மசூதியை நோக்கி அம்பு விடுவதுபோல் செய்கை.. சர்ச்சையில் சிக்கிய பாஜக வேட்பாளர்.. யார் இந்த மாதவி லதா?

ஹைதராபாத் தொகுதி பாஜக வேட்பாளரான மாதவி லதா, ராமநவமி நிகழ்ச்சியின்போது, அங்கிருந்த மசூதியை நோக்கி வில் அம்புகளை ஏவுவதுபோல் செய்கை காட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
மாதவி லதா
மாதவி லதாட்விட்டர்

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற இருக்கும் ஜனநாயக திருவிழாவின் முதற்கட்ட வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் தொடங்க உள்ளது. இதில் தெலங்கானாவில் அடுத்த மாதம் 13ஆம் தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தெலங்கானாவில் 17 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதன் தலைநகராக அறியப்படும் ஹைதராபாத்தில், பாஜகவின் சார்பில் மாதவி லதா நிறுத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில், தெலங்கானாவில் நேற்று ராமநவமி நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின்போது, கலந்துகொண்ட மாதவி லதா, அங்கிருந்த மசூதியை நோக்கி வில் அம்புகளை ஏவுவதுபோல் செய்கை காட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. பாஜக வேட்பாளர் மாதவி லதாவின் இந்தச் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக மாதவி லதா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கக்கோரி பலரும் வலியுறுத்தி வருகின்றனர். ஏற்கெனவே, மதரீதியாகவோ, தனிப்பட்ட முறையிலோ விமர்சித்து பரப்புரையில் ஈடுபடக்கூடாது என தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ’தாய்ப்பால் வேண்டாம்; சூரிய ஒளி மட்டும் போதும்’.. மனைவியை மிரட்டி 1 வயதுக் குழந்தையை கொன்ற தந்தை!

மாதவி லதா
சாதிச் சான்றிதழ் வழக்கு: கருணாஸ் பட நடிகைக்கு சாதகமாக அமைந்த தீர்ப்பு.. உற்சாகத்தில் பாஜக வேட்பாளர்!

1984-ஆம் ஆண்டுமுதல், கிட்டத்தட்ட 40 வருடங்களாக, ஹைதராபாத் தொகுதி, ஒவைசி குடும்பங்களின் கோட்டையாக உள்ளது. அங்கு, ஏஐஎம்ஐஎம் கட்சியே வெற்றிபெற்று வருகிறது. சுல்தான் சலாவுதீன் ஒவைசிக்குப் பிறகு, 2004 முதல் அவரது மகன் அசாதுதீன் ஒவைசி வெற்றிபெற்று வருகிறார். நான்கு முறை அத்தொகுதியின் அசைக்க முடியாத எம்பியாக வலம் வரும் அசாதுதீன் ஒவைசி, கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜகவின் பகவந்த் ராவை 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த முறை அவருக்குப் போட்டியாக அந்தத் தொகுதியில் பாஜக சார்பில் மாதவி லதா நிறுத்தப்பட்டுள்ளார். அவர், நிறுத்தப்பட்டது முதலே இஸ்லாம் மக்களுக்கு எதிராகவே கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார் எனக் கூறப்படுகிறது.

யார் இந்த மாதவி லதா?

கலாசார ஆர்வலரான கொம்பெல்லா மாதவி லதா, ஹைதராபாத்தில் உள்ள விரிஞ்சி மருத்துவமனையின் தலைவராக உள்ளார். அவர், ஒரு பரதநாட்டிய நடனக் கலைஞரும்கூட. அரசியல் அறிவியல் படித்துள்ளார். அவருடைய கணவர் விஸ்வநாத், விரிஞ்சி மருத்துவமனையின் நிறுவனராக உள்ளார். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்துமதப் பேச்சாளராக அறியப்படும் மாதவி லதா, பல தொண்டு நிறுவனங்களுக்கு உதவி செய்து வருகிறார். 49 வயதான மாலதி லதா, ஹைதராபாத் தொகுதியில் பாஜகவால் நிறுத்தப்பட்ட முதல் பெண் வேட்பாளர் ஆவார். முத்தலாக்கிற்கு எதிராக பாஜகவின் பிரசார முகமாக அறியப்பட்டவர்தான் இந்த கொம்பெல்லா மாதவி லதா.

இதையும் படிக்க: இனி டவர் இன்றி பேசலாம்.. செயற்கைக்கோள் ஆய்வில் வெற்றி.. தொலைத்தொடர்பில் புரட்சியை ஏற்படுத்திய சீனா!

மாதவி லதா
’மோடி அலை இல்லை’.. பாஜக வேட்பாளரின் பேச்சை வரவேற்ற எதிர்க்கட்சிகள்.. பதிலளித்த கருணாஸ் பட நடிகை!

எழுந்த கண்டனங்கள்.. மாதவி லதா கொடுத்த விளக்கம்!

மசூதியை நோக்கி வில் அம்பை எய்வது போல செய்கை செய்த ஐதராபாத் பாஜக வேட்பாளர் மாதவி லதாவுக்கு நேற்று முதல் கடும் கண்டனங்கள் குவிந்து வந்தன. இந்தநிலையில், ``அது முழுமையான காணொலி அல்ல, ஒருவேளை அந்த வீடியோவால் யாருடைய உணர்வுகளாவது புண்பட்டிருந்தால் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்’’ என தனது எக்ஸ் தளத்தில் பதிலளித்திருக்கிறார் மாதவி லதா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com