மராத்தா இடஒதுக்கீடு: பற்றி எரியும் மகாராஷ்டிரா.. MLA, MPக்கள் ராஜினாமா.. ஆளும் அரசுக்கு சிக்கலா?

மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், எம்.பி.க்களும் எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்திருப்பது அம்மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா
மகாராஷ்டிராani

மராத்தா இடஒதுக்கீடு: எம்.எல்.ஏக்கள் - எம்.பிக்கள் ராஜினாமா

மகாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் ஆதரவு எம்.பிக்கள் ஹேமந்த் பாட்டீல், ஹேமந்த் கோட்சே ஆகிய இருவரும் மராத்தா இடஒதுக்கீடு கோரிக்கைக்கு ஆதரவாக ராஜினாமா செய்துள்ளனர். எம்.பி ஹேமந்த் பாட்டீல் தனது ராஜினாமா கடிதத்தை மக்களவைச் செயலகத்தில் சமர்ப்பித்துள்ள நிலையில், ஹேமந்த் கோட்சே தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு அனுப்பியுள்ளார். மேலும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.சுரேஷ், பா.ஜ.க எம்.எல்.ஏ. லட்சுமண் பவார் ஆகியோரும் தங்களது எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

 Hemant Patil
Hemant Patil ani

மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், எம்.பி.க்களும் எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்திருப்பது அம்மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிக்க: ’நவம்பர் 12.. ப்ளைட் ரெடி’ - கோலியைக் கலாய்த்த இங்கிலாந்து ரசிகர்களுக்கு இந்தியா பதிலடி!

மராட்டியத்தில் தொடரும் போராட்டங்கள்.. தீ வைப்புச் சம்பவங்கள்

ராஜினாமா தொடர்பாக பேசிய ஹிங்கோலி எம்.பி ஹேமந்த் பாட்டீல், "லோக்சபா சபாநாயகர் அலுவலகத்தில் இல்லாததால், எனது ராஜினாமா கடிதம் அலுவலக செயலரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. ராஜினாமாவுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

எம்எல்ஏ லட்சுமண பவார், ‘மராத்தா இடஒதுக்கீடு பிரச்னை பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. மராத்தா சமூகத்தினரின் கோரிக்கைக்கு எனது ஆதரவை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த காரணத்தை ஆதரிப்பதற்காக, எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்’ எனத் தெரிவித்தார்.

இதனால் இவ்விவகாரம் மராட்டிய மாநிலத்தில் சூடுபிடித்துள்ளது. ஒருபுறம் மராத்தா இடஒதுக்கீடு விவகாரத்தால் அம்மாநிலத்தில் பதற்றம் நிலவும் நிலையில், மறுபுறும் ஆளும் தரப்புக்கு எதிராக எம்பிக்களும், எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்திருப்பது பேசுபொருளாகி உள்ளது. இதற்கிடையே, இன்று மதியம் மும்பை-பெங்களூரு நெடுஞ்சாலையில் போராட்டக்காரர்கள் மறியலில் ஈடுபட்டதால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மராட்டிய கிராந்தி மோர்ச்சா தொழிலாளர்கள் சோலாப்பூரில் உள்ள ரயில் தண்டவாளத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் தண்டவாளத்தில் டயர்களை எரித்தும், காவிக் கொடிகளை ஏந்தியவாறும் போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களைப் போலீசார் கைது செய்துள்ள நிலையில் மேலும் பல இடங்களில் போராட்டம் நடைபெறுவதாகவும் ஆங்காங்கே தீவைப்பு சம்பவங்கள் நிகழ்வதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

prakash mla house
prakash mla houseani

முன்னதாக, பீட் மாவட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. பிரகாஷ் சோலங்கி வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துக் கொளுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பக்கா ப்ளான்! ஸ்டோக்ஸை மிரட்டிய ஷமி.. பந்துவீச்சு வரைபடத்தைப் பகிர்ந்த ஐசிசி! மிரண்டுபோன ரசிகர்கள்!

மராத்தா இடஒதுக்கீடு விவகாரம்: முதல்வர் பேட்டி!

