ஒசூர் அருகே இரவு நேரத்தில் காரில் வந்து பணம், நகை ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றதாக 5 பேரை கைது செய்துள்ள போலீசார், இருவரை தேடி வருகின்றனர்.
உத்தனப்பகிள்ளி அருகே தோட்டத்து வீட்டில் இருந்தவர்களை தாக்கி நகை மற்றும் பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, முகமுடி அணிந்து காரில் வந்த 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கரூரில் வழக்கறிஞரை கத்தியால் குத்திவிட்டு 6 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 5 சவரன் நகைகளை கொள்ளையடித்த வழக்கில் சக வழக்கறிஞர் உட்பட 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல்லில் சித்த மருத்துவரை கடத்தி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த வழக்கில் 7 பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டம். ஆட்சியர் உத்தரவின் பேரில் நாமக்கல் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆம்பூர் அருகே பூட்டிய வீட்டில் மிளகாய் பொடியை தூவி 3 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 5 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உமராபாத் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஆம்பூரில் தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து, 25 சவரன் தங்க நகை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை போன சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.