தந்தை பெரியார்
தந்தை பெரியார்pt web

வைக்கம் போராட்டம்... அவ்வளவு முக்கியமானவரா பெரியார்?

“அடிப்படையில் வைக்கம் போராட்டத்தை முன்னெடுத்தது ஈழவர் தலைவரான வழக்கறிஞர் டி.கே.மாதவன். ஆதரவளித்தது திருவாங்கூர் வட்டார காங்கிரஸ் கட்சி. பிறகேன் பெரியார் வைக்கம் வீரர் என்று போற்றப்பட்டார்?” என்ற கேள்வி எழலாம்.
Published on

aவைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, வைக்கத்தில் நாளை (டிச.12) நடைபெறும் பெரியார் நினைவகம் மற்றும் நூலகத் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக, முதல்வர் மு.க.ஸ்டாலின் கேரளா சென்றிருக்கிறார். இந்தப் பின்னணியில் வைக்கம் போராட்டத்தின் பின்னணியை நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும்!

வைக்கம் போராட்டம் ஏன்?

இன்று கடவுளின் தேசம் என்று கொண்டாடப்படும் கேரளத்தில் 100 ஆண்டுகளுக்கு முன் விவேகானந்தரே, ‘பைத்தியக்காரர்களின் புகலிடம்’ என்று சொல்லுமளவுக்கு, சாதிவெறியும், தீண்டாமைக் கொடுமையும் தலைவிரித்து ஆடியது. தாழ்த்தப்பட்ட மக்கள் கோயிலுக்குள் மட்டுமல்ல, கோயில் இருக்கும் தெருவுக்குள்ளேயே நுழைய அனுமதிக்கப்படவில்லை.

தமிழ்நாட்டுப் பகுதியிலும் அப்போது ஆலய நுழைவு உரிமை எல்லோருக்கும் கிடைக்கவில்லை என்றாலும், கோயில் தெருவில் நுழைந்த ‘குற்றத்துக்காக’ தாழ்த்தப்பட்ட மக்கள் சிலரது கண்களைத் தோண்டி, அதில் சுண்ணாம்பு பூசும் கொடூரமும் வைக்கத்தில் அரங்கேறியது! இந்தக் கொடூரங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, எல்லோரும் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் நடக்க உரிமை வேண்டி நடந்த சத்தியாகிரகமே வைக்கம் போராட்டம்!

தந்தை பெரியார்
வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நாள்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு

வைக்கம் வீரர்!

“அடிப்படையில் வைக்கம் போராட்டத்தை முன்னெடுத்தது ஈழவர் தலைவரான வழக்கறிஞர் டி.கே.மாதவன். ஆதரவளித்தது திருவாங்கூர் வட்டார காங்கிரஸ் கட்சி.

பிறகேன் பெரியார் வைக்கம் வீரர் என்று போற்றப்பட்டார்?” என்ற கேள்வி எழலாம்.

1924 மார்ச் 30இல் தொடங்கிய வைக்கம் போராட்டம் ஏப்ரல் முதல் வாரத்திலேயே தன் போராளிகள் அனைவரையும் சிறைக்கு அனுப்பிவிட்டுத் தலைவர்களின்றி தத்தளித்து நின்றது. வழிநடத்தத் தலைவர்களைக் கேட்டு காந்தி, ராஜாஜி ஆகியோருக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் ஜோசப் ஒரு கட்டத்தில், “நீங்களே வந்தால் நன்றாக இருக்கும்!” என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பெரியாருக்கும் கடிதம் எழுதினார்.

தந்தை பெரியார்
தந்தை பெரியார்அரசு வெளியிட்ட வீடியோவில் இருந்து...

அதன்படி 1924 ஏப்ரல் 13-ம் தேதி வைக்கம் சென்ற பெரியார், இடையில் இருமுறை கைதாகி, அடுத்தடுத்து சிறை தண்டனையை அனுபவித்தாலும் போராட்டம் வெற்றிபெறும் வரையில் அதற்காக வீரியமான பங்களிப்பதைத் தந்தார். அதைக் கண்டதாலேயே அவரை ‘வைக்கம் வீரர்’ என்று புகழ்ந்தார் ‘நவசக்தி’ ஆசிரியரான திரு.வி.க!

தந்தை பெரியார்
தீண்டாமைக்கு எதிரான சமத்துவ குரல்! சீர்திருத்த பாதையில் மைல்கல்.. வைக்கம் போராட்ட வரலாறு இதுதான்!

பெரியாரின் பங்கு என்ன?

வைக்கம் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளுக்குள் நுழைய முடியாதவாறு மக்கள் தடுக்கப்பட்ட இடங்களில் தினமும் குறைந்தது மூன்று பேர் போராடுவார்கள். எல்லோரையும் சாதிவெறியர்கள் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்க, போலீஸாரோ தாங்கியவர்களைக் கைது செய்து போராட்டத்தையே முடிவுக்குக் கொண்டுவந்துவிடுவார்கள்.

போராட்டக் களத்துக்குப் பெரியார் வந்த பிறகு, போலீஸார் கைது செய்யதாலும் போராட்டம் தடைபடாத வகையில், சுற்றுவட்டார கிராமங்களில் எல்லாம் பிரசாரம் செய்து ஆள் சேர்த்தார். “கோயில் வீதிகளில் ஆடு, மாடெல்லாம் நடக்கிறது. மனிதன் நடக்கக் கூடாதா?” என்ற அவரது கேள்வி உழைக்கும் மக்களை உசுப்பேற்றியது. தேவையேற்படும்போது தமிழ்நாட்டிலிருந்தும் ஆள்களை வரவழைத்தார். தன் மனைவி நாகம்மையாரையும்கூட போராட்டத்தில் ஈடுபடுத்தினார்!

