அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமி, அன்புமணி
அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமி, அன்புமணிpt web

அதிமுக - பாஜக கூட்டணி? என்ன நடக்கலாம்? யாருக்கு லாபம்? எங்கு சிக்கல்? முழு அலசல்

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. கூட்டணிக் கணக்குகளை வைத்து கருத்துகளை தெரிவிக்க அரசியல் தலைவர்கள் ஆரம்பித்துவிட்டனர். தற்போதைய தமிழக அரசியல் களத்தில் அதிமுக - பாஜக கூட்டணி அமையுமா? அமையாதா? என்பதுதான் முக்கிய பேசுபொருளாக உள்ளது.
Published on

அதிமுக - பாஜக

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. கூட்டணிக் கணக்குகளை வைத்து கருத்துகளை தெரிவிக்க அரசியல் தலைவர்கள் ஆரம்பித்துவிட்டனர். இதையடுத்து தற்போதைய தமிழக அரசியல் களத்தில் அதிமுக - பாஜக கூட்டணி அமையுமா? அமையாதா? என்பதுதான் முக்கிய பேசுபொருளாக உள்ளது.

திமுக கூட்டணிக் கட்சிகள் மற்றும் நாம் தமிழர் கட்சியைத் தவிர களத்தில் இருக்கும் அனைத்துக் கட்சிகளின் எதிர்பார்ப்பும் ஒன்றுதான். 2026ல் திமுகவை வீழ்த்த வேண்டுமானால், திமுகவிற்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் என்பது. அந்த வலுவான கூட்டணி, அதிமுக - பாஜக இணைந்து அமைத்ததாக இருக்க வேண்டும் என்பது இருகட்சிகளிலும் உள்ள இரண்டாம் கட்டத் தலைவர்களின் பிரதான எதிர்பார்ப்பு.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமிpt web

அதிமுக - பாஜக கூட்டணி உடைந்தபின் இரு கட்சிகளின் தலைமையும் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தனர். “மத்தியில் காங்கிரஸ் வந்தாலும் பாஜக வந்தாலும் தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையில் பார்க்கின்றனர்; எனவே இனி தேசியக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். திராவிடக் கட்சிகளை அகற்றவே என்னை மாநில தலைவராக நியமித்து உள்ளனர் என்று அண்ணாமலையும் தெரிவித்திருந்தார்.

அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமி, அன்புமணி
Rewind 2024 | ரகுல் ப்ரீத் சிங் முதல் கீர்த்தி வரை.. 2024-ல் நடந்த டாப் 15 செலிபிரிட்டி திருமணங்கள்!

தேர்தலுக்கு நேரமும் காலமும் உள்ளது

ஆனால், தேர்தல் நெருங்க நெருங்க இரு கட்சிகளும் கூட்டணி நோக்கி நகரும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். உதாரணங்களாக, அதிமுக பொதுக்குழுவில் மத்திய அரசை குறிக்கும் தீர்மானங்களுக்கு ‘வலியுறுத்தல்’ என்றும் மாநில அரசை குறிக்கும் தீர்மானங்களுக்கு ‘கண்டனங்கள்’ என்று இருந்தது. சில தினங்களுக்கு முன் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தபோதும், ஒத்த கருத்துக்களுடைய கட்சிகளுடன் கூட்டணி என்றார். பாஜகவா? என்று செய்தியாளர்கள் அழுத்தி அழுத்தி கேட்டபோதும், தேர்தல் நெருங்கும் நேரத்தில்தான் யார் தலைமையில் யார் கூட்டணி வைப்பார்கள் என்பது தெரியவரும் என சூசகமாகத்தான் பேசி இருந்தார்.

அண்ணாமலை
அண்ணாமலை pt web

பாஜக தலைவர் அண்ணாமலை கூட, “பாஜக தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு சிந்தனை உள்ளது. தேர்தலுக்கான நேரமும் காலமும் உள்ளது. தமிழகத்தில் திமுக ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் எல்லோரும் தெளிவாக உள்ளோம். திமுகவை ஒழிக்க வேண்டுமென்றால் நீங்கள் ஒன்றாக சேர்ந்தால்தானே ஒழிக்க முடியும் என கேட்பீர்கள். அனைத்தும் சாத்தியம்தான்” எனத் தெரிவித்தார்.

அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமி, அன்புமணி
சென்னை: தனியார் வங்கி வளாகத்திலேயே அதிகாரிக்கு சரமாரி கத்திக்குத்து... வெளிவந்த அதிர்ச்சி பின்னணி!

5 முனைப்போட்டி

அதிமுக - பாஜக கூட்டணி விவகாரம் தொடர்பாக புதிய தலைமுறை சிறப்பு நேர்காணலில் உரையாற்றிய மூத்த பத்திரிகையாளர் எஸ்பி லட்சுமணன், “அரசியலில் எதுவும் சாத்தியம்தான். தற்குறி என்ற வார்த்தையில் தொடங்கி, பலப்பல நாகரீகமற்ற வார்த்தைகளை சொல்லி எடப்பாடி பழனிசாமியை விமர்சித்தவர்தான் அண்ணாமலை. ஆனால், அண்ணாமலை ஒரு தொடக்கப்புள்ளி வைத்துள்ளார். இந்த மாற்றங்கள் எடப்பாடி பழனிசாமி மனதிலும் வரலாம், வரவைக்கப்படலாம். பாஜகவின் கடந்த ஈராண்டு அரசியலை எடுத்துப் பாருங்கள். எல்லா மாநிலங்களிலும் தாங்கள் போடும் அரசியல் கணக்குக்கு ஒரு தீர்வைக் காண்பதில் உறுதியாக இருக்கிறார்கள்” எனக் கூறியிருந்தார்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமி
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமிpt web

அதிமுகவிலும் சரி, பாஜகவிலும் சரி இரண்டாம் கட்டத் தலைவர்கள் பலரும் இந்த கூட்டணி அமைய விரும்புகின்றனர் என்பது மிக முக்கியமான ஒன்று.

இத்தகைய சூழலில்தான், இன்று புதிய தலைமுறையுடனான பிரத்யேக நேர்காணலில் பேசிய அண்ணாமலை, “தமிழகத்தில் இன்றைய சூழலில் 5 முனைப் போட்டி நிலவுகிறது. திமுக கூட்டணி, பாஜக, நாம் தமிழர் கட்சி, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம் என 5 முனைப்போட்டி உள்ளது. ஐந்து முனையும் ஐந்து வெவ்வேறு குரல்களாக இருக்கின்றது” எனத் தெரிவித்தார். மேலும், “2026 யார் ஆட்சி அமைத்தாலும் அது கூட்டணி ஆட்சியாகத்தான் இருக்கும். ஏனென்றால் களம் மாறிவிட்டது” எனவும் கூறினார்.

அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமி, அன்புமணி
EXCLUSIVE | “தமிழகத்தில் 5 முனைப் போட்டி; 2026ல் கூட்டணி ஆட்சிதான்” - பாஜக தலைவர் அண்ணாமலை

தினமும் ஒன்று சொல்வார்கள்

ஓரிரு தினங்களுக்கு முன் கூட்டணி தொடர்பாக தலைமை முடிவு செய்யும் என்றும், ஒத்த கருத்துகளை உடைய கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம் என சொல்லிவிட்டு, இன்று ஐந்துமுனைப் போட்டி என அண்ணாமலை சொல்லுவது விவாதத்தினை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பேசிய அய்யநாதன், “தினமும் ஒன்று சொல்கிறார்கள். ஐந்து நாட்கள் கழித்துப்பாருங்கள் வேறு மாதிரி சொல்வார்கள். அவர்கள் என்னதான் மாறி மாறி பேசினாலும், தமிழக சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை பாஜகவிற்கும் தேர்தலுக்கும் சம்பந்தமே இல்லை. பாஜகவிற்கான முதலமைச்சர் வேட்பாளர் கிடையாது. அவர்கள் என்னதான் சொன்னாலும் அது எடுபடாது” என்றார்.

