தினமும் இவ்வளவு தூரம் நடந்தால் முதுகு வலி குறையுமாம்.. என்ன சொல்லுகிறார்கள் ஆராய்ச்சியாளார்கள்?
முதுகு வலி என்பது இப்போது உள்ள டிஜிட்டல் உலகில் அதிகமாகிவிட்டது.. இதற்கு காரணம் எப்போதும் உட்கார்ந்த நிலையிலேயே வேலை பார்ப்பது, நீண்ட தூரம் வாகனத்தை ஓட்டிச் செல்வது, மாறி மாறி ஷிஃப்டில் வேலை பார்ப்பதுதான். இதை சரிச்செய்ய ஜமா (jama) நெட்வொர்க் ஓபனில் சமீபத்தில் வெளியிடப்பட்ட மக்கள் தொகை அடிப்படையிலான ஆய்வு, முதுகு வலி சம்பந்தமாகவும் செய்யப்பட்டது.
அதில் ஒருவருக்கு நீண்ட நாளாக முதுகு வலி இருப்பின், அவர் தொடர்ந்து நடைப்பயிற்சியை மேற்கொண்டால் அதனை சரிச்செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டது. இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், ”தினமும் 78 நிமிடங்களுக்கு மேல் நடப்பவர்களுக்கு நீண்டகால முதுகு வலி வருவதற்கான வாய்ப்பு கணிசமாகக் குறைந்துள்ளது. இந்த ஆய்வு நார்வேயில் 20 வயது உள்ள 11,000 க்கும் மேற்பட்டவர்களை வைத்து சோதிக்கப்பட்டது.. இதில் ஒவ்வொருவரும் தங்கள் வலது தொடை மற்றும் கீழ் முதுகில் ஒரு ஆசியிலேரோமீட்டரை (accelerometer ) அணிந்திருந்தனர், இது நாள் முழுவதும் அவர்களின் மொத்த நடை நேரம் மற்றும் வேகத்தைக் கண்காணித்து தந்தது” என்றனர் ஆராய்ச்சியாளர்கள் ..
மேலும், நாள்பட்ட முதுகுவலி என்பது மூன்று மாதங்கள் அல்லது அதற்கு மேல் நீடிக்கும் கீழ் முதுகில் ஏற்படும் வலியாகும்.. ஒரு நாளைக்கு 78 முதல் 100 நிமிடங்கள் வரை நடந்தவர்களுக்கு, குறைந்த நேரம் நடந்தவர்களை விட நாள்பட்ட முதுகுவலி ஏற்படும் அபாயம் 13 சதவீதம் குறைவாக இருப்பதாக இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
"ஒரு நாளைக்கு 78 நிமிடங்களுக்கும் குறைவாக நடப்பதை விட, 100 நிமிடங்களுக்கு மேல் நடப்பது நாள்பட்ட முதுகுவலி வருவதற்கான வாய்ப்பு 23 சதவீதம் குறைவாகதான் இருக்கிறது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.. " வேகமாக நடப்பதைக்காட்டிலும் அதிக நேரம் நடப்பதே சிறந்ததாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தினர்.
"நாள்பட்ட கீழ் பகுதியில் ஏற்படும் முதுகு வலியின் அபாயத்தைக் குறைப்பதில் சராசரியாஜ நாம் நடக்கும் நடைப்பயிற்சியை விட தினமும் நடக்கும் தூரத்தின் அளவும் மிகவும் முக்கியமானது என்பதை எங்கள் கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன எனாறு ஆராய்ச்சியாளார்கள் கூறுகின்றனர்..
தினசரி நடைப்பயிற்சியை ஊக்குவிக்கு வகையில் சமூக அளவிலான உத்திகளை இந்த ஆய்வு மேலும் பரிந்துரைக்கிறது என்று அவர்கள் தெரிவித்தனர்..
1. அதில் நடைப்பயிற்சியை ஊக்குவிக்கும் சில கொள்கைகள் மற்றும் பொது சுகாதார உத்திகள் நாள்பட்ட கீழ் முதுகு வலி ஏற்படுவதைக் குறைக்க உதவும் என்று இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன.
2. இன்றைய காலக்கட்டத்தில் நாம் அனைவரும் உடகார்ந்துக் கொண்டுதான் அதிக நேரம் வேலை பார்க்கிறோம்.. இதில் குறிப்பாக அலுவலக ஊழியர்கள் மேசைகளில் அல்லது திரைகளுக்கு முன்னால் நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டுதான் பணி புரிகின்றனர்.. இது முதுகு வலியை ஏற்படுத்தும். அத்துடன் குளுட்டியஸ் மீடியஸ் டெண்டினோசிஸ் அல்லது "டெட் பட் சிண்ட்ரோம்" என்று அழைக்கப்படும் ஒரு நிலை, நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் ஏற்படுகிறது.
3. பலவீனமான குளுட்டியல் தசைகளுக்கு வழிவகுக்கிறது, செயலற்று அமர்ந்து இருக்கும்போது, அது கீழ் முதுகு மற்றும் முழங்கால்களில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்த சில விஷயங்களை வைத்து கடந்த 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், உலகளாவிய அளவில் பெண்கள், கிராமப்புற குடியிருப்பாளர்கள் மற்றும் தொடக்கநிலை தொழிலாளர்கள் இந்த வலியினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இந்தியாவில் இது குறைவாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்..