பக்கா ப்ளான்! ஸ்டோக்ஸை மிரட்டிய ஷமி.. பந்துவீச்சு வரைபடத்தைப் பகிர்ந்த ஐசிசி! மிரண்டுபோன ரசிகர்கள்!

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் முகம்மது ஷமி வீசிய பந்துகளின் வரைபடத்தை ஐசிசி பகிர்ந்துள்ளது.
பென் ஸ்டோக்ஸ், ஷமி
பென் ஸ்டோக்ஸ், ஷமிட்விட்டர்

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வரும் ஆடவர் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா, அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது. புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்க 10 அணிகளும் போட்டிபோட்டு வருகின்றன.

அந்த வகையில், கடந்த அக்டோபர் 29ஆம் தேதி லக்னோவில் நடைபெற்ற 29வது லீக் போட்டியில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்தும், முன்னாள் சாம்பியன் இந்தியாவும் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், தொடர்ந்து வீறுநடையும் போட்டு வருகிறது. மேலும், புள்ளிப் பட்டியலிலும் முதலிடத்துக்கு முன்னேறியது.

பென் ஸ்டோக்ஸ், ஷமி
100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.. வீறுநடை போடும் இந்திய அணி.. பரிதாப நிலையில் இங்கிலாந்து!

இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கியப் பங்காற்றியவர் வேகப்பந்து வீச்சாளர் முகம்மது ஷமி. அவர் 7 ஓவர்கள் வீசி, 2 மெய்டன்களுடன் 4 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தார். அதில் முக்கிய வீரர்களான ஜானி பெயர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, அடில் ரஷீத் ஆகியோரின் விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். இதில் மொயின் அலி விக்கெட்டைத் தவிர, மற்றவர்களின் விக்கெட்களை போல்டு முறையில் வீழ்த்தியிருந்தார். அதிலும் குறிப்பாக, இங்கிலாந்தின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை, தன்னுடைய பந்துவீச்சின் மூலம் மிரட்டினார்.

இந்த பென் ஸ்டோக்ஸ்தான், 2019 உலகக்கோப்பையை இங்கிலாந்து அணி வெல்வதற்கு முக்கியப் பங்காற்றியவர். ஆனால் அவரையே இந்தப் போட்டியில், தன்னுடைய பந்தை எதிர்கொள்ள முடியாத அளவுக்கு நிலைகுலையச் செய்தார் ஷமி. தொடர்ந்து 9 பந்துகளை ஆப்சைடில் வீசி மிரட்டினார் ஷமி. இதனால் ஒரு முடிவுக்கு வந்த பென் ஸ்டோக்ஸ், மூன்று ஸ்டெம்புகள் தெரியும்படி, ஷமியின் 10வது பந்தை எதிர்கொண்டார். ஆனால், அந்தப் பந்து அவர் நினைத்தது மாதிரி இல்லை. ஷமி வீசிய அந்தப் பந்து நேராக ஸ்டெம்புக்குச் சென்று அவரது விக்கெட்டையே பறித்தது. இதனால், பென் ஸ்டோக்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்.

ஷமி, பென் ஸ்டோக்ஸுக்கு வீசிய இந்த 10 பந்துகளின் கிராப் வரைபடத்தைத்தான் ஐசிசி இணையத்தில் பகிர்ந்துள்ளது. இதை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

ஷமி இதுவரை 13 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடி 40 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி வருகிறது. இன்னும் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினால் இந்திய வீரர்களில் அவர் முதலிடம் பிடிப்பார். இந்திய அணி நிச்சயம் அரையிறுதிக்கு செல்லும். அரையிறுதிப் போட்டியையும் சேர்த்து இந்திய அணி இன்னும் 4 போட்டிகளில் நிச்சயம் விளையாடும். தொடர்ச்சியாக ஷமிக்கு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அவர் நிறைய சாதனைகள் படைப்பார்.

இதையும் படிக்க: அன்று உணவு டெலிவரி பாய்.. இன்று உலகக்கோப்பையில் ஆட்டநாயகன்! ரசிகர்கள் வியக்கும் நெதர்லாந்து வீரர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com