2025 ஆம் ஆண்டில் PF உறுப்பினர்களுக்கு முக்கியமான ஒரு அம்சம் வரவுள்ளது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) செயல்பாட்டில் பல மேம்பாடுகளைச் செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
வருங்கால வைப்பு நிதியான பி. எஃப். கணக்கில் இருந்து ஏடிஎம் மூலம் பணத்தை எடுத்துக் கொள்ளும் வசதி, அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.