அதிமுக-பாஜக கூட்டணியை சந்தர்பவாத கூட்டணி என்று கூட சொல்ல முடியாது. அது, ஓனர்களுக்கும் அடிமைகளுக்குமான கூட்டணியாக மாறி வருகிறது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
அனைத்து மாநிலங்களுக்கும் தொகுதிகளுக்கான பிரதிநிதித்துவம் சரிசமமாக இருக்க வேண்டும் என்றே திமுக கோரிக்கை வைத்துள்ளது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.