ஒடிசா| ஆட்சியை இழக்கிறாரா நவீன் பட்நாயக்.. அரியணை ஏற தயாராகும் பாஜக! 70 இடங்களுக்கு மேல் முன்னிலை

ஒடிசா மாநிலத்தில் மொத்தமுள்ள 147 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜக கூட்டணி 67 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
மோடி, நவீன் பட்நாயக்
மோடி, நவீன் பட்நாயக்எக்ஸ் தளம்

18ஆவது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்றது. இந்தத் தேர்தலுடன் சிக்கிம், அருணாச்சல் பிரதேசம், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில், சிக்கிம் மற்றும் அருணாச்சல் பிரதேச மாநிலங்களுக்கு கடந்த ஜூன் 2ஆம் தேதியே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

மோடி
மோடி

இந்த நிலையில், நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் மற்றும் ஒடிசா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கானச் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஒடிசா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் தற்போது நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 147 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜக கூட்டணி 70+ இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஆளும் பிஜு ஜனதா தளம் 50+ இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி 9 இடங்களிலும் பிற கட்சிகள் 4 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. பாஜக மற்றும் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

இதையும் படிக்க: ஆந்திரா | படுதோல்வி அடையும் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்.. மாஸாக ஆட்சியை பிடிக்கும் தெலுங்கு தேசம்!

மோடி, நவீன் பட்நாயக்
ஒடிசா| மேடையில் பேசும் நவீன் பட்நாயக்.. நடுங்கும் கையை மறைக்கும் விகே பாண்டியன்.. வைரலாகும் வீடியோ!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com