வல்வோடினியா என்றால் என்ன? அதன் அறிகுறிகள் மற்றும் சிகிச்சைக்கான வழிமுறைகள் இதோ..!
பொதுவாகவே பெண்களுக்கு அவர்களது பிறப்புறுப்பில் சில பிரச்சனைகள் இருக்கும். வெயில் காலத்தில் வியர்வை காராணமாக அந்தரங்க பகுதிகளில் அரிப்பு ஏற்படும் . குளிர்காலத்தில் இருக்கமான உடைகளை அணிவதால் பிறப்புறுப்பு பகுதியில் எரிச்சல் ஏற்படும். அதுமட்டுமல்லாமல் மாதவிடாய் காலங்களிலும் சுகாதார பிரச்சனைகள் வரக்கூடும்.. இப்படியாக பல பிரச்சனைகளை தினமும் அவர்கள் சந்தித்தாலும், அதை வெளியே சொல்லுவதில்லை. இதில் மிக முக்கியமான பிரச்சனைதான் வல்வோடினியா.. வல்வோடினியா என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன? அதற்கு எப்படி சிகிச்சை செய்யலாம்? என்று இந்த பதிவில் தெரிந்துக்க் கொள்ளலாம் வாங்க..
வல்வோடினியா என்றால் என்ன?
வல்வோடினியா என்பது உங்கள் பிறப்பபை சுற்றி திடீரென ஏற்படும் வலி ஆகும்.. பெண்களின் பிறப்புறுப்பில் எரியும் உணர்வு மற்றும் அசௌகரியம், துடிப்பது போன்ற வலி ஏற்பட்டால் அது வல்வோடினியாவின் அறிகுறியாகும். இதற்கு வீட்டிலேயே சிகிச்சையளிக்க முடியாது. ஆனால் சில உடற்பயிற்சிகள் செய்தால் சரி செய்ய முடியும் என சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பெண்களுக்கு பிறப்புறுப்பில் ஏற்படக்கூடிய அசௌகரியங்கள் அனைத்தும் சமாளிக்கக்கூடியவை என்றாலும், அதிகமான வலிதான் அந்த நோயின் தீவிரத்தைக் குறிக்கிறது. அதனால் சிறிதாக வலி ஏற்படும்போதே மருத்துவரை அணுகுவது நல்லது.. உங்கள் யோனி அல்லது பிறப்புறுப்பில் தொடர்ந்து வலியை அனுபவித்து வந்தால், அது வல்வோடினியாவாக இருக்கலாம். இது குறித்து ஹர்ஷிந்தகி இணையதளத்திற்கு பேட்டியளித்த பி.எல்.கே மேக்ஸ் மருத்துவமனையின் மகப்பேறியல் மற்றும் எமர்ஜன்சி கர்ப்ப மையத்தின் இயக்குநனரும் தலைவருமான டாக்டர் நிதி கேராவிடம் சில கேள்விகளை கேட்டோம்.. அதற்கு அவர் கூறியதாவது..,
பெண்களுக்கு பிறப்புறுப்பை சுற்றியுள்ள அசௌகரியத்துடன் கூடிய நாள்பட்ட மற்றும் தொடர்ச்சியான வலி (வல்வா) வல்வோடினியா ஆகும். சில பெண்களில், இது கடுமையான வலியாக இருக்கலாம். சிலருக்கு இது எரிச்சல் மற்றும் எரியும் உணர்வை உண்டாக்கலாம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர் நீண்ட நேரம் உட்காரவோ அல்லது உடலுறவு கொள்ளவோ முடியாது. இருப்பினும், பல பெண்களுக்கு இந்தப் பிரச்சினையை எப்படி வெளியே சொல்வது என தெரியாமல் வெட்கப்பட்டு கடைசி வரையில் சொல்லாமலேயே விட்டு விடுகின்றனர் என்று டாக்டர் கேரா கூறினார்.
