3 பேர் கைது
3 பேர் கைதுpt desk

கரூர் | வழக்கறிஞரை தாக்கி ரூ.6 லட்சம் பணம் 5 சவரன் நகைகள் கொள்ளை – 3 பேர் கைது

கரூரில் வழக்கறிஞரை கத்தியால் குத்திவிட்டு 6 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 5 சவரன் நகைகளை கொள்ளையடித்த வழக்கில் சக வழக்கறிஞர் உட்பட 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
Published on

செய்தியாளர்: வி.பி.கண்ணன்

கரூர் சுங்ககேட் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் வழக்கறிஞரான இவர், கடந்த 25ம் தேதி இரவு இவரது வீட்டுக்குள் முகமூடி அணிந்தபடி 3 நபர்கள் புகுந்துள்ளனர். இதையடுத்து ஆறுமுகத்தை கத்தியால் குத்தி விட்டு அவரது வீட்டில் இருந்து 6 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் ஐந்து சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

Arrested
Arrestedpt desk

இது தொடர்பாக கரூர் மாவட்ட போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், கரூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றும் ராஜீவ் காந்தி, அவரது நண்பர்கள் பிரசாந்த், மற்றொரு பிரசாந்த் ஆகிய 3 பேரும் ஆறுமுகம் வீட்டுக்குள் புகுந்து அவரை கத்தியால் குத்திவிட்டு வீட்டில் இருந்த 6 லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் 5 சவரன் நகைகளை கொள்ளையடித்ததுச் சென்றது தெரியவந்தது.

3 பேர் கைது
தூத்துக்குடி | ரகசிய தகவலை அடுத்து அதிரடி சோதனை – 24 கிலோ கஞ்சா பறிமுதல் 6 பேர் கைது

இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 6 லட்சம் ரூபாய் பணம் 5 சவரன் தங்க நகைகள் மற்றும் 50 கிராம் மதிப்புள்ள 45 தங்க காயின்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com