பி.எஃப். முகநூல்
இந்தியா
விரைவில் PF கணக்கில் இருந்து ஏடிஎம் மூலம் பணம் எடுக்கலாம்!
வருங்கால வைப்பு நிதியான பி. எஃப். கணக்கில் இருந்து ஏடிஎம் மூலம் பணத்தை எடுத்துக் கொள்ளும் வசதி, அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வருங்கால வைப்பு நிதியான பி. எஃப். கணக்கில் இருந்து ஏடிஎம் மூலம் பணத்தை எடுத்துக் கொள்ளும் வசதி, அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய தொழிலாளர் நலத்துறை செயலர் சுமிதா, பி.எஃப். கணக்கில் இருந்து முன்பணம் கோருவோருக்கு, அதை விரைவாக வழங்க ஏற்பாடுகள் நடந்து வருவதாகக் கூறினார்.
ஏ.டி.எம். வழியாக பி.எஃப். கணக்கில் இருந்து பணம் எடுக்கும் நடைமுறைக்கான பணிகள் நடந்து வருவதாகவும், வரும் ஜனவரி மாதத்திற்குள் பணிகள் நிறைவு பெற்று, இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். தற்போதைய நிலவரப்படி சுமார் 7 கோடி பி.எஃப். கணக்குகள் இருப்பதாக தொழிலாளர் நலத்துறை கூறியுள்ளது.