கேகேஆர் அணி pt web
T20

கீப்பர்... ஓவர்சீஸ் பௌலர்... கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிளேயிங் லெவனில் யாருக்கு இடம்!

ஏலம் முடிந்துவிட்ட நிலையில், ஒவ்வொரு அணியின் பிளேயிங் லெவனும் எப்படி இருக்கும் என்ற அலசல் நடந்துகொண்டிருக்கிறது. இந்தக் கட்டுரையில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.

Viyan

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் கடந்த ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற்றது. கடைசியாக 3 ஆண்டுகளுக்கு முன் மெகா ஏலம் நடந்திருந்த நிலையில், அடுத்த 3 ஆண்டுகளுக்கான ஏலம் நடந்தது. ஒவ்வொரு அணிக்கும் 120 கோடி என்ற பெரும் தொகை கொடுக்கப்பட்டிருக்க, இம்முறை பல்வேறு சாதனைகள் உடைக்கப்பட்டன. பலரும் மெகா கோடீஸ்வரர்களாக உருவெடுத்தார்கள். ஏலம் முடிந்துவிட்ட நிலையில், ஒவ்வொரு அணியின் பிளேயிங் லெவனும் எப்படி இருக்கும் என்ற அலசல் நடந்துகொண்டிருக்கிறது. இந்தக் கட்டுரையில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.

வெங்கடேஷ் ஐயர்

6 வீரர்களை கொல்கத்தா ரீடெய்ன் செய்திருந்த நிலையில், அந்த அணி ஏலத்தில் ஒருசில முன்னாள் வீரர்களை மீண்டும் வாங்கியிருக்கிறது. வெங்கடேஷ் ஐயருக்கு 23.75 கோடி கொட்டியிருக்கிறது கேகேஆர். ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிக தொகைக்குப் போன நான்காவது வீரர் அவர். அதுபோக, வைபவ் அரோரா, அனுகூல் ராய், ரஹ்மானுல்லா குர்பாஸ், அங்க்ரிஷ் ரகுவன்ஷி என கடந்த சீசனில் இருந்த வீரர்களை மீண்டும் கொண்டுவந்திருப்பவர்கள், அஜிங்க்யா ரஹானே, மனீஷ் பாண்டே ஆகியோரை மீண்டும் கொல்கத்தாவுக்கு அழைத்து வந்திருக்கிறார்கள்.

மெகா ஏலத்தில் வாங்கியவர்கள்

குவிண்டன் டி காக் (3.6 கோடி), ரஹ்மானுல்லா குர்பாஸ் (2 கோடி), அஜிங்க்யா ரஹானே (1.5 கோடி), மனீஷ் பாண்டே (75 லட்சம்), ரோவ்மன் பவெல் (1.5 கோடி), மொயீன் அலி (2 கோடி), வெங்கடேஷ் ஐயர் (23.75 கோடி), அனுகூல் ராய் (40 லட்சம்), மயாங்க் மார்க்கண்டே (30 லட்சம்), அங்க்ரிஷ் ரகுவன்ஷி (3 கோடி), ஆன்ரிச் நார்கியா (6.5 கோடி), வைபவ் அரோரா (1.8 கோடி), லவ்னீத் சிசோடியா (30 லட்சம்), ஸ்பென்சர் ஜான்சன் (2.8 கோடி), உம்ரான் மாலிக் (75 லட்சம்)

ரீடெய்ன் செய்திருந்த வீரர்கள்:

வருன் சக்ரவர்த்தி (12 கோடி), சுனில் நரைன் (12 கோடி), ஆண்ட்ரே ரஸல் (12 கோடி), ரிங்கு சிங் (13 கோடி), ஹர்ஷித் ராணா (4 கோடி), ரமந்தீப் சிங் (4 கோடி)

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சிறந்த பிளேயிங் லெவன்

kkr
  1. சுனில் நரைன்

  2. ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்)

  3. அங்க்ரிஷ் ரகுவன்ஷி

  4. வெங்கடேஷ் ஐயர்

  5. ஆண்ட்ரே ரஸல்

  6. ரிங்கு சிங்

  7. ரமந்தீப் சிங்

  8. ஸ்பென்சர் ஜான்சன்

  9. வைபவ் அரோரா

  10. ஹர்ஷித் ராணா

  11. வருன் சக்ரவர்த்தி

இம்பேக்ட் பிளேயர்: அஜிங்க்யா ரஹானே

கேப்டன்?

இந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிளேயிங் லெவனையும், 2024 இறுதிப் போட்டியில் களமிறங்கிய பிளேயிங் லெவனையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த இரண்டு அணிகளுக்கும் இடையே இருப்பது 2 வித்தியாசங்கள் தான். கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் மிட்செல் ஸ்டார்க் இல்லை. ஷ்ரேயாஸ் இடத்தில் இந்த லெவனில் இருக்கும் ரகுவன்ஷி கூட கடந்த ஆண்டு அந்த அணிக்காக பல போட்டிகளில் ஆடியிருந்தார். இம்பேக்ட் வீரராக குறிப்பிடப்பட்டிருக்கும் ரஹானேவை வேண்டுமானால் புது வீரராகக் (ஆனால், அவருமே முன்னாள் நைட் ரைடர்ஸ் வீரர் தான்) கருதலாம். இது கொல்கத்தாவுக்கு நல்ல விஷயம் தான் என்றாலும், அவர்கள் தவறவிட்டிருக்கும் கேப்டன் என்ற இடத்தை நிரப்ப சரியான ஆள் இல்லை. அதற்கு அவர்கள் பதில் கண்டுபிடித்தால் எல்லாம் எளிதாக இருக்கும்.

குவின்டன் டி காக்

அதேசமயம் லெவனை எடுத்திப் பார்க்கும்போது ஒருசில இடங்களுக்கு நல்ல பேக் அப் ஆப்ஷன்களும் இருக்கின்றன. குர்பாஸ் இடத்தில் டி காக் ஆடக்கூட அதிக வாய்ப்பு இருக்கிறது. வலது - இடது காம்பினேஷனுக்காக இங்கே குர்பாஸை பிரதானப்படுத்தியிருக்கிறோம். ஆனால், டி காக் கூட மிகச் சிறந்த ஆப்ஷனாக இருக்கலாம். இடது கை வேகப்பந்தாளர் அவ்வளவு அவசியம் இல்லை என்று கருதினால் ஸ்பென்சர் ஜான்சனை அப்கிரேட் செய்ய ஆன்ரிச் நார்கியாவை உபயோகப்படுத்தலாம். இதுபோக ரோவ்மன் பவெல், மொயீன் அலி நல்ல வெளிநாட்டு பேக் அப் ஆப்ஷன்கள் வைத்திருக்கிறார்கள். மயாங்க் மார்க்கண்டே, அனுகூல் ராய், உம்ரான் மாலிக், மனீஷ் பாண்டே என இவர்கள் வைத்திருக்கும் இந்திய பேக் அப் ஆப்ஷன்கள் ஓரளவு ஐபிஎல் அனுபவம் கொண்டவர்கள் என்பது பலம்.