பாஜக-க்கு குடைச்சல் கொடுக்கும் I.N.D.I.A கூட்டணி... கிங் மேக்கராக உருவான சந்திரபாபு நாயுடு! எப்படி?

18வது மக்களவைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கிங் மேக்கராக உருவாகி உள்ளார்.
சந்திரபாபு, மோடி
சந்திரபாபு, மோடிஎக்ஸ் தளம்

18ஆவது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்றது. இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தற்போது ஆளும் பாஜகவின் NDA கூட்டணி முன்னிலையில் இருந்து வருகின்றன. I-N-D-I-A கூட்டணிக் கட்சிகள் பின்னடைவை பெற்றுள்ளது. முன்னதாக கடந்த 2014 மற்றும் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் பாஜக, தனிப் பெரும்பான்மையுடன் தொகுதிகளைக் கைப்பற்றியது. அதாவது, ஆட்சியமைப்பதற்குத் தேவையான 272 தொகுதிகளுக்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றி அரியணை ஏறியது.

அதன்படி 2014ஆம் ஆண்டு பாஜக 282 இடங்களையும், 2019ஆம் ஆண்டு 303 இடங்களையும் கைப்பற்றி சாதனை படைத்தது. அத்துடன், பாஜகவுடன் கூட்டணி அமைத்த கட்சிகளும் அங்கம் வகித்ததால் அசுரபலத்துடன் ஆட்சியை அமைத்தது.

இந்த நிலையில், நடப்பாண்டு மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு I-N-D-I-A கூட்டணிக் கட்சிகள் குடைச்சலைக் கொடுத்து வருகின்றன. அதாவது, கடந்த தேர்தல்களில் தனிப் பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியமைத்த பாஜகவுக்கு, இந்த முறை கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஆட்சியமைக்கக் கூடிய நிலை உருவாகி இருக்கிறது.

இதில் ஆந்திர மாநில தெலுங்கு தேச கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவின் 10 மக்களவைத் தொகுதிகளும், பீகாரில் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் ஐக்கிய ஜனதா தள தலைவரும் முதல்வருமான நிதிஷ்குமாரின் 14 மக்களவைத் தொகுதிகளும் முக்கியமானதாக இருக்கிறது. இதுதவிர மகாராஷ்டிராவின் ஏக்நாத் ஷிண்டே மற்றும் லோக் ஜனசக்தி ஆகியோரின் ஆதரவும் தேவைப்படுகிறது. மேலும் பிஜு ஜனதா தளம், ராஷ்டிரிய லோக்தளம், அஜித் பவாரின் கூட்டணியும் தேவைப்படுவதாக உள்ளது.

இதையும் படிக்க:வாரணாசி| பிரதமர் மோடிக்கு டஃப் கொடுக்கும் காங். வேட்பாளர்.. யார் இந்த அஜய் ராய்?

சந்திரபாபு, மோடி
ஆந்திரா | படுதோல்வி அடையும் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்.. மாஸாக ஆட்சியை பிடிக்கும் தெலுங்கு தேசம்!

ஒருகட்டத்தில், இந்தக் கூட்டணிக் கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைத்து அரியணை ஏறினால், அது நாளை அந்த கட்சிக்கு தலைமீது தொங்கும் கத்தியாகவே பார்க்கப்படுகிறது. ஆம், தெலுங்குதேச சந்திரபாபு நாயுடுவோ அல்லது பீகாரின் நிதிஷ்குமாரோ இதிலிருந்து பின்வாங்கினால் அது பாஜக ஆட்சிக்கு ஆபத்தாகவே முடியும். அவர்கள் வெளியேறினால், ஒட்டுமொத்தமாக பாஜக ஆட்சி கவிழும் நிலையைச் சந்திக்கலாம். இதனால், பாஜக ஆட்சியமைக்க தனித்து 272 இடங்களைக் கைப்பற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. தற்போது பாஜக தனியாக 360 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால், தெலுங்கு தேசத்திற்கு அப்படியில்லை. அம்மாநிலத்தில் பாஜக கூட்டணியில்லாமலும் தெலுங்கு தேசத்தால் ஆட்சியமைக்க முடியும். மொத்தமுள்ள 175 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 88 இடங்களைப் பிடிக்கும் கட்சி ஆட்சியமைக்க முடியும். அந்த வகையில் தெலுங்கு தேசம் 144 இடங்களிலும் பாஜக 10 இடங்களிலும் போட்டியிட்டன. அப்படிப் பார்க்கையில், தெலுங்கு தேசத்திற்கு ஆட்சி அமைப்பதில் எந்தச் சிக்கலும் நேராது. ஆனால், மத்திய அரசில் பாஜக ஆட்சியமைக்கும்போது சந்திரபாபுவின் ஆதரவின்றி ஒன்றும் செய்ய முடியாது. இதனால் சந்திரபாபு நாயுடு கிங் மேக்கராக உருவாகி உள்ளார். ஆம், அவர் பாஜவுக்கு ஆதரவு அளித்தால், மத்திய அரசிடம் எதை வேண்டுமானாலும் கேட்கலாம்; அதாவது மத்திய அரசில் அமைச்சர் பதவிகூட கேட்க வாய்ப்பிருக்கிறது. அவர் வைப்பதே சட்டம் என ஆகிவிடும். இதனாலேயே அவர் கிங் மேக்கராக உருவெடுத்துள்ளார்.

இதையும் படிக்க: கேராளாவில் சுரேஷ் கோபி வெற்றி.. தென்னிந்தியாவில் I-N-D-I-A கூட்டணி-க்கு டஃப் கொடுத்த பாஜக!

சந்திரபாபு, மோடி
ஒடிசா| ஆட்சியை இழக்கிறாரா நவீன் பட்நாயக்.. அரியணை ஏற தயாராகும் பாஜக! 70 இடங்களுக்கு மேல் முன்னிலை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com