மழை, தங்கம் pt web
இந்தியா

HEADLINES | 22 மாவட்டங்களுக்கு கனமழை முதல் புதிய உச்சத்தை எட்டியது தங்கம் விலை வரை

இன்றைய தலைப்புச் செய்திகளில் 22 மாவட்டங்களுக்கு கனமழை முதல் புதிய உச்சத்தை எட்டியது தங்கம் விலை வரையிலான செய்திகளைப் பார்க்கலாம்.

PT WEB

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் சூழலில், தேனி, தென்காசி, நெல்லை, ராமநாதபுரத்திற்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை... தென் தமிழகம், வடதமிழகம், காவிரிப் படுகையில் உள்ள 22 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கணிப்பு...

தேனி, தூத்துக்குடி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை... சேலம் சங்ககிரியில் பெய்த மழையால் காவல்நிலையம், நீதிமன்ற வளாகத்தில் தேங்கிய தண்ணீர்...

கனமழை எச்சரிக்கை

ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவில் திடீரென கொட்டிய கனமழை... செய்துங்கநல்லூர் வாரச்சந்தையில் கடைகள் அமைத்திருந்த வியாபாரிகள் பாதிப்பு...

தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கடைவீதிகளில் அலைமோதிய கூட்டம்... பொருட்கள், புத்தாடைகள் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்....

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்... சென்னையில் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் பேருந்து நிலையங்களை இணைக்கும் வகையில் 275 சிறப்புப் பேருந்துகளை இயக்க ஏற்பாடு...

அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்... 1 லட்சம் ஊழியர்களுக்கு வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டதாக தமிழக அரசு தகவல்...

தீபாவளி பண்டிகையையொட்டி கூடுதலாக சிறப்பு ரயில்களை அறிவித்தது தெற்கு ரயில்வே... கோவை, கன்னியாகுமரி பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு...

தீபாவளியையொட்டி தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் திடீர் சோதனை.... 10க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் கைது; கணக்கில் வராத பணம் லட்சக்கணக்கில் பறிமுதல்...

கரூர் பரப்புரைக்கு தவெக தலைவர் தாமதமாக வந்ததே கூட்ட நெரிசலுக்கு காரணம் என முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு... காவல்துறையினரின் அறிவுறுத்தல்களுக்கு தவெகவினர் செவி சாய்க்கவில்லை எனவும் விமர்சனம்...

அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் கரூரில் கூட்ட நெரிசலை தடுத்திருக்கலாம் என பழனிசாமி பேச்சு... வேலுச்சாமிபுரத்தில் கூட்ட நெரிசல் ஏற்படும் என அதிமுகவுக்கு ஏற்கனவே அனுமதி மறுக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு...

கரூர் விவகாரத்தில் சட்டமன்றத்தில் ஆணித்தரமாக பேச முடியாத பழனிசாமி வெளியே பயில்வான் வேடம் போட்டிருக்கிறார்... எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி

கரூர் துயரத்திற்கு காவல் துறையின் கவனக்குறைவே காரணம் என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு... கரூர் சம்பவம் தொடர்பாக முதல்வரின் பதில் திருப்தி அளிக்கவில்லை எனவும் கருத்து...

மதுரை கிளை உயர்நீதிமன்றம்

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது.... உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து....

தவெக மாவட்ட செயலர் மதியழகன், நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோரை ஜாமீனில் விடுவித்தது கரூர் நீதிமன்றம்... வழக்கை சிபிஐ கையில் எடுக்கவுள்ள நிலையில் தவெக நிர்வாகிகள் விடுவிப்பு...

இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக வெளியான செய்திக்கு தமிழக அரசு மறுப்பு... முற்றிலும் வதந்தியே என தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்....

மதுரை மாநகராட்சி திமுக மேயர் இந்திராணி பொன்வசந்த் ராஜிநாமா... சொத்துவரி முறைகேடு வழக்கில் கணவர் கைதான நிலையில் பதவி விலகல்...

கர்நாடக முதல்வராக அடுத்த மாதம் பதவியேற்கிறாரா டி.கே.சிவகுமார்?.... நவம்பர் புரட்சி என வெளியான தகவலுக்கு முதல்வர் சித்தராமையா மறுப்பு...

பிகார்

பிஹாரில், ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவரும், எம்எல்ஏவுமான கேதார்நாத், பாஜகவில் ஐக்கியம்... கட்சியில் இணைந்ததும் வேட்பாளராக அறிவித்தது பாஜக...

பிஹாரில், காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்வுக்கு எதிராக கட்சித் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்... தங்களுக்கு விருப்பமான தலைவர்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை என குற்றம்சாட்டி முழக்கம்..

மத்தியப் பிரதேசத்தில், கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை உட்கொண்டதால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 24ஆக உயர்வு... சிந்த்வாரா மாவட்டத்தில் மேலும் இரண்டு குழந்தைகள் உயிரிழந்த பரிதாபம்...

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே மோதல் நீடித்த நிலையில், 48 மணி நேர சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புதல்.... எல்லையில் பதற்றத்தை தணிக்க தற்காலிக போர் நிறுத்த உடன்படிக்கை...

புதிய உச்சத்தை எட்டியது தங்கம் விலை.. சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து 94ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை

2030ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளை அகமதாபாத்தில் நடத்த பரிந்துரை... நவம்பர் 26இல் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு கழகத்தின் பொதுச்சபை கூட்டத்தில் இறுதி முடிவு...

சர்வதேச கால்பந்து போட்டிகளில் மேலும் ஒரு வரலாற்று சாதனை படைத்த லியோனல் மெஸ்சி... சக வீரர்கள் கோல் அடிப்பதற்கு அதிக ASSISTS கொடுத்த வீரர் என்ற நெய்மரின் சாதனையை முறியடித்து அசத்தல்...

மெட்டா நிறுவனத்துடன் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் ஒப்பந்தம்... மெட்டா ஏஐ-இல் கேட்கப்படும் கேள்விகளுக்கு தீபிகா குரலில் பதில்...

'கைதி'யின் மலாய் மொழி ரீமேக்கான பாண்டுவான் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு... சாம் சிஎஸ்-ஸின் பின்னணி இசையில் மிரட்டலான சண்டைக்காட்சிகள்..