\
டோரதி - அஸ்வின்
டோரதி - அஸ்வின்dorothy / ashwin yt

’டோரதி படத்தை மோசமாக சித்தரித்து விமர்சிப்பது தவறு..’! - அஸ்வின் பாராட்டு

டோரதி திரைப்படம் மீது வைக்கப்படும் மோசமான விமர்சனங்களை தப்பானது என்று இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் பேசியுள்ளார்.
Published on: 
Summary

’டோரதி’ திரைப்படம் சமூக சிக்கல்களை உணர்வுபூர்வமாக சித்தரித்துள்ளது. படத்தை பிடிக்கவில்லை என்பதற்காக மோசமாக விமர்சிப்பது தவறு என கிரிக்கெட் வீரர் அஸ்வின் கருத்து தெரிவித்தார். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் படைப்பை பாராட்டிய அவர், சினிமா சமூகத்தை பிரதிபலிக்கிறது என்பதையும், அதில் உள்ள கருத்துகளை ஆழமாக புரிந்துகொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், சனந்த் மற்றும் ரிஷிகாந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் திரைப்படம் ’டோரதி’. இப்படம் திரையரங்கில் வெளியானதிலிருந்தே சில தரப்பினரால் விமர்சிக்கப்பட்டும், மற்றொரு தரப்பினரால் பாராட்டப்பட்டும் வருகிறது.

திரைப்படத்தை பொறுத்தவரையில் ஒரு ஆண் திருநங்கையாக மாறும் போது குடும்ப சூழல், சமூக கட்டமைப்பால் எப்படி பாதிப்பிற்குள்ளாகிறாள், இச்சமூகம் எப்படி அவரை பார்க்கிறது என்பதை மையமாக கொண்டு பேசப்பட்டுள்ளது. அதை உண்மைக்கு நெருக்கமாக படம்பிடித்து காண்பித்துள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

dorothy
dorothy dorothy / jio studios

இருப்பினும் படத்தின் முடிவில் நண்பர்களாக இருந்தவர்கள் காதலர்களாக மாறுவதும், முத்தக்காட்சியுடன் படத்தை முடித்ததும் சில தரப்பு ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்தசூழலில் படம் பிடிக்கவில்லை என்பதற்காக அதை புறக்கணிக்க வேண்டும் என மோசமாக விமர்சிப்பது தவறான விசயம் என இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் பேசியுள்ளார்.

டோரதி படம் குறித்து தன்னுடைய யூடியூப் சேனலில் பேசியிருக்கும் அஸ்வின், “டோரதி படத்தின் ஸ்டோரி மாற்றுபாலினத்தவரை பற்றியது. இதுல என்னால புரிந்துகொள்ள முடியாத விசயம் என்னன்னா, ஒரு படத்தை ஒருத்தர் எடுக்குறாரு, ஒரு ரசிகனா நான் போய் பார்க்குறன், அந்தப் படத்த நான் எவ்வளவு ரசிக்குறன், எவ்வளவு புடிச்சிருக்கு புடிக்கல அப்படிங்கிறது என்னுடைய விருப்பம். அதேபோல இன்னொருத்தர் அவங்களுக்கு புடிச்சிருக்கு புடிக்கலனு சொல்றது அவங்க விருப்பம். அதை நாம தப்பு சொல்ல முடியாது.

ஆனால் அந்தப்படத்தை பிடிக்கவில்லை என்பதற்காக மோசமாக பேசுவது எனக்கு ரொம்ப தப்பா தெரியுது. ஒரு அழுத்தம் நிறைந்த கதையை இன்றைய காலகட்டத்துல, இந்தமாதிரி சமூகச்சூழல் உள்ள நிலைமைல எடுத்துட்டுவந்து இவ்வளவு அழகா காட்டியிருக்காங்க. அதிலும் ஒரு இடத்தில் சினிமடோகிராஃபி, கேமரா ஒர்க் அவ்வளவு அற்புதமாக எடுத்திருந்தாங்க. கார்த்திக் சுப்புராஜ் ஒரு சிறந்த படத்தை செய்திருக்கிறார். என்னுடைய டிக்கெட்டுக்கான காசுக்கு தகுதியான படம் டோரதி. சினிமாங்கிறது நம்மள சுத்தி நடக்குறதோட ஒரு பிரதிபலிப்பு. அதுல காட்டப்படுற விசயங்கள சில நேரங்களில் நாம தீவிரமா எடுத்துக்கணும், ஆனா பல நேரங்கள்ல அந்தப்படத்துல நடிச்சவங்கள தீவிரமா எடுத்துட்டு சொன்ன விசயத்த மறந்துடுறோம்” என பேசியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com