சமஸ்தான உயர் அதிகாரியாக இருந்த C.W.E.Cotton வார்த்தைகளில் சொல்வதென்றால், “வெளியிலிருந்து மட்டும் இதற்கு உதவி வராதிருந்தால் உண்மையில் இந்த இயக்கம் எப்போதோ பிசுபிசுத்துப்போயிருக்கும்!”

தந்தை பெரியார்
சிரியாவின் நிலைக்கு அமெரிக்கா - இஸ்ரேல் சதி காரணமா? ஈரான் பகீர் குற்றச்சாட்டு - நடப்பது என்ன?

சிறைச்சாலை கொடுமைகள்!

முதல்முறை கைதாகி ஒரு மாத தண்டனைக்காலம் முடிந்து சிறையிலிருந்து வெளியேவந்த பெரியார், நேராக போன இடம் வைக்கம்தான். மீண்டும் போராட்டத்தில் தீவிரம் காட்டியதால் கோபமடைந்த அரசாங்கம், 1924 ஜூலை 18-ல் மறுபடியும் அவரைக் கைது செய்தது. நான்கு மாதக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட பெரியாரை, தனிமைச் சிறையில் அடைப்பதற்காக கோட்டயம் கொண்டுபோனார்கள் போலீஸார். கடும் மழை காரணமாக படகுப் போக்குவரத்து தடைபட்டதால், மற்ற சத்தியாகிரகிகள் இருந்த திருவனந்தபுரம் மத்தியச் சிறைக்கே கொண்டுவரப்பட்டார் பெரியார்.

ஆனால், அவரை மட்டும் அரசியல் கைதியாக நடத்தாமல் கொலைக்குற்றவாளி போல கால்களில் விலங்குச் சங்கிலி, கழுத்தில் கைதி எண் எழுதப்பட்ட மரப்பட்டை, சிறை உடை அணிவித்து கடுமையாக வேலை வாங்கினார்கள் சிறை அதிகாரிகள். இதை அறிந்து துடித்துப்போன அவரது நண்பர் ராஜாஜி, கடும் கண்டனம் தெரிவித்தார்!

தந்தை பெரியார்
சரவெடி!! இந்திய சினிமா வரலாற்றில் மாபெரும் சாதனை.. 6 நாளில் 1000 கோடி வசூலை அள்ளிய ’புஷ்பா 2’!

கோயிலுக்குள்ளும் நுழைவோம்!

தொடர்ந்து 604 நாள்கள் நடந்த எழுச்சிமிக்க போராட்டத்தின் விளைவாக, பேச்சுவார்த்தைக்கு இறங்கிவந்தது திருவாங்கூர் சமஸ்தானம். மன்னர் இறந்து போனதால், ராணியே பேச்சுவார்த்தை நடத்தினார். காங்கிரஸ் சார்பில் காந்திஜி பேச்சுவார்த்தையில் பங்கேற்றார். “கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் தாழ்த்தப்பட்ட மக்களை அனுமதிக்கிறோம். ஆனால், இதைச் சாக்கிட்டு ஆலய பிரவேச உரிமை கோரக்கூடாது” என்றது சமஸ்தான தரப்பு. அதை பெரியார் ஏற்க மறுத்தார்.

காந்தியின் சமரசத்துக்குப் பிறகு, ‘இப்போதைக்கு நான்கில் மூன்று தெருக்களில் மட்டும் அனுமதி’ என்பதை ஏற்றுக்கொண்டார்கள் சத்தியாகிரகிகள். போராட்ட வெற்றி விழாவுக்கு தலைமை தாங்க அவர்கள் பெரியாரையே அழைத்தார்கள்.

இந்த வெற்றி அடுத்த ஆண்டே சுசீந்திரத்தில் கோயில் நுழைவுப் போராட்டம் வெடித்தது. சுசீந்திரம் கோயில் நுழைவுப் போராட்டத்தை ஆதரித்த பெரியார், “வைக்கம் போராட்டத்துக்கு தமிழ்நாடு துணை நின்றது போல இதற்கும் துணையாக இருக்க வேண்டும்” என்று அறிக்கை விடுத்தார். தொடர்ச்சியான போராட்டங்களுக்குப் பணிந்த திருவிதாங்கூர் அரசு, 1936-ல் ஆலயப் பிரவேச உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியது. 2017-இல் கருவறை தீண்டாமைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அனைத்து சாதியினரையும் அர்ச்சகராகவும் நியமித்திருக்கிறது பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு!

தந்தை பெரியார்
I.N.D.I.A. கூட்டணி | காங்கிரஸை ஒதுக்கும் கட்சிகள்.. மம்தாவுக்கு பெருகும் ஆதரவு.. என்னதான் நடக்கிறது?

சாதி ஏற்றத்தாழ்வுகளை ஒழித்துக்கட்டுவதில் தமிழ்நாடும், கேரளாவும் ஒருவர்கொருவர் தோள்கொடுத்துக்கொண்ட வரலாற்றின் தொடக்கமே, வைக்கம் போராட்டம். அந்தப் போராட்டத்தின் (1924-25) நூற்றாண்டு நிறைவு விழாவையே இப்போது தமிழ்நாடும், கேரளாவும் கூட்டாகக் கொண்டாடுகின்றன!

தந்தை பெரியார்
எல்லை மீறிய முழக்கம்! திரும்பத் திரும்ப சங்கடப்படுத்தும் ஃபேன்ஸ்; அறிக்கைவிட்டு ஆஃப் செய்யும் அஜித்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com