அமெரிக்க டாலருக்கு ஆப்பு.. மாலத்தீவுக்கு அடித்த ஜாக்பாட்.. ஒரேநேரத்தில் OK சொன்ன இந்தியா, சீனா!

அமெரிக்க டாலருக்குப் பதிலாக உள்நாட்டு கரன்சிகளில் அளிக்க சீனா மற்றும் இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக மாலத்தீவு தெரிவித்துள்ளது.
மாலத்தீவு, இந்தியா, சீனா
மாலத்தீவு, இந்தியா, சீனாட்விட்டர்

இந்திய மற்றும் சீன நாடுகளின் எல்லைகளைப் பகிர்ந்துகொள்ளும் நாடுகளில் மாலத்தீவும் ஒன்று. அந்நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அதிபராக மீண்டும் முகம்மது முய்சுவே வெற்றிபெற்றுள்ளார். சீனாவின் ஆதரவு நிலைபாட்டைக் கொண்டிருக்கும் முய்சு, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். அந்த வகையில், 'இந்திய ராணுவ வீரர்கள் மே மாதம் 10ஆம் தேதிக்குள் அந்நாட்டைவிட்டு வெளியேறியாக வேண்டும்' என காலக்கெடு விதித்திருந்தார்.

முகம்மது முய்சு
முகம்மது முய்சுட்விட்டர்

அதன்படி, நம்முடைய ராணுவ வீரர்களும் அந்நாட்டைவிட்டு வெளியேறினர். இதைத் தொடர்ந்து, 'இந்தியா வழங்கிய விமானத்தை இயக்கும் திறன்கொண்ட விமானிகள் மாலத்தீவு ராணுவத்திடம் இல்லை' என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் காசன் மவுமூன் தெரிவித்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிக்க: பாலஸ்தீனம் | தனி நாடாக அங்கீகரித்த 3 நாடுகள்.. தூதர்களைத் திரும்பப் பெற்ற இஸ்ரேல்!

மாலத்தீவு, இந்தியா, சீனா
”இந்தியா வழங்கிய விமானத்தை இயக்கும் திறன்கொண்ட விமானிகள் எங்களிடம் இல்லை” - மாலத்தீவு அமைச்சர்

இந்த நிலையில், மாலத்தீவு இறக்குமதி செய்யும் பொருள்களுக்கான விலையை அமெரிக்க டாலருக்கு பதிலாக உள்நாட்டு கரன்சிகளில் அளிக்க சீனா மற்றும் இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது. இதன்மூலம் ஆண்டுக்கு 1.5 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு, அதாவது நாட்டின் மொத்த இறக்குமதி செலவில் கிட்டத்தட்ட 50 சதவீதத்தை சேமிக்க முடியும் என மாலத்தீவு அரசு தெரிவித்துள்ளது.

சமீபத்தில், மாலத்தீவு இந்தியாவிடம் இறக்குமதிக்கான பணத்தை இந்திய ரூபாயில் செலுத்த ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொண்டது. அதற்கு இந்தியாவும் ஒப்புதல் அளித்தது. அதேபோல சீனாவின் வர்த்தக அமைச்சகம் மாலத்தீவு அதிபரின் கோரிக்கையை ஏற்று இறக்குமதிக்கான பணத்தை யுவானில் தர அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, மொத்த இறக்குமதி செலவில் கிட்டத்தட்ட 50 சதவீதத்தை மாலத்தீவு சேமிக்க உள்ளது.

இதையும் படிக்க: தோனி இல்லாத CSK? ரசிகர்களுக்கு சாத்தியமா.. சங்கடமா? மாற்றுவதற்கான வழி என்ன?

மாலத்தீவு, இந்தியா, சீனா
'தயவுசெஞ்சு வாங்க.. உங்களதான் நம்பியிருக்கோம்'- இந்தியாவுக்கு கோரிக்கை வைத்த மாலத்தீவு அமைச்சர்!

மாலத்தீவு இந்தியாவிடமிருந்து ஆண்டுதோறும் 780 மில்லியன் டாலர் மதிப்பிலும், சீனாவிடமிருந்து 720 மில்லியன் டாலர் மதிப்பிலும் பொருட்களை இறக்குமதி செய்கிறது. இரு நாடுகளுக்கு இடையேயான சர்வதேசளவிலான வர்த்தம் அந்தந்த நாடுகளின் கரன்சிகளில் மேற்கொள்ளப்படும்போது இரு நாடுகளின் அந்நிய செலவாணி இருப்பு மிச்சமாகும். மேலும் இரண்டு நாடுகளுக்கிடையேயான சர்வதேச வர்த்தகத்தை உள்ளூர் நாணயத்தில் மேற்கொள்வதில் வெற்றிகண்டுள்ளது மாலத்தீவு.

அதேநேரத்தில், இந்தியா - மாலத்தீவு நாடுகளுக்கு இடையிலான உறவின் விரிசலுக்குப் பிறகு அந்நாட்டின் முக்கியமான கோரிக்கைக்கு இந்தியா ஒப்புதல் அளித்திருப்பது உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது. மேலும், இத்தகைய நடவடிக்கை, சர்வதேச வர்த்தகத்தில் கொடிகட்டி பறக்கும் அமெரிக்காவின் டாலர் சாம்ராஜ்ஜியத்தைச் சரியவைக்கும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: “மேட்சுல வயசாயிடுச்சுனு யாரும் பாவம் பார்க்க மாட்டாங்க..” வெளிப்படையாகப் பேசிய தோனி!

மாலத்தீவு, இந்தியா, சீனா
மாலத்தீவு: பொதுத் தேர்தலில் சீனாவின் ஆதரவு பெற்ற அதிபர் முகம்மது முய்சுயின் கட்சி அமோக வெற்றி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com