KKR போன்ற பேட்டிங் யூனிட்.. ஃபாரின் பௌலிங் யூனிட்.. ராஜஸ்தான் ராயல்ஸ் பிளேயிங் XI எப்படி இருக்கும்?
ஐபிஎல் மெகா ஏலம் கடந்த 24, 25 ஆகிய தேதிகள் நடந்து முடிந்திருக்கிறது. எக்கச்சக்க சாதனைகள் முறியடிக்கப்பட்டிருக்கும் இந்த சீசனில் ஒவ்வொரு அணியின் செயல்பாடும் எப்படி இருக்கிறது என்று அலசிவருகிறோம். அணிகளின் சிறந்த பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்று பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்தக் கட்டுரையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைப் பற்றிப் பார்ப்போம்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 வீரர்களை ரீடெய்ன் செய்ததால் இந்த ஏலத்தில் வெறும் 41 கோடியுடன் கலந்துகொண்டது. அதனால் அவர்களால் ஏலத்தின்போதி நிறைய நட்சத்திர வீரர்களை வாங்க முடியவில்லை. பெரும்பாலான பேட்ஸ்மேன்களை அதிக தொகைக்கு அவர்கள் தக்கவைக்க முடிவு செய்ததால், மொத்த பௌலிங் யூனிட்டையும் அவர்கள் புதிதாகக் கட்டமைக்கவேண்டிய தேவை ஏற்பட்டது. ஆர்ச்சருக்கு 12.5 கோடி செலவு செய்த அந்த அணி வெளிநாட்டு ஸ்பின்னர்களை வைத்து அஷ்வின், சஹால் ஆகியோரின் இடங்களை நிரப்பியிருக்கிறது.
அத்தனை சாதனைகள் தலைப்புச் செய்தியாகிய இந்த ஏலத்தில் ஒரு வீரருக்கு வெறும் 1 கோடி செலவு செய்தே மாபெரும் செய்தியை உருவாக்கியது ராயல்ஸ். 13 வயதேயான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை அந்த அணி வாங்க, ஐபிஎல் வரலாற்றில் ஒரு பெரும் சரித்திரம் நிகழ்ந்திருக்கிறது. ஐபிஎல் அரங்கில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் மிக இளம் வீரர் என்ற மகத்தான சாதனையைப் படைத்திருக்கிறார் வைபவ்.
மெகா ஏலத்தில் வாங்கிய வீரர்கள்
ஜோஃப்ரா ஆர்ச்சர் (12.5 கோடி),
ஆகாஷ் மத்வால் (1.2 கோடி),
நித்திஷ் ராணா (4.2 கோடி),
வனிந்து ஹசரங்கா (5.25 கோடி),
துஷார் தேஷ்பாண்டே (6.5 கோடி),
மஹீஷ் தீக்ஷனா (4.4 கோடி),
வைபவ் சூர்யவன்ஷி (1.1 கோடி),
சுபம் தூபே (80 லட்சம்),
குனால் ரத்தோர் (30 லட்சம்),
குமார் கார்த்திகேயே (30 லட்சம்),
யுத்வீர் சராக் (35 லட்சம்),
ஃபசல்ஹக் ஃபரூக்கி (2 கோடி),
க்வேனா மபாகா (1.5 கோடி),
அஷோக் ஷர்மா (30 லட்சம்)
ரீடெய்ன் செய்திருந்த வீரர்கள்:
சஞ்சு சாம்சன் (18 கோடி),
யஷஷ்வி ஜெய்ஸ்வால் (18 கோடி),
ரியான் பராக் (14 கோடி),
துருவ் ஜூரெல் (14 கோடி),
சந்தீப் ஷர்மா (4 கோடி),
ஷிம்ரான் ஹெய்மேயர் (11 கோடி)
6 வீரர்களை ரீடெய்ன் செய்திருந்த அந்த அணி ஏலத்தில் 14 வீரர்களை மட்டுமே வாங்கியது. அதனால் மொத்தம் 20 வீரர்களே ராயல்ஸின் ஸ்குவாடில் இடம்பெற்றிருக்கிறார்கள்.
ராஜஸ்தான் ராயல்ஸின் சிறந்த பிளேயிங் லெவன்
1) யஷஷ்வி ஜெய்ஸ்வால்
2) சஞ்சு சாம்சன்
3) நித்திஷ் ராணா
4) ரியான் பராக்
5) துருவ் ஜூரெல்
6) ஷிம்ரான் ஹெட்மேயர்
7) வனிந்து ஹசரங்கா
8) ஜோஃப்ரா ஆர்ச்சர்
9) துஷார் தேஷ்பாண்டே
10) மஹீஷ் தீக்ஷனா
11) சந்தீப் ஷர்மா
இம்பேக்ட் பிளேயர்:
ஆகாஷ் மத்வால் அல்லது சுபம் தூபே
இந்த ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங் ஆர்டரைப் பார்க்கும்போது 2024 சீசனில் சாம்பியன்ஸ் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைப் போலத்தான் இருக்கிறது. இடது - வலது என காம்பினேஷன்களில் அந்த அணியால் விளையாட முடியும். ராயல்ஸின் டாப் 6ல் 3 இடது கை பேட்ஸ்மேன்கள் மற்றும் 3 வலது கை பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். அதனால் அவர்களின் பேட்டிங் ஆர்டரை மேலும் கீழும் மாற்றி எதிரணிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம்.
பந்துவீச்சைப் பார்க்கும்போது 3 நலல் வேகப்பந்துவீச்சாளர்களுடன் இரு இலங்கை ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள். பவர்பிளேவுக்கு துஷார் + ஆர்ச்சர் + தீக்ஷனா, மிடில் ஓவர்களில் தீக்ஷனா + ஹசரங்கா, டெத் ஓவர்களில் ஆர்ச்சர் + சந்தீப் என சரியான ஆள்கள் இருக்கிறார்கள்.
எப்போதும் இம்பேக்ட் பிளேயர் விதியை வித்தியாசமாகப் பயன்படுத்தும் ராயல்ஸ் அணி அதையே அடுத்த சீசனும் தொடரலாம். அவர்கள் பிளேயிங் லெவனில் 6 ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன்கள் + 2 பௌலிங் ஆல்ரவுண்டர்கள் இருக்கிறார்கள். 5 ஸ்பெஷலிஸ்ட் பௌலர்கள் போக பராக் ஒரு பௌலிங் ஆப்ஷனாக இருக்கிறார். அதனால் அவர்கள் தேவைக்கு ஏற்ப பௌலர் தேவையென்றால் ஆகாஷ் மத்வாலையும், பேட்ஸ்மேன் தேவையென்றால் சுபம் தூபேவையும் பயன்படுத்தலாம்.