heavy rain in tamilnadu next 24 hours on 16 districts
கனமழைpt web

தொடங்கும் வடகிழக்குப் பருவமழை.. 24 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஒருவாரத்திற்கு மழை தொடரும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Published on
Summary

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஒருவாரத்திற்கு மழை தொடரும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வரும் 19-ஆம் தேதியன்று, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், கேரள - கர்நாடக பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்குப் பருவமழை விலகி, வடகிழக்குப் பருவமழை தொடங்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

heavy rain in tamilnadu next 24 hours on 16 districts
கனமழைpt desk

இதன் காரணமாக இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 24 மணி நேரத்தில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் காரைக்காலில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. மேலும் கடலூர், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

heavy rain in tamilnadu next 24 hours on 16 districts
9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம் தகவல்

நாளை (16-10-2025) தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

heavy rain in tamilnadu next 24 hours on 16 districts
கனமழைஎக்ஸ் தளம்

சென்னையைப் பொறுத்தவரை நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

heavy rain in tamilnadu next 24 hours on 16 districts
10 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை.. சென்னையிலும் மழைக்கு வாய்ப்பு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com