rohit and kohli breaks 2 world records cricinfo
கிரிக்கெட்

’ஆனை ஒருத்தன்.. சேனை ஒருத்தன்..’ 2 உலகசாதனைகள் படைத்த ரோகித்-கோலி!

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட கோலி மற்றும் ரோகித் இருவரும் இரண்டு உலகசாதனைகளை படைத்து அசத்தினர்..

Rishan Vengai

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் நம்பிக்கையை நிறைவேற்றினர். ரோகித் அதிக சிக்சர்கள் அடித்து பாகிஸ்தான் வீரரின் உலகசாதனையை உடைத்தார்; கோலி 52வது ஒருநாள் சதத்தால் சச்சினின் உலகசாதனையை முறியடித்து கிரிக்கெட் வரலாற்றில் புதிய பக்கத்தை எழுதினார்.

இந்தியா-தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயண போட்டிகளானது இந்தியாவை நிலைகுலைய வைப்போம் என்ற தென்னாப்பிரிக்காவின் தலைமை பயிற்சியாளர் மற்றும் 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரில் வென்ற தென்னாப்பிரிக்காவின் வெற்றி என பரபரப்பாக நடந்துவருகிறது..

இந்தியாவில் தொடரை வென்ற தென்னாப்பிரிக்கா

இந்தசூழலில் டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட வரலாற்று தோல்விக்கு இந்தியாவின் இருபெரும் ஜாம்பவான் கிரிக்கெட்டர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஒருநாள் தொடரில் பழிதீர்ப்பார்கள் என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே இருந்தது..

இந்நிலையில் நேற்று நடைபெற்ற தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நினைத்ததை போலவே ரோகித் சர்மா அரைசதமும், விராட் கோலி சதமும் அடித்து ரசிகர்களின் நம்பிக்கையை நிரூபித்தனர்.. மேலும் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 2 உலகசாதனைகளை படைத்து தாங்கள் ஏன் கிரிக்கெட் உலகின் தலைசிறந்த வீரர்கள் என்பதை நிரூபித்தனர்..

ரோகித் படைத்த உலகசாதனை

நேற்று நடைபெற்ற தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 51 பந்தில் 57 ரன்களை விரட்டிய ரோகித் சர்மா, அதில் 5 பவுண்டரிகளையும் 3 சிக்சர்களையும் பறக்கவிட்டிருந்தார்..

இந்த போட்டியில் 3 சிக்சர்கள் அடித்ததன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்சர்கள் அடித்த வீரராக உலகசாதனை படைத்தார்..

இதற்குமுன்னர் 369 இன்னிங்ஸ்களில் 351 சிக்சர்கள் விளாசி முதலிடத்தில் இருந்த பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடியை, 269 இன்னிங்ஸ்களில் 352* சிக்சர்கள் விளாசி பின்னுக்கு தள்ளி புதிய வரலாறு படைத்தார் ரோகித் சர்மா..

கோலி படைத்த உலகசாதனை!

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 135 ரன்கள் விளாசிய கிங் கோலி தன்னுடைய 52வது ஒருநாள் சதத்தை பதிவுசெய்து அசத்தினார்.. இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் அல்லது ஒருநாள் கிரிக்கெட் இரண்டிலும் ஒரு வடிவத்தில் அதிக சதங்கள் விளாசிய சச்சின் டெண்டுல்கரின் உலகசாதனையை உடைத்தார்..

சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் வடிவத்தில் 49 சதங்களும், டெஸ்ட் வடிவத்தில் 51 சதங்களும் அடித்திருந்தார்.. இந்தசூழலில் விராட் கோலி ஒருநாள் வடிவத்தில் 52 சதங்கள் அடித்து புதிய உலகசாதனை படைத்தார்.. இது அவருடைய 83வது சர்வதேச சதமாக பதிவுசெய்யப்பட்டது..