தோனி ஸ்டம்பிங்
தோனி ஸ்டம்பிங்web

Asia Cup| தோனியை போல No Look ரன் அவுட்.. அசத்திய ஹர்வன்ஷ் சிங்.. அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி!

நடந்துவரும் யு19 ஆசியக்கோப்பை தொடரில் யுஏஇ அணிக்கு எதிரான போட்டியில் தோனியை போல ரன்அவுட் செய்ய முயற்சித்து இணையத்தில் வைரலாகி வருகிறார் இந்தியாவின் இளம் விக்கெட் கீப்பர் ஹர்வன்ஸ் சிங்.
Published on

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலால் நடத்தப்படும் 19 வயதுக்குட்பட்டோருக்கான 50 ஓவர்கள் கொண்ட ஆசியக்கோப்பை தொடரானது நவம்பர் 29 முதல் டிசம்பர் 08-ம் தேதிவரை நடக்கிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், நேபாள், ஜப்பான் முதலிய 8 அணிகள் விளையாடுகின்றன.

லீக் போட்டிகள் நடைபெற்றுவரும் நிலையில், இந்திய அணி தங்களுடைய மூன்றாவது லீக் போட்டியில் யுஏஇ அணியை எதிர்கொண்டு விளையாடியது.

முதலில் விளையாடிய யுஏஇ அணி 137 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டான நிலையில், தொடர்ந்து விளையாடிய இந்திய அணி விக்கெட்டையே இழக்காமல் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய வைபவ் சூர்யவன்சி 76, ஆயுஸ் மத்ரே 67 ரன்களை அடித்து 16.1 ஓவரில் போட்டியை முடித்துவைத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தை பிடித்த இந்தியா அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது. இந்தியாவுடன் பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் முதலிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

இந்திய அணி டிசம்பர் 6ம் தேதி இலங்கைக்கு எதிராக அரையிறுதியில் மோதவுள்ளது.

தோனி ஸ்டம்பிங்
ENG - NZ அணிகளுக்கு 3 WTC புள்ளிகளை குறைத்து அபராதம்.. ICC-க்கு பென் ஸ்டோக்ஸ் பதிலடி பதிவு!

தோனியை போல நோ லுக் ஸ்டம்பிங்..

U19 ஆசிய கோப்பை UAE அணிக்கு எதிரான போட்டியில் இந்திய விக்கெட் கீப்பர் ஹர்வன்ஷ் சிங், ஸ்டமிங்கிற்கு பெயர்போன புகழ்பெற்ற தோனியின் நோ லுக் ரன் அவுட்டை பிரதிபலிக்க முயன்றார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வீரர் பந்தை லெக் சைடை நோக்கி விளையாடிய போது, பந்தை பவுண்டரி லைனில் தடுத்து நிறுத்திய இந்திய வீரர்கள் விக்கெட் கீப்பர் ஹர்வன்ஷ் சிங்கிடம் த்ரோ செய்தபோது, அதைப்பிடித்த இளம் கீப்பர் பின்னால் திரும்பி பார்க்காமலே தோனியை போல ஸ்டம்பை தாக்கி ரன் அவுட் செய்ய முயற்சித்தார்.

தோனியை போல நோ-லுக் ரன் அவுட்டை முயற்சித்தாலும் ஏற்கனவே பேட்ஸ்மேன் க்ரீஸுக்குள் வந்ததால் ரன் அவுட் இல்லாமல் போனது. ஆனால் விக்கெட் கீப்பர் ஹர்வன்ஷ் சிங்கின் முயற்சி பாராட்டுகளை பெற்றுவருகிறது.

தோனி ஸ்டம்பிங்
கோல்டன் டக்கில் வெளியேறிய ஹர்திக் - க்ருணால்.. hat-trick விக்கெட் கைப்பற்றி அசத்திய CSK பவுலர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com