’கைதி’ பட மலாய் ரீமேக்.. வெளியான ட்ரெய்லர்! | Kaithi | Banduan
கார்த்தி நடிப்பில் லோகேஷ் இயக்கி 2019இல் வெளியான படம் `கைதி'. மிகப்பெரிய ஹிட்டான இப்படம் வசூலிலும் நல்ல கலெக்ஷனை பெற்றது. மேலும் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்க்கு துவக்கமாகவும் அமைந்தது. இப்படத்தை Bholaa என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்து இயக்கி நடித்தார் அஜய் தேவ்கன். அதனைத் தொடர்ந்து இப்படம் மலாய் மொழியில் Banduan என ரீமேக் செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டது.
இப்போது அப்படம் ரிலீசுக்கு தயாராகிவிட்டது. Kroll Azry இயக்கியுள்ள இப்படத்தில் Aaron Aziz லீட் ரோலில் நடித்துள்ளார். Number Twenty One Media இணைந்து இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மலாய் மொழியிலும் இப்படத்திற்கு சாம் சிஎஸ்தான் பின்னணி இசையமைத்திருக்கிறார். கடந்த மாதம் இப்படத்தின் டீசர் வெளியான நிலையில் இன்று இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இப்படம் மலேசியாவில் நவம்பர் 6ம் தேதி வெளியாகவுள்ளது.