காவல்துறை அனுமதியின்றி விமான நிலையத்தில் இந்தியன்-2 படப்பிடிப்பு? புகாரும் பின்னணியும்

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில், காவல் துறையினர் அனுமதியின்றி இந்தியன்-2 படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 திரைப்படம் உருவாகி வருகிறது. அதன் படப்பிடிப்பு சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் ஜூன் 19-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதற்காக, 1 கோடியே 24 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் விமான நிலைய நிர்வாகத்துக்கு, தயாரிப்பு நிறுவனமான லைகா செலுத்தியுள்ளது.

ஆனால், படப்பிடிப்பு தொடர்பான பாதுகாப்புக்கு சென்னை விமான நிலைய காவல் துறையினரிடம் திரைப்பட குழு அனுமதி பெறவில்லை என புகார் எழுந்துள்ளது. அதே சமயம், மத்திய தொழிலகப் பாதுகாப்பு வீரர்கள் பாதுகாப்போடு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இதுகுறித்த முழு விவரத்தையும், இந்த வீடியோவில் காணலாம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com