சென்னை டிநகரில் அகரம் அறக்கட்டளையின் புதிய கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது, அதில் பங்கேற்று பேசிய நடிகர் சூர்யா தற்போதைய சூழலில் மாணவர்களின் கல்விக்கனவின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
தனியாக செயல்படுவதை விட அரசாங்கத்தோடு இணைந்து செயல்படுவதால் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு கல்வி உதவியை கொடுக்க முடிவதாகவும், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தலை வணங்குவதாகவும் நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.