இதுகுறித்து பதிலளித்த அம்மாநில துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், ’மராத்தா இடஒதுக்கீடு பிரச்னையை தீர்க்க மாநில அரசு சாதகமாகச் செயல்பட்டு வருகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, ’இடஒதுக்கீடு சீராய்வு மனு தொடர்பாக மாநில அரசுக்கு ஆலோசனை வழங்கும் ஒரு நிபுணர் குழு அமைக்கப்படும். அதை உச்சநீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்யும். நிபுணர் குழுவில் மூன்று ஓய்வுபெற்ற நீதிபதிகள் இருப்பர். கடந்த ஆட்சியில் மாநிலத்தில் மராத்தா இடஒதுக்கீட்டைத் தக்கவைக்கத் தவறியது ஏன் என்ற விவரங்களுக்கு நான் செல்ல விரும்பவில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரம் குறித்து முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, ’மராத்தா இடஒதுக்கீடு விவகாரத்தில் முதல்வர் ஷிண்டே தீவிரமாக இல்லை. மராத்தா சமூகம் அவர்களின் உரிமைகளைப் பெற வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டத்தொடர் நடத்தி மராத்தி இடஒதுக்கீடு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: சீனாவில் தொடர்ந்து காணாமல் போகும் அமைச்சர்கள், தலைமை அதிகாரிகள்.. பின்னணி இதுதான்!

மகாராஷ்டிராவில் நடப்பது என்ன? இடஒதுக்கீடு விவகாரம் சூடுபிடித்தது எப்போது?

மகாரஷ்டிராவில் சிவசேனாவில் இருந்து பிரிந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான தரப்பு, பாஜகவுடன் இணைந்து ஆட்சியில் உள்ளது. இந்த நிலையில், அம்மாநிலத்தில் மராத்தா இடஒதுக்கீடு விவகாரம் சூடுபிடித்துள்ளது. மராத்தா சமூகத்தினரை சமூக, கல்விரீதியாக பின்தங்கிய வகுப்பினராக அறிவித்து அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீதம் இடஒதுக்கீடு தர கடந்த 2018இல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், அது நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது.

மகாராஷ்டிரா போராட்டம்
மகாராஷ்டிரா போராட்டம்ட்விட்டர்

இதனையடுத்து, மகாராஷ்டிராவின் மராத்தா சமூகத்தினர் தங்களுக்கு இடஒதுக்கீடு கோரி பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வப்போது அமைதி ஊர்வலம், தொடர் உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களை அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர். குறிப்பாக, மராத்தா சமூகத்தைச் சேர்ந்த தலைவரான மனோஜ் ஜராங்கே கடந்த ஆகஸ்ட் மாதம் ஜல்னாவில் உள்ள அந்தர்வாலி சாரதி கிராமத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். இதையடுத்து, செப்டம்பர் 1ஆம் தேதி போலீசார் இங்கு நடத்திய தடியடி நடத்தியது பேசுபொருளாக மாறியது.

இதையும் படிக்க: ’இந்தியர்களுக்கு விசா தேவையில்லை’ - அதிரடியில் இறங்கிய தாய்லாந்து! ஏன் தெரியுமா?

உண்ணாவிரதத்தைத் தொடங்கிய மராத்தா சமூக தலைவர்!

இதைத் தொடர்ந்து, மராத்தா இடஒதுக்கீடு கோரிக்கை தீவிரமடைந்ததையொட்டி, அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மனோஜ் ஜராங்கேயை நேரில் சென்று சந்தித்து மராத்தா இடஒதுக்கீடு விவகாரத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து கடந்த மாதம் 14ஆம் தேதி ஜாரங்கே தனது உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக்கொண்டார். அதோடு இந்த மாதம் (அக்டோபர்) 24ஆம் தேதிக்குள் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றவேண்டும் என்று காலக்கெடு கொடுத்திருந்தார்.

மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவில் மீண்டும் வெடித்த மராத்தா இடஒதுக்கீடு போராட்டம்-நெருக்கடியில் ஷிண்டே அரசு! முழுவிபரம்
மனோஜ் ஜராங்கே
மனோஜ் ஜராங்கேட்விட்டர்

அந்தக் கெடு முடிந்த நிலையில், மீண்டும் மராத்தா பிரிவினர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். மேலும், மனோஜ் ஜராங்கே பாட்டீல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளார். வன்முறை மற்றும் எம்.எல்.ஏ., எம்.பிக்களின் ராஜினாமாக்களால் ஆளும் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: போலந்து தற்காப்பு கலை போட்டி: மகனின் முன்னாள் காதலிக்கு குத்துவிட்டு சாய்த்த அம்மா! வைரல் வீடியோ!

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com