pushpa 2 collection
pushpa 2 collectionweb

சரவெடி!! இந்திய சினிமா வரலாற்றில் மாபெரும் சாதனை.. 6 நாளில் 1000 கோடி வசூலை அள்ளிய ’புஷ்பா 2’!

கடந்த டிசம்பர் 5-ம் தேதி திரையரங்கில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் ஆறு நாளில் ஆயிரம் கோடி வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
Published on

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் ‘புஷ்பா: தி ரைஸ்’. தமிழ்நாடு - ஆந்திர எல்லையில் செம்மரக் கடத்தலை மையமாக கொண்ட கதையாக உருவாக்கப்பட்டிருந்த திரைப்படத்தில் புஷ்ப ராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் அல்லு அர்ஜுன் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

உடன் நடித்திருந்த ஃப்ஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா, ஜெகதீஷ் பிரதாப் பந்தாரி, சுனில், ராவ் ரமேஷ், தனஞ்ஜெயா, அனசுயா பரத்வாஜ், அஜய் உள்ளிட்ட அனைவரும் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு விருந்தாக படைத்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவான அனைத்து பாடல்களும் ஹிட்டடித்து.

pushpa
pushpa

மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற புஷ்பா திரைப்படம் வசூலில் ரூ.390 கோடிவரை ஈட்டி பட்டையை கிளப்பிய நிலையில், அதன் இரண்டாம் பாகமாக ’புஷ்பா 2 தி ரூல்’ திரைப்படம் வெளிவந்துள்ளது.

புஷ்பா 1 திரைப்படத்தை போல் இரண்டாம் பாகத்திற்கும் அதிகப்படியான வரவேற்பை சினிமா ரசிகர்கள் வழங்கியுள்ள நிலையில், படம் வெளியான 6 நாட்களில் உலகளவில் ஆயிரம் கோடி வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ளது. நிறைய விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டப் போதும் வசூலில் சிக்கல் இல்லாமல் ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது.

pushpa 2 collection
“கடவுளே அஜித்தே என்ற கோஷம் கவலையளிக்கிறது..” ரசிகர்களுக்கு அஜித் கொடுத்த ஷாக்!

6 நாளில் ஆயிரம் கோடி.. முதல் இந்திய சினிமாவாக பிரமாண்ட சாதனை!

அல்லு அர்ஜுன் நடிப்பில் ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் ’புஷ்பா 2 தி ரூல்’ திரைப்படமானது கடந்த டிசம்பர் 5ம் தேதி உலகளவில் திரையரங்கில் வெளியானது. இத்திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே இந்தியாவில் அதிக வசூலை ஈட்டிய இந்திய திரைப்படமாக மாறி வசூல் சாதனை படைத்த நிலையில், விரைவில் உலகளவில் ஆயிரம் கோடியை தொடும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

pushpa 2
pushpa 2

இந்நிலையில் 6 நாட்கள் வசூலை அறிவித்திருக்கும் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், புஷ்பா 2 தி ரூல் திரைப்படம் ரூ.1002 கோடி வசூலை ஈட்டியிருப்பதாகவும், ஆயிரம் கோடி அதிவேகமாக ஈட்டிய முதல் இந்திய திரைப்படம் என்ற சாதனையை படைத்திருப்பதாகவும் அறிவித்துள்ளது.

தெலுங்கு திரையுலகில் ஆயிரம் கோடி வசூலை ஈட்டிய திரைப்படங்களில் பாகுபலி 2, ஆர்ஆர்ஆர், கல்கி 2898 ஏடி திரைப்படங்களை தொடர்ந்து 4வது திரைப்படமாக புஷ்பா 2 திரைப்படமும் இணைந்துள்ளது.

pushpa 2 collection
எல்லை மீறிய முழக்கம்! திரும்பத் திரும்ப சங்கடப்படுத்தும் ஃபேன்ஸ்; அறிக்கைவிட்டு ஆஃப் செய்யும் அஜித்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com