100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கேரளாவில் பிஎம் ஸ்ரீ பள்ளித் திட்டத்தின் அமலாக்கத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக மாநில அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் இதை உறுதிபடுத்தியுள்ளார்.
பாகிஸ்தானுக்கு உளவு கூறிய புகாரில் கைதாகியுள்ள இந்திய யூட்யூபர் ஜோதி மல்ஹோத்ராவை கேரள அரசு தனது சுற்றுலா தூதராக வைத்திருந்தது என தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது.