\
dorothy - thirumavalavan
dorothy - thirumavalavanpt

ஆணாதிக்கம் கொண்ட ஆண்களின் முகத்தில் காரி உமிழும் டோரதி! - திருமாவளவன் பாராட்டு

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான டோரதி திரைப்படத்தை பாராட்டியுள்ளார் விசிக தலைவர் தொல் திருமாவளவன்.
Published on: 
Summary

மூன்றாம் பாலினத்தவரின் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட 'டோரதி' திரைப்படம், சமூகத்தின் ஆணாதிக்கத்தை கேள்வி கேட்கும் வகையில் தைரியமாக பேசுகிறது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் முயற்சியை திருமாவளவன் மற்றும் வன்னி அரசு பாராட்டினர். இந்த திரைப்படம் சமூக மாற்றத்திற்கான முக்கியமான சிந்தனையை முன்வைக்கிறது.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் ‘டோரதி'. இப்படம், ஆண் திருநங்கையாக மாறும் போது குடும்ப சூழல், சமூகத்தால் எப்படி பாதிப்பிற்குள்ளாகிறாள், இச்சமூகம் எப்படி பார்க்கிறது என்பதை உண்மைக்கு நெருக்கமாக பேசியிருந்தது. ஒருபக்கம் இந்தப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துவரும் நிலையில், மறுபக்கம் படத்தில் இடம்பெற்ற முத்தக்காட்சியும், ஆண் நண்பர்கள் இருவர் காதலர்களாக இணைவதும் பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

மோகன் ஜி - கார்த்திக் சுப்புராஜ்
மோகன் ஜி - கார்த்திக் சுப்புராஜ்kumudham show / karthik subbaraj x

சமீபத்தில், நடைபெற்ற யூடியூப் விவாதத்தில் பேசியிருந்த இயக்குநர் மோகன் ஜி, டோரதி படத்திற்கு பார்ட் 2 எடுத்தால் என்ன காட்டுவீர்கள் என்ற வகையில் பேசியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜும் மோகன் ஜி-ன் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். 

இந்தசூழலில் 'டோரதி' திரைப்படத்தை விசிக தலைவர் திருமாவளவன், அமைச்சர் வன்னி அரசு ஆகியோர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் பட குழுவினருடன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள திரையரங்கில் பார்த்தனர். படம் பார்த்தபிறகு திருமாவளவன், அமைச்சர் வன்னி அரசு படத்தை பராட்டினர்.

dorothy - thirumavalavan
’டோரதி படத்தை மோசமாக சித்தரித்து விமர்சிப்பது தவறு..’! - அஸ்வின் பாராட்டு

டோரதி படத்தை பாராட்டிய திருமாவளவன்!

திருமாவளவன் பேசியதாவது, டோரதி திரைப்படத்தை பார்த்தோம். பரவலாக தமிழ் மக்கள் வரவேற்று பாராட்டுகிற திரைப்படம். முற்றிலும் மாறுபட்ட கதைகளத்தை முன்னிறுத்தி, துணிச்சலோடு பேசுபடும் பொருளாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மாற்றி இருக்கிறார்.

சமூகத்தில் பெற்றோர்கள், உறவினர்கள், சமூகத்தினரால் புறக்கணிக்கப்பட்ட ஒரு பாலினம் மூன்றாம் பாலினம். அவர்களை ஏற்க வேண்டும், அங்கீகரிக்க வேண்டும் என்ற முற்போக்கு சிந்தனையுள்ள திரைப்படம் டோரதி திரைப்படம்.

கடும் நெடும் பயணம் என்று தொடங்கியது இந்த திரைப்படம். நட்பாக தொடங்கி காதலாக மாறி, அவர்கள் சேர்ந்து குடும்பமாக வாழ்கிற பயணமாக இது மாறுகிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாமல் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

dorothy - thirumavalavan
இந்திய சினிமாவை திரும்பி பார்க்கவைத்த ’டோரதி‘.. சிரஞ்சீவியுடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ்?
dorothy - thirumavalavan
’டோரதி’ படத்தில் இலுமினாட்டி டாலர்? உண்மை என்ன? உடைத்து பேசிய கார்த்திக் சுப்புராஜ்!

பெண்களையும் அங்கீகரிக்க தயங்குகிறோம். பெண்களையே ஒடுக்குகிற இந்த சமூகம், மூன்றாம் பாலினத்தவரை இழிவாக அருவருப்பாக பார்க்கிறது, அதனால் அவர்கள் பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர்.

ஆணாதிக்கத்தை கேள்வி கேட்கும் படமாக இதை கார்த்திக் சுப்புராஜ் உருவாக்கி இருக்கிறார். ஆணாதிக்கம் கொண்ட ஆண்களின் முகத்தில் காரி உமிழக் கூடிய வகையில் திரைப்படம் இருக்கிறது.

மூன்றாம் பாலினத்தவர் பிரச்சனையை இந்த திரைப்படம் பேசுகிறது. டோரதி என்ற கதாபாத்திரம், சுப்பு என்ற ஆணாக இயங்கி கொண்டு இருக்கும் பெண் விடுபடுகிறாள்.

நீ தெய்வீக பிறவி, நீ எப்படி வாழ நினைக்கிறாயோ அப்படி வாழ் என்று சொல்லுகிற கதாபாத்திரம்.

பள்ளி சிறுவர்களாக பழகியவர்கள் கணவன் மனைவியாக பயணிக்கிறார்கள்.

ஆண் என்று வளர்த்த பிள்ளை பெண்ணாக மாறிவிட்டதால் பெற்ற பிள்ளையை கொல்ல பெற்றோரே துணிந்ததை எப்படி பார்ப்பது. பாலின பாகுபாட்டை எதிர்க்கின்ற சக்திகளால் இது வரவேற்கப்படுகிறது. அதனால் இந்த திரைப்படத்தை நான் பாராட்டுகிறேன்.

இந்த திரைப்படம் வரவேற்கப்பட வேண்டும் என்பதை கடந்து இந்த படத்தின் கருத்து வரவேற்கப்பட வேண்டும்.

இந்த விவாதம் முற்றுபெறாது. சிறு சிறு மாற்றங்கள் தான் பெரிய மாற்றங்களுக்கு வழிவகுக்கும். சமீப காலங்களில் இடதுசாரி சிந்தனைகள் தமிழ் சினிமாவில் வலுப்பெற்று வருகின்றன. இடதுசாரி சிந்தனையோடு திரைப்படம் எடுத்துள்ள இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கு பாராட்டுகள்” என பேசியுள்ளார்.

dorothy - thirumavalavan
”டோரதி பல விருதுகள் மேடைக்கு செல்லவேண்டும்..” கன்னட நடிகர் உபேந்திரா பாராட்டு!
dorothy - thirumavalavan
”ஒரே மாதிரியாகச் சுருக்கிவிடாமல்..” - ‘டோரதி’ படத்தைப் பாராட்டிய சகோதரன் அமைப்பினர்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com