போலந்து தற்காப்பு கலை போட்டி: மகனின் முன்னாள் காதலிக்கு குத்துவிட்டு சாய்த்த அம்மா! வைரல் வீடியோ!

போலந்து நாட்டில், தற்காப்புக் கலை போட்டி ஒன்றில் தனது மகனின் முன்னாள் காதலியுடன், தாய் மோதிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
poland mma fight
poland mma fighttwitter

போலந்து நாட்டின் இணையதள பிரபலங்களில் டேனியல் ஸ்வியர்சின்ஸ்கியும் (Daniel Zwierzynski) ஒருவர். இவருடைய முன்னாள் காதலி நிகோலா அலோகி. இவருக்கும் டேனியலுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்துவிட்டனர். இந்தச் சூழலில் தனது மகனை காதலித்து ஏமாற்றியதால் நிகிதா மீது டேனியலின் தாய் கோசியா கடும் கோபத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் MMA எனப்படும் தற்காப்புக் கலையில் தன்னுடன் மோதுமாறு நிகோலாவை கோசியா கேட்டுக் கொண்டுள்ளார். அதற்கு நிகிதாவும் ஒப்புக்கொண்டதால், அந்தப் போட்டியை MMA அமைப்பு நடத்தியது.

இதையும் படிக்க: சீனாவில் தொடர்ந்து காணாமல் போகும் அமைச்சர்கள், தலைமை அதிகாரிகள்.. பின்னணி இதுதான்!

poland mma fight
poland mma fight

கடந்த அக்டோபர் 28ஆம் தேதி நடைபெற்ற இப்போட்டியில் 50 வயதான கோசியாவும், 19 வயதான நிகோலாவும் மோதினர். 50 வயதான கோசியாவை எளிதாக வீழ்த்திவிடலாம் என நினைத்த நிகோலாவுக்கு கடைசிவரை ஏமாற்றமே மிஞ்சியது. அவருக்கு மட்டுமல்ல, அங்கிருந்த ரசிகர்களுக்கும், ஏன் இந்த வயதில் தேவையில்லாத வேலை என கோசியாவையே ரசிகர்கள் வறுத்தெடுத்தனர்.

மேலும், இந்தப் போட்டியில் நிகோலாவா வெற்றிபெறுவார் என நம்பினர். ஆனால், இவற்றை எல்லாம் தவிடுபொடியாக்கினார், கோசியா. இறுதிவரை கடுமையான குத்துக்களைப் பறக்கவிட்டு, நிகோலாவை சாய்த்தார், கோசியா. இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. தவிர, இந்த வீடியோவைப் பார்க்கும் பலரும் கோசியாவைப் பாராட்டி வருவதுடன், கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: ’இந்தியர்களுக்கு விசா தேவையில்லை’ - அதிரடியில் இறங்கிய தாய்லாந்து! ஏன் தெரியுமா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com