வல்வோடினியாவின் அறிகுறிகள் என்ன? என்ற கேள்விக்கு பதிலளித்தவர், பிறப்புறுப்பு பகுதி பொதுவாக சாதாரணமாகதான் இருக்கும். ஆனால் நோயாளி நாள்பட்ட வலியை அனுபவிப்பார். அதைத் தொடர்ந்து அந்தப் பகுதியைச் சுற்றி தேள் கொட்டுதல் போன்ற உணர்வு, எரியும் உணர்வு, வலி மற்றும் துடிப்பு ஆகியவை ஏற்படலாம். இந்த அறிகுறிகள் ஆரம்பத்திலேயே தோன்றும், ஆனால் அப்போது வலி குறைவாகவே இருக்கும்.. இருப்பினும், நோயாளி நீண்ட நேரம் அமர்ந்திருந்தால், வலி மிகவும் மோசமடையக்கூடும். உடலுறவும் மேற்கொள்வது கடினம் என்றார் டாக்டர் கேரா..
வல்வோடினியாவை சரி செய்ய முடியுமா? என்ற கேள்விக்கு பதிலளித்தவர், ”இது எல்லா வயது பெண்களுக்கும் ஏற்படலாம் என்றும் அது தானாகவே குணமடையாது என்றும் இந்த நோயால் பாதிக்கப்பட்ட உடனேயே மருத்துவரை அணுக வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும் இது போன்ற நிலையில் உள்ள ஒரு பெண் மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்ள முயற்சித்தாலோ அல்லது டம்பான்களைப் பயன்படுத்துவதாலோ வலி மோசமாகும்” என்றார்..
வல்வோடினியா ஏற்பட முக்கிய காரணங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், நரம்பு பாதிப்பு. பிரசவம், அறுவை சிகிச்சை, மற்றும் நரம்பு அடைப்பு காரணமாக ஏற்படலாம். ஆனால் இது தொற்று நோய் அல்ல என்றார் டாக்டர்... மேலும் இது குறித்து பேசியவர், இது ஒரு தீவிரமான பிரச்சனை இல்லை என்று அனைத்து பெண்களும் நினைக்கின்றனர். ஆனால் அது வாழ்க்கையை பாதிக்கும்.. காம உணர்வையே குறைத்து தம்பதிகளிடையே பிரச்சனைகளை உண்டாக்கும்.. இதனால் உறவுகள் பாதிக்கப்படும்.., அத்துடன் உங்கள் சுயமரியாதை குறைதல், தன்னம்பிக்கை இன்மை மற்றும் மனச்சோர்வுக்கு வழிவகுக்கும் என்று டாக்டர் கோரா எச்சரிக்கிறார்....
வல்வோடினியாவை கண்டறிவது எப்படி? என்ற கேள்விக்கு பதிலளித்தவர், இந்த நிலையைக் கண்டறிய மருத்துவர் ஒரு Q-tip அல்லது ஸ்வாப் பரிசோதனையை மேற்கொள்வார். இருப்பினும், நீங்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய சில விஷயங்கள் உள்ளன, அவைகளாவன,
1. பிறப்புறுப்பு அசெளகரியமாக இருத்தல். அதனால் சுவாசிக்கக்கூடிய பருத்தி ஆடைகளை அணிதல்.
2. தளர்வான கால்சட்டை, பேன்ட் மற்றும் பாவாடைகளை அணிதல்.
3. இந்தப் பகுதியில் வாசனை திரவியப் பொருட்களின் பயன்பாடு இல்லாமல் பார்த்துக் கொள்ளுதல்.
4. இறுக்கமான ஆடைகளைத் தவிர்ப்பது
5. ஐஸ் பேக் அல்லது கூல் ஜெல் பேக்குகளைப் பயன்படுத்துதல்
வல்வோடினியாவை எவ்வாறு சரிசெய்வது? என்ற கேள்விக்கு பதிலளித்தவர், பெண்களுக்கு பிறப்புறுப்பில் ஏற்படும் வல்வோடினியாவை ஒரு மருத்துவர் மதிப்பிட்டு, அதற்கான சிகிச்சையை தொடங்குவார். மேலும் அதில் மென்மையாக்கிகள், மயக்க மருந்து பயன்பாடுகள் மற்றும் லூப்ரிகண்டுகள் ஆகியவை அடங்கும். அதில் சில வாய்வழி மாத்திரைகளும் உள்ளன. அரிதான சந்தர்ப்பங்களில், அறுவை சிகிச்சையும் செய்ய நேரிடலாம்.. ஆனால் வலிக்கு பாராசிட்டமால் போன்ற சாதாரண வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்ளாதீர்கள், ஏனெனில் அது உங்களுக்கு உதவாது என்று டாக்டர் கேரா தெரிவித்தார்..