
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் `வா வாத்தியார்'. இப்படம் டிசம்பர் 12 வெளியாக இருந்த நிலையில், சில பண சிக்கல்களால் தள்ளி வைக்கப்பட்டது. இந்தப் படத்தில் எம் ஜி ஆர் சம்பந்தமான விஷயங்கள் நிறைய இருக்கிறது என்பதால், தற்போது இப்படத்தை எம் ஜி ஆர் நினைவு நாளான டிசம்பர் 24ல் கொண்டு வர முயற்சிகள் நடப்பதாக சொல்லப்படுகிறது.
ராம்குமார் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் மாதவன் நடிப்பில் `G.D.N' என்ற பெயரில் உருவாகிவந்தது ஜி டி நாயுடு பயோபிக். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
சிவகார்த்திகேயன் நடித்து பொன்ராம் இயக்கி பெரிய ஹிட்டான படம் `வருத்தப்படாத வாலிபர் சங்கம்'. இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் கதை தயாராக இருப்பதாகவும், அதில் சிவகார்த்திகேயனின் தற்போதைய வளர்ச்சியை மனதில் வைத்து மாற்றங்கள் செய்ய வேண்டும் எனவும் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார் இயக்குநர் பொன்ராம்.
`நாட்டாமை', `ராசையா', `அவ்வை சண்முகி', `ஜெமினி' உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான ராணியின் மகள் தார்னிகா, சண்முக பாண்டியன் நடித்துள்ள `கொம்பு சீவி' படம் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.
`ஜாதிரத்னாலு', `ப்ரின்ஸ்' படங்களை இயக்கியவர் அனுதீப். தற்போது இவர் இயக்கியுள்ள `Funky' படம் பிப்ரவரி 13ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியில் சுஷ்மிதா சென் நடித்த சீரிஸ் `ஆர்யா'. தற்போது இந்த சீரிஸ் காஜல் அகர்வால் நடிப்பில் தெலுங்கில் `Vishakha' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட உள்ளது.
பிரபாஸ் நடிப்பில் மாருதி இயக்கியுள்ள படம் `தி ராஜா சாப்'. இப்படத்தின் `சஹானா சஹானா' வீடியோ பாடல் டிசம்பர் 17ம் தேதி வெளியாகிறது. தற்போது அப்பாடலின் புரோமோ வெளியாகியுள்ளது.
ரவி கிரண் கோலா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார் எனவும், இப்படத்திற்கு Rowdy Janardhana எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
கன்னடத்தில் `Harivu', `19.20.21', `Nathicharami', `Act 1978' போன்ற படங்கள் மூலம் கவனம் பெற்றவர் மன்சோரே. இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் அறிமுகமாக உள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கியுள்ள `Avatar: Fire and Ash' படம் டிசம்பர் 19 வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கு தகுந்தது போல திரையரங்குகளில் எப்படியான விஷயங்களை செய்ய வேண்டும் என அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார் ஜேம்ஸ் கேமரூன்.