியாக வெற்றிபெற்ற ஐதராபாத் தொகுதியில் போட்டியிட்டு எம்.பியானார் . தொடர்ந்து அந்தத் தொகுதியில் 2004, 2009, 2014, 2019 என நான்கு முறை எம்.பி-யாக வெற்றி பெற்றிருக்கிறார். இந்நிலையில், ஐதராபாத் தொகுதியில் ஓவைசியை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என பாஜக கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கியது. ஓவைசிக்கு எதிராக, இந்துத்துவ செயல்பாட்டாளரான மாதவி லதாவை வேட்பாளராக களமிறக்கியது.

அசாதுதீன் ஓவைசி
தருமபுரியில் அடித்து ஆடும் மாம்பழம்.. பதுங்கி பாய்ந்த சூரியன்? யாருக்கு சாதகம்?

மாதவி லதாவும் மிகத் தீவிரமாக பிரசாரத்தில் இறங்கினார். ஆனால், அவரின் பல்வேறு செயல்பாடுகள் சர்ச்சையாகின. குறிப்பாக மசூதியை நோக்கி வில் அம்பை எய்துவது போல அவர் செய்த செய்கை மிகப்பெரிய விமர்சனத்தை உண்டாக்கியது. ஆனால், அதற்கு வருத்தம் தெரிவித்தார் மாதவி லதா.

அசாதுதீன் ஓவைசி
மசூதியை நோக்கி அம்பு விடுவதுபோல் செய்கை.. சர்ச்சையில் சிக்கிய பாஜக வேட்பாளர்.. யார் இந்த மாதவி லதா?

“வெறுப்பை விதைப்பதைத் தவிர தனது தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை’’ என ஓவைசியை கடுமையாக விமர்சித்தார். ஆனால், தற்போது ஐதராபாத் தொகுதியில் மீண்டும் ஓவைசியைத் தேர்ந்தெடுக்க மக்கள் முடிவெடுத்து விட்டனர் என்பது தற்போது வரையான முடிவுகளில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து, நாற்பது ஆண்டுகளுக்கும் மேலான வெற்றி இந்தத் தேர்தலிலும் தொடர்ந்துள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com