’நவம்பர் 12.. ப்ளைட் ரெடி’ - கோலியைக் கலாய்த்த இங்கிலாந்து ரசிகர்களுக்கு இந்தியா பதிலடி!

டக் அவுட் முறையில் வீழ்ந்த விராட் கோலியை, இங்கிலாந்து ரசிகர்கள் கொண்டாடிய நிலையில், அதற்கு இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
விராட் கோலி, இங்கி. அணி
விராட் கோலி, இங்கி. அணிட்விட்டர்

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் ஆடவர் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா, விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்தசுற்றுக்கு முன்னேறுவதற்குப் தொடரில் இடம்பிடித்திருக்கும் 10 அணிகளும் போட்டிபோட்டு வருகின்றன. அதேநேரத்தில், இந்த தொடரில் பல சுவாரஸ்யமான சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

virat kohli
virat kohli

இந்த நிலையில், கடந்த அக்டோபர் 29ஆம் தேதி நடைபெற்ற 29வது லீக் போட்டியில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்தும் முன்னாள் சாம்பியனான இந்தியாவும் பலப்பரீட்சை நடத்தின. லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தைத் தோற்கடித்தது. இந்தப் போட்டியில் நட்சத்திர வீரரும், எண்ணற்ற சாதனைகளுக்குச் சொந்தக்காரருமான விராட் கோலி, 9 பந்துகளைச் சந்தித்து டக் அவுட் முறையில் வீழ்ந்தார். அவர் வில்லி பந்தில் ஸ்டோக்ஸிடம் கேச் கொடுத்து வெளியேறினார்.

இதையும் படிக்க: அன்று உணவு டெலிவரி பாய்.. இன்று உலகக்கோப்பையில் ஆட்டநாயகன்! ரசிகர்கள் வியக்கும் நெதர்லாந்து வீரர்!

இதனால் இந்திய ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். ஆனால், அவரது வெளியேற்றத்தை இங்கிலாந்து ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். அதிலும், அவர் டக் அவுட் முறையில் வீழ்ந்ததை சற்று அதிகமாகவே விமர்சித்தனர். அவரது புகைப்படத்தை வாத்துடன் இணைத்து இணையத்தில் வைரலாக்கினர்.

இதற்கு அடுத்த சில நிமிடங்களிலேயே இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுக்கத் தொடங்கினர். அதிலும் இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்த்திவ் படேல் பயங்கரமாகவே விமர்சித்திருந்தார். அவர் இங்கிலாந்து ரசிகர்கள் பதிவிட்ட படத்தை டேக் செய்து, ’நவம்பர் 12... லண்டனை அடைவதற்கான விரைவான வழியை ஏர் இந்தியா நிறுவனம் பார்த்துக்கொள்ளும்’ எனக் கடுமையாகப் பதிவிட்டிருந்தார். இதை இந்திய ரசிகர்கள் கொண்டாடியதுடன், அதை வைரலாக்கியும் வருகின்றனர்.

அதாவது, நவம்பர் 12ஆம் தேதியுடன் உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் அனைத்தும் நிறைவடைகின்றன. அன்றைய நாள் இந்திய அணி, நெதர்லாந்தைச் சந்திக்க இருக்கிறது. ஏற்கெனவே இந்திய அணி, தாம் சந்தித்த 6 போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பதுடன், கிட்டத்தட்ட அரையிறுதியில் விளையாடுவதற்கான வாய்ப்பிலும் உள்ளது. ஆனால், நடப்புச் சாம்பியனான இங்கிலாந்து தொடர்ந்து அடி வாங்கி வருகிறது.

இதையும் படிக்க: தொடரும் மாரடைப்பு மரணங்கள்: கொரோனா தொற்றால் பாதித்தவர்களுக்கு மத்திய அமைச்சர் கொடுத்த அட்வைஸ்!

அதாவது தாம் சந்தித்த 6 அணிகளில் வங்கதேசத்திடம் மட்டும் வெற்றிபெற்றுள்ளது. இதர அணிகளிடம் தோல்வி கண்டுள்ளதால், புள்ளிப் பட்டியலிலும் கடைசி இடத்தில் உள்ளது. இன்னும் சொல்லப்போனால் கத்துக்குட்டி அணிகளான ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து அணிகள் பெற்ற வெற்றிப் புள்ளிகளின் எண்ணிக்கையைவிடப் பின்னுக்கு உள்ளது. ஆகையால் இனி, இங்கிலாந்துக்கு அரையிறுதி வாய்ப்பு என்பது மிகமிகக் கேள்விக்குறியாகவே உள்ளது.

இனிவரும் போட்டிகளில் அவ்வணி வெற்றிபெற்றால்கூட, இங்கிலாந்து அணி அரையிறுதியில் விளையாடுவதற்குச் சாத்தியக்கூறுகள் இல்லை என்பதால், அன்றைய தினமே இங்கிலாந்தின் அரையிறுதி கனவு முடிவுக்கு வந்துவிடும். இதைவைத்துத்தான் பார்த்திவ் படேல், இங்கிலாந்து அணி இப்படி விமர்சித்துள்ளார்.

இதையும் படிக்க: பக்கா ப்ளான்! ஸ்டோக்ஸை மிரட்டிய ஷமி.. பந்துவீச்சு வரைபடத்தைப் பகிர்ந்த ஐசிசி! மிரண்டுபோன ரசிகர்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com