PT HeadLines | பிஎம் ஸ்ரீ திட்டத்தில் கேரள அரசு திடீர் முடிவு To மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
சீன அதிபர் ஷி ஜின்பிங்கை நாளை சந்திக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.. தங்கள் நாடும் உலகமும் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என ட்ரம்ப் பேச்சு
பிஹாரில் மீண்டும் காட்டாட்சியை கொண்ட வர ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் முனைப்பு.. தேர்தல் பரப்புரையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சு...
இளைஞர்களை திசை திருப்பவே டேட்டா கட்டணத்தை குறைவாக வைத்திருப்பதாக ராகுல் காந்தி விமர்சனம்.. சமூக ஊடகங்கள் இல்லாவிட்டால்மோடிக்கும் நிதிஷ் குமாருக்கும் எதிராக இளைஞர்கள் போராட ஆரம்பித்துவிடுவார்கள் என பேச்சு..
கேரளாவில் பிஎம் ஸ்ரீ பள்ளித் திட்ட அமலாக்கம் தற்காலிகமாக நிறுத்தம்... மாநில அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் அறிவிப்பு
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் தொடர்பாக தேர்தல் ஆணையம் சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம்.... திமுக, அதிமுக, பாஜக, பாமக, விசிக, நாம் தமிழர், இடதுசாரிகள், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு
வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க தவெகவுக்கு அழைப்பு... தலைமை அலுவலகத்திற்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தார் வீட்டுவசதி வாரிய தலைவர் பூச்சி முருகன்
எஸ்ஐஆர் என்ற பெயரில் வாக்குரிமையை பறிக்க பாஜக சதி செய்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு... ஜனநாயகத்தின் அடித்தளமான வாக்குரிமையை எந்த வகையிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என உறுதி...
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி விரக்தியின் உச்சத்தில் இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்... நெல் கொள்முதல் விவகாரத்தில் தவறான தகவல்களை பழனிசாமி கூறி வருவதாகவும் குற்றச்சாட்டு...
திமுக ஆட்சியில் எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு... நகராட்சி நிர்வாகத்துறை பணி நியமன ஊழல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தல்...
ஊழல் வேட்கையில் இளைஞர்களின் வாழ்வை வேட்டையாடிய திமுக அரசு... வேலைவாய்ப்பு ஊழல் புகாரில் சிபிஐ விசாரணை தேவை என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு...
தமிழகத்தில் 888 கோடி ரூபாய் அளவுக்கு அரசு வேலைவாய்ப்பில் ஊழல் நடந்திருப்பதாக அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு.... வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் சிபிஐ விசாரணைக்கு மாற்றவும் வலியுறுத்தல்
நகராட்சி நிர்வாகத் துறை உதவி செயற்பொறியாளர் நியமனத்தில் முறைகேடுகள் நடைபெறவில்லை என அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்... அரசுக்கு களங்கம் கற்பிக்கும் முயற்சி எக்காலத்திலும் வெற்றி பெறாது என அறிக்கை...
நகராட்சி நிர்வாக துறை உதவி செயற்பொறியாளர்கள் நியமனத்தில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை என தமிழக அரசு விளக்கம்.. அமலாக்கத்துறை கடிதம் குறித்து தகவல் இல்லை என்றும் அரசு செயலாளர் கார்த்திகேயன் ஐஏஎஸ் பதில் ...
நவம்பர் 5ஆம் தேதி தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என கட்சித் தலைவர் விஜய் அறிவிப்பு... தவெகவினர் அடுத்த அடியை நிதானமாகவும் தீர்க்கமாகவும் எடுத்து வைக்க வேண்டும் என அறிவுறுத்தல்...
மீண்டும் 90 ஆயிரம் ரூபாயைக் கடந்தது ஆபரண தங்கத்தின் விலை.. ஒரே நாளில் சவரனுக்கு 2 ஆயிரம் ரூபாய் உயர்வு...
டெல்லியில் செயற்கை மழை பொழியவைக்கும் முயற்சி தற்காலிகமாக நிறுத்தம்... காற்றில் உரிய ஈரப்பதம் இல்லை என கான்பூர் ஐஐடி நிபுணர்கள் விளக்கம்
மஹாராஷ்டிராவில் வேளாண் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி வலுக்கும் போராட்டம்... தேசிய நெடுஞ்சாலையில் திரண்டு விவசாயிகள் மறியலில் ஈடுபட்டதால் முடங்கிய போக்குவரத்து...
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி ரத்து... மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு...

