’இந்தியர்களுக்கு விசா தேவையில்லை’ - அதிரடியில் இறங்கிய தாய்லாந்து! ஏன் தெரியுமா?

’தாய்லாந்து செல்லும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை’ என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
thailand, india
thailand, indiatwitter

வெளிநாடுகளில் சுற்றுலாப் பயணிகளால் பெருகும் வருவாய்!

கொரோனா பொது முடக்கத்திற்குப் பிறகு உலக நாடுகள் அனைத்தும் கடுமையான பொருளாதாரச் சரிவைச் சந்தித்தன. தற்போது அதிலிருந்து கொஞ்சகொஞ்சமாக மீண்டு வருகின்றன. குறிப்பாக, கொரோனாவுக்கு பின் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் மக்கள் வெளிநாடுகளில் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்தது. இதன்காரணமாக அந்நாடுகளில் சுற்றுலா மூலம் வரும் வருவாய் ஆனது பெரும் சரிவைச் சந்தித்தது.

tourists
touristsfreepik

இதனை கட்டுப்படுத்த அந்தந்த நாடுகள் சுற்றுலாப் பயணிகளுக்கென்று பல சலுகைகளை அறிவித்து வருகிறது. ஒரு நாட்டின் குடிமக்கள் மற்றொரு நாட்டுக்குச் செல்வதற்கு விசா தேவைப்படுகிறது. சில நாடுகளுக்குச் செல்ல எளிமையான முறையில் விசா பெற்றுவிடலாம். அதேவேளையில் கடுமையான விசா நடைமுறைகளைப் பின்பற்றும் சில நாடுகளும் உள்ளன.

இதையும் படிக்க: பக்கா ப்ளான்! ஸ்டோக்ஸை மிரட்டிய ஷமி.. பந்துவீச்சு வரைபடத்தைப் பகிர்ந்த ஐசிசி! மிரண்டுபோன ரசிகர்கள்!

இலவச விசா சேவையை அறிவித்த இலங்கை!

அந்த வகையில், சில ஆண்டுகளாகவே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் அண்டை நாடான இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சகம், கடந்த வாரம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய 7 நாடுகளில் இருந்து இலங்கை வரும் மக்கள் கட்டணமில்லா விசா சேவையை பெறலாம் என தெரிவிக்கப்பட்டது. மேலும் இது 2024 மார்ச் 31ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. இலங்கை அரசு தனது நாட்டின் பெருமளவு வருவாயை சுற்றுலாத் துறையை நம்பியே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

thailand tourist place
thailand tourist placetwitter

சிறப்பு சலுகையை அறிவித்த தாய்லாந்து டூரிஸம்

இதேபோல் தற்போது தாய்லாந்து நாடும் கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டின் சுற்றுலாத்துறை (Thai Tourism) வெளியிட்டுள்ள அறிவிப்பில், ’நவம்பர் 10, 2023 முதல் மே 10, 2024 வரை ஆறு மாத காலத்திற்கு தாய்லாந்து வரும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை. இந்த சலுகையை பயன்படுத்தி தாய்லாந்து நாட்டில் 30 நாட்கள் வரை தங்கிக் கொள்ளலாம்’ என அறிவித்துள்ளது.

இதையும் படிக்க: ’நவம்பர் 12.. ப்ளைட் ரெடி’ - கோலியைக் கலாய்த்த இங்கிலாந்து ரசிகர்களுக்கு இந்தியா பதிலடி!

தாய்லாந்துக்கு சுற்றுலா சென்ற 12 லட்சம் இந்தியர்கள்

தாய்லாந்து நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருப்பது சுற்றுலாப் பயணிகள். இந்தாண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் மட்டும் 2.2 கோடி வெளிநாட்டவர்கள் தாய்லாந்துக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளனர். இதன்மூலம், தாய்லாந்துக்கு 2,567 கோடி டாலர் வருமானமாக கிடைத்துள்ளது. மேலும், தாய்லாந்துக்கு பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பட்டியலில் மலேசியா, சீனா மற்றும் தென் கொரியாவுக்கு அடுத்த இடத்தை இந்தியா பிடித்துள்ளது. இந்தாண்டு மட்டும் 12 லட்சம் இந்தியர்கள் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

thailand tourist place
thailand tourist placetwitter

இந்த நிலையில், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க, இந்தியாவிலிருந்து சுற்றுலா வரும் பயணிகளுக்கு விசா தேவையில்லை என்று தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது. இந்தியாவுடன் தைவான் நாட்டினருக்கும் விசாவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் சீனா நாட்டினர் விசா இல்லாமல் பயணம் மேற்கொள்ள அனுமதித்து தாய்லாந்து அரசு உத்தரவிட்டிருந்தது. நடப்பாண்டு தாய்லாந்து அரசு 28 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை தங்கள் நாட்டுக்கு வரவழைக்க வேண்டும் என்ற இலக்கில் இத்தகைய சிறப்பு அறிவிப்புகளை அறிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: சீனாவில் தொடர்ந்து காணாமல் போகும் அமைச்சர்கள், தலைமை அதிகாரிகள்.. பின்னணி இதுதான்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com