அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கிய பாஜக பெண் வேட்பாளர்கள்.. உறுதியான தோல்வி முகம்!

தேர்தல் பரப்புரையின்போது, சர்ச்சையில் சிக்கிய பாஜக பெண் வேட்பாளர்களும் தோல்வி முகத்தைச் சந்தித்துள்ளனர்.
மாதவி லதா, நவ்நீத் கவுர்
மாதவி லதா, நவ்நீத் கவுர்எக்ஸ் தளம்

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற 18வது மக்களவைத் தேர்தல் திருவிழாவின் வாக்குப்பதிவு, இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. ’350 இடங்களுக்கு மேல் வெற்றிபெற்று, மூன்றாவது முறையாக ஆட்சியமைப்போம்’ என கனவுக் கோட்டை கட்டிய பாஜகவுக்கே, வாக்கு எண்ணிக்கை முடிவுகளும் முன்னிலை நிலவரங்களும் சற்றே பின்னடைவை ஏற்படுத்தி வருகின்றன. தற்போதைய நிலவரப்படி, பாஜக கூட்டணி 291 இடங்களிலும், காங்கிரஸ் 234 இடங்களிலும் முன்னிலையில் இருந்துவருகின்றன.

இதனால், ஆளும் பாஜக அரசுக்கே தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி வருகிறது. மேலும், அக்கட்சியே ஆட்சியமைக்க தனது கூட்டணிக் கட்சிகளை நம்பியுள்ளது. அதேநேரத்தில், காங்கிரஸ் கூட்டணியும் பாஜகவுக்கு நிகராக போட்டிபோட்டு முன்னிலையில் இருந்துவருகிறது. மேலும் அக்கட்சி கூட்டணிக்கும் ஆட்சி அமைக்க வாய்ப்பிருப்பதால் அதுவும் எதிர்க் கூட்டணியில் இருக்கும் கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: ஜம்மு - காஷ்மீர் | சிறையில் இருந்தபடியே Ex முதல்வரை வீழ்த்திய சுயேட்சை வேட்பாளர்... யார் இந்த ரஷீத்?

மாதவி லதா, நவ்நீத் கவுர்
ஆந்திரா | படுதோல்வி அடையும் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்.. மாஸாக ஆட்சியை பிடிக்கும் தெலுங்கு தேசம்!

இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின்போது சர்ச்சைக்குரிய வகையில் செயல்பட்ட பாஜக வேட்பாளர்களும் தோல்வி முகத்தைச் சந்திருப்பது உறுதியாகி உள்ளது. அந்த வகையில், கடந்த தேர்தலில், மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி தனி தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற கருணாஸ் பட நடிகை நவ்நீத் ராணா கவுர், சமீபத்தில் பாஜகவில் இணைந்ததைத் தொடர்ந்து, அதே தொகுதியில் நவ்நீத்துக்கு அக்கட்சியின் சார்பில் சீட் வழங்கப்பட்டது.

”மக்களவைத் தேர்தலை ஒரு கிராம பஞ்சாயத்து தேர்தல்போல் நாம் எதிர்கொள்ள வேண்டும். மோடி அலை இருப்பதாக மாயையில் இருக்க வேண்டாம்" எனப் பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதைவைத்து எதிர்க்கட்சிகள் அவருக்கு எதிராக வாக்கு வேட்டையை நடத்தின. இந்த நிலையில், இன்று நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் அவர் தோல்வி முகத்தைச் சந்தித்துள்ளார். தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் வேட்பாளர் பல்வந்த் பசவந்த் வான்கடேவிடம் அவர், 19,456 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கி உள்ளார்.

இதையும் படிக்க:நாட்டையே திரும்பி பார்க்க வைத்த உ.பி தேர்தல் முடிவுகள்; கோட்டைவிட்ட பாஜக! உற்சாகத்தில் காங். கூட்டணி

மாதவி லதா, நவ்நீத் கவுர்
’மோடி அலை இல்லை’.. பாஜக வேட்பாளரின் பேச்சை வரவேற்ற எதிர்க்கட்சிகள்.. பதிலளித்த கருணாஸ் பட நடிகை!

அதுபோல், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் தொகுதியில் பாஜகவின் சார்பில் பரதநாட்டியக் கலைஞரான மாதவி லதா நிறுத்தப்பட்டார். தற்போது அவரும், தோல்வி முகத்தைக் கண்டுள்ளார். தற்போதைய நிலவரப்படி அசாதுதீன் ஒவைசியிடம் 3,38,087 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளார். இவர், தேர்தல் பரப்புரையின்போது அங்கிருந்த மசூதியை நோக்கி வில் அம்புகளை ஏவுவதுபோல் செய்கை காட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதுடன் தேர்தல் ஆணையத்தில் புகாரும் அளிக்கப்பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. சர்ச்சைக்குரிய வகையில் ஈடுபட்ட இரண்டு பாஜக வேட்பாளர்களும் தோல்வி முகத்தைச் சந்தித்திருப்பது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வருகிறது.

இதையும் படிக்க: பாஜக-க்கு குடைச்சல் கொடுக்கும் I.N.D.I.A கூட்டணி... கிங் மேக்கராக உருவான சந்திரபாபு நாயுடு! எப்படி?

மாதவி லதா, நவ்நீத் கவுர்
மசூதியை நோக்கி அம்பு விடுவதுபோல் செய்கை.. சர்ச்சையில் சிக்கிய பாஜக வேட்பாளர்.. யார் இந்த மாதவி லதா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com