2 பாகங்களாக வரப்போகிறது இந்தியன் 2? வில்லன் இவர்தானா? அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்ஸ்!

நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தின் அறிமுக வீடியோவை நடிகர் ரஜினிகாந்த் இன்று வெளியிட உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
Indian 2
Indian 2PT Web

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் ரகுல் ப்ரீத்சிங், காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, சித்தார்த், பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் பெரும்பான்மையான படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியன் 2
இந்தியன் 2

இதன் கிராபிக்ஸ் பணிகள் அமெரிக்காவில் நடந்துவரும் நிலையில் படத்தில் முக்கிய வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்து வருவதாக கூறப்படுகிறது. படத்தின் நீளம் கருதி இரண்டு பாகங்களாக இந்தியன் 2 படத்தை வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Indian 2
ஹாலிவுட்டின் லோலா வி.எஃப்.எக்ஸ்.. இளம் வயது சேனாதிபதியை தத்ரூபமாக காட்ட இந்தியன்-2 படக்குழு தீவிரம்

இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் அறிமுக வீடியோ இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தமிழ் வெர்ஷனை நடிகர் ரஜினிகாந்த் வெளியிடுகிறார்.

இந்தி வெர்ஷனை நடிகர் அமீர் கானும், தெலுங்கு வீடியோவை இயக்குநர் ராஜமவுலியும், மலையாள வெர்ஷனை மோகன்லாலும் வெளியிடவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com