கேராளாவில் சுரேஷ் கோபி வெற்றி.. தென்னிந்தியாவில் I-N-D-I-A கூட்டணி-க்கு டஃப் கொடுத்த பாஜக!

தென் இந்திய மாநிலங்களில் பாஜகவின் நிலை எந்த அளவில் இருக்கிறது என இங்கு பார்ப்போம்.
bjp, i-n-d-i-a
bjp, i-n-d-i-ax page

18ஆவது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்றது. இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது ஆளும் பாஜக முன்னிலையில் இருந்து வருகிறது. 543 மக்களவைத் தொகுதிகளில் பெரும்பாலான இடங்களில் NDA மற்றும் I-N-D-I-A கூட்டணி முன்னிலையில் இருந்து வருகின்றன. இந்த நிலையில் தென் இந்திய மாநிலங்களில் பாஜகவின் நிலை எந்த அளவில் இருக்கிறது என இங்கு பார்ப்போம்.

மோடி
மோடி

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களை உள்ளடக்கியதே தென் மாநிலங்களாகக் குறிப்பிடப்படுகின்றன. இதில் தமிழ்நாட்டில் திமுக மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதேநேரத்தில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி தலா ஓர் இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளன.

இதையும் படிக்க: ஒடிசா| ஆட்சியை இழக்கிறாரா நவீன் பட்நாயக்.. அரியணை ஏற தயாராகும் பாஜக! 70 இடங்களுக்கு மேல் முன்னிலை

bjp, i-n-d-i-a
🔴LIVE: மக்களவை தேர்தல் 2024 | வாக்கு எண்ணிக்கை | கடும் போட்டியை கொடுக்கும் I.N.D.I.A. கூட்டணி!

இதனால், தமிழகத்தில் மீண்டும் பாஜக சரிவையே சந்தித்து வருகிறது. அதுபோல் ஆந்திராவில் மொத்தமுள்ள 25 தொகுதிகளில் பாஜக மற்றும் தெலுங்குதேசம் கூட்டணி 21 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வெறும் 4 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.

காங்கிரஸ் vs பாஜக
காங்கிரஸ் vs பாஜக முகநூல்

கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில் பாஜக மற்றும் ஜனதாள தள கூட்டணி 18 தொகுதிகளிலும் காங்கிரஸ் 10 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. தெலங்கானாவில் உள்ள 17 தொகுதிகளில் காங்கிரஸ் 8 தொகுதிகளிலும் பாஜக 8 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. கேரளாவில் மொத்தமுள்ள 20 தொகுதிகளில் 17 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலையில் உள்ளது. 2 இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது. ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே ஆளும் இடது முன்னணி முன்னிலையில் உள்ளது. பெரும்பாலும் தென் மாநிலங்களில் பாஜக பின்னடைவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கேரளா 2, கர்நாடகா 18, தெலங்கனா 8, ஆந்திரா 21 என மொத்தமாக 49 தொகுதிகளை கைப்பற்றும் நிலையில் பாஜக உள்ளது. குறிப்பாக, கேரளாவின் திருச்சூரில் நடிகரும் பாஜக வேட்பாளருமான சுரேஷ் கோபி சுமார் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் கேரளாவில் பாஜக கால் பதித்துள்ளது.

இதையும் படிக்க: ஆந்திரா | படுதோல்வி அடையும் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்.. மாஸாக ஆட்சியை பிடிக்கும் தெலுங்கு தேசம்!

bjp, i-n-d-i-a
🔴LIVE: மக்களவை தேர்தல் 2024 | வாக்கு எண்ணிக்கை | கடும் போட்டியை கொடுக்கும் I.N.D.I.A. கூட்டணி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com