தராசு ஷ்யாம்
தராசு ஷ்யாம்Puthiyathalaimurai

அண்ணாமலை கருத்துதொடர்பாகவும், ஐந்து முனைப் போட்டி தொடர்பாகவும் புதிய தலைமுறையிடம் உரையாற்றிய மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், “ஐந்து முனைப் போட்டி என்று அண்ணாமலை சொல்வது சரிதான். சில இடங்களில் அது ஆறு முனைப் போட்டியாகக் கூட மாறும். அதிருப்தியாளர்கள் தனியாக நிற்பார்கள்.

ஐந்துமுனைப் போட்டி இந்த தேர்தலில் மட்டுமல்ல. இதற்கு முன் பல தேர்தல்களில் ஐந்து முனைப் போட்டி நிகழ்ந்துள்ளது. ஆனால், களத்தில் பிரதான போட்டி என்பது இரு கட்சிகளுக்கு இடையில்தான் இருக்கும். உதாரணத்திற்கு 1996 தேர்தலைச் சொல்லலாம். 2016 ஆம் ஆண்டிலும் கிட்டத்தட்ட அதேமாதிரிதான் இருந்தது. இரண்டாம் இடத்தில் நிற்கும் அணியுடன் மற்ற அணிகள் ஒன்று சேர்ந்தால் முதல் அணியைத் தோற்கடிக்க முடியும். ஆனால், அப்படி ஒன்று சேர முடியாமல் போனால் அது முதல் அணிக்கான வெற்றியாக முடிந்துவிடும்” என்கிறார்.

அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமி, அன்புமணி
உடலுறுப்பு தானம்: நாட்டிலேயே சிறந்து விளங்கும் தமிழ்நாடு

லாப நஷ்டங்கள் என்ன?

அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தால் இருகட்சிகளுக்கு ஏற்படும் ஏற்படும் லாப நஷ்டங்களையும், தனித்தனியாக போட்டியிட்டால் அதனால் ஏற்படும் லாப நஷ்டங்களையும் அரசியல் விமர்சகர்கள் ஆய்வு செய்யாமல் இல்லை.

எஸ்பி லட்சுமணன்
எஸ்பி லட்சுமணன்

அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தால், அதிமுக தொண்டர்கள் அதை விரும்புவார்களா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. இது குறித்து பேசிய எஸ்பி லட்சுமணன், “பாஜக மையப்புள்ளியாக இருந்துதானே அதிமுகவை சிதைத்தது. பாஜக மையப்புள்ளியாக இருந்துதானே இபிஎஸ் முதல்வராக தொடர அனுமதித்தனர். ஆனால், அந்த கோபத்தையெல்லாம் மறந்துவிட்டுத்தான், பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியில்வந்த பின் தலைமை தவறு செய்துவிட்டது என அதிமுக தொண்டர்கள் வருத்தப்பட்டார்கள். 10 முதல் 15 இடங்கள் வெற்றி பெற்று இருக்கலாம் எனத் தெரிவித்தனர். ஆனால், சட்டமன்ற தேர்தலில் பாஜக உடனான கூட்டணி என்பது அதிமுகவுக்கு சுமைதான். அதிமுக பார்வையில் அந்தக் கூட்டணியைப் பார்த்தால் அதில் கொஞ்சம் சுயநலமும் கலந்திருக்கிறது. அதிமுகவை உடைத்தவர்களே, திமுகவை வீழ்த்துவதற்காக அதிமுகவை மீண்டும் ஒருங்கிணைப்பார்கள் என்றும் பார்க்கலாம்” எனக் கூறினார்.

அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமி, அன்புமணி
சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் | முதல் இடத்தில் UAE.. இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?

ஈரோடு கிழக்கில் என்ன நடந்தது?

மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன்
மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன்puthiya thalaimurai

அய்யநாதன் இதுதொடர்பாக கூறுகையில், “அதிமுகவிற்கு பாஜக கூடுதல் சுமைதான். ஈரோடு கிழக்கு தேர்தலில்கூட பாஜக அதிமுகவை ஆதரித்ததுதானே? அண்ணாமலை உட்பட யாரையாவது அவர்கள் பிரச்சார மேடைகளிலாவது ஏற்றினார்களா? ஒரு தொகுதி இடைத்தேர்தலுக்கே இப்படி என்றால் தமிழ்நாடு முழுவதும் அதிமுகவிற்கு பாஜகவிற்கு பயனில்லை. ஒன்றிய அரசில் இருந்து வரும் அழுத்தம் காரணமாக நாம் பலவீனமாகத்தான் இருக்கிறோமோ என்ற கருத்து அதிமுகவிலேயே நிலவுகிறது. இதனைக் காரணமாக வைத்து வாக்கு சதவீதத்தை கூட்டிக்கழித்துப் பார்த்து முடிவெடுத்தார்கள் என்றால் இது கூட்டணியாக மாறும்” என்றார்.

அதிமுக - பாஜக
அதிமுக - பாஜகபுதிய தலைமுறை

அதிமுக - பாஜக கூட்டணி அமையவில்லை என்றாலும் அதிலும் இரு சிக்கல்கள் உள்ளதாக பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். ஷ்யாம் கூறுகையில், “சில தொகுதிகளில் பாஜகவின் வாக்குகள் இருந்தால்தான் அதிமுகவின் சிட்டிங் எம்.எல்.ஏக்கள் வெற்றி பெற முடியும்.இதேநிலைதான் பாஜகவில் இருப்பவர்களுக்கும். ஆக, எம்.எல்.ஏ ஆக வேண்டும் என்ற கனவில் இருப்பவர்களுக்கு கூட்டணி அமையாதது ஏமாற்றமாக இருக்கும். அதேநேரத்தில் கட்சி வளர வேண்டும். அதிமுகவை பாஜக விழுங்கிவிடக்கூடாது என்று நினைக்கும் அதிமுக தலைமைக்கு கூட்டணி அமையாது நல்ல விஷயமாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.

அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமி, அன்புமணி
கொச்சி: இடிந்து விழுந்த அங்கன்வாடி; குழந்தைகள் இல்லாததால் நல்வாய்ப்பாக பெரும் விபத்து தவிர்ப்பு!

பாஜக - பாமக

அதிமுக பாஜக உடன் இருக்கும் கூட்டணிக் கட்சிகளையும் நாம் பேசியாக வேண்டும். இது குறித்தும் பத்திரிக்கையாளர்கள் கருத்து தெரிவித்தனர். அய்யநாதன் கூறுகையில், “சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை பாமக பாஜக உடன் நிற்காது. அது அதிமுக உடன் சென்றுவிடும். இல்லையென்றால் பாமக வெற்றி பெற முடியாது. பாஜகவிற்கு வேண்டுமானால் வாக்கு சதவீதம் காட்டுவதற்கு உதவலாம். மற்றபடி ஒரு பயனும் இல்லை” எனத் தெரிவித்தார்.

பாமக - பாஜக கூட்டணி
பாமக - பாஜக கூட்டணிபுதிய தலைமுறை

எஸ்பி லட்சுமணன், இக்கட்டான நேரத்தில் எல்லாம் பாஜகவை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில் பாமக இருப்பதாகத் தெரிவித்தார். இன்றைக்கு பாமகவின் நிலைப்பாடு என்பது பாஜக ஆதரவு நிலைப்பாடுதான் என்றார்.

தலைவர்கள் என்னதான் கூட்டணி அமைப்போம், தனியாக களம் காண்போம் என கருத்துகளைத் தெரிவித்தாலும், அதிமுக - பாஜக கூட்டணி அமையுமா? அமையாதா? என்பது தேர்தல் நெருங்க நெருங்கதான் தெரியவரும்...

அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமி, அன்புமணி
EXCLUSIVE | “தமிழகத்தில் 5 முனைப் போட்டி; 2026ல் கூட்டணி ஆட்சிதான்” - பாஜக தலைவர் அண்ணாமலை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com