இப்ராஹிம் ஜத்ரான் - ரசீத் கான் - அஸ்மதுல்லா ஓமர்சாய்
இப்ராஹிம் ஜத்ரான் - ரசீத் கான் - அஸ்மதுல்லா ஓமர்சாய்pt

NO.1 பவுலர்.. NO.1 ஆல்ரவுண்டர்.. NO.2 பேட்ஸ்மேன்.. ICC தரவரிசையில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் ஆதிக்கம்!

வங்கதேசத்துக்கு எதிரான ஒயிட்வாஷ் ஒருநாள் தொடருக்கு பிறகு ஆப்கானிஸ்தான் கேப்டன் ரசீத்கான் நம்பர் 1 ஒருநாள் பந்துவீச்சாளராக மாறினார்.
Published on
Summary

வங்கதேசத்துக்கு எதிரான ஒயிட்வாஷ் ஒருநாள் தொடருக்கு பிறகு ஆப்கானிஸ்தான் கேப்டன் ரசீத்கான் நம்பர் 1 ஒருநாள் பந்துவீச்சாளராக மாறினார்.

ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே யுஏஇ-ல் 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றது.

இதில் 3 டி20 போட்டிகளிலும் வெற்றிபெற்ற வங்கதேச அணி ஆதிக்கம் செலுத்த, ஒருநாள் போட்டிகளில் வலுவான கம்பேக் கொடுத்த ஆப்கானிஸ்தான் அணி 3-0 என வென்று பதிலடி கொடுத்தது.

ரசீத் கான்
ரசீத் கான்

இதில் மொத்தமாக 11 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஆப்கானிஸ்தான் கேப்டன் ரசீத் கான், ஒரு போட்டியில் 17 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இந்நிலையில் சமீபத்திய ஐசிசி தரவரிசை அப்டேட்டின் படி, ஒருநாள் பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் முதலிடத்தை பிடித்து ரசீத் கான் அசத்தியுள்ளார்.

இப்ராஹிம் ஜத்ரான் - ரசீத் கான் - அஸ்மதுல்லா ஓமர்சாய்
கைக்குலுக்கி கொண்ட IND-PAK ஹாக்கி வீரர்கள்.. கிரிக்கெட் வாரியத்தை விமர்சிக்கும் நெட்டிசன்கள்!

ஜெய்ஸ்வால் 5வது இடம் பிடித்து அசத்தல்..

சமீபத்திய ஐசிசி தரவரிசை அப்டேட்டின் படி, வங்கதேச தொடரில் சிறப்பாக செயல்பட்ட ரசீத் கான் ஒருநாள் பந்துவீச்சாளர் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

அதேபோல வங்கதேச தொடரில் 71 சராசரியுடன் 213 ரன்கள் குவித்த இம்ராஹிம் ஜத்ராம் ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசையில் 2வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். இது ஒரு ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேனின் அதிகபட்ச ரேங்கிங்காகும்..

அதேபோல ஒருநாள் கிரிக்கெட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் அஸ்மதுல்லா ஓமர்சாய் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார். இந்தியாவை பொறுத்தவரையில் ஜெய்ஸ்வால் 5வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட குல்தீப் யாதவ், டெஸ்ட் பவுலர்கள் தரவரிசையில் 7 இடங்கள் முன்னேறி 14-வது இடத்தை பிடித்துள்ளார்.

இப்ராஹிம் ஜத்ரான் - ரசீத் கான் - அஸ்மதுல்லா ஓமர்சாய்
”என்கிட்ட மோதுங்க, 23 வயது வீரரை விமர்சிக்காதீங்க” - சீக்காவை சாடிய கம்பீர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com