
விஜய் நடித்துள்ள `ஜனநாயகன்' ஜனவரி 9ம், சிவகார்த்திகேயனின் `பராசக்தி' ஜனவரி 14ம் வருவதாக தேதியைக் குறித்துள்ளன. இப்போது தெலுங்கில் `ராஜா சாப்', சிரஞ்சீவியின் `Mana Shankara Vara Prasad Garu', ரவிதேஜாவின் `BMW' ஆகிய படங்கள் வர இருக்கின்றன. எனவே 14 வரை காத்திருந்தா பராசக்திக்கு தெலுங்கில் தியேட்டர்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்படலாம் என்பதால் படத்தை ஜனவரி 9 அல்லது 10 வெளியிடலாம் என பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடிக்கவுள்ள படத்தில் ரெஜினா காசென்ட்ரா ஒரு பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
மிதுன் பாலாஜி இயக்கத்தில் கோமதி சங்கர் நடித்து நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியான `ஸ்டீபன்' படத்தை எக்ஸ் தளத்தில் பாராட்டியுள்ளார் நடிகர் சூர்யா.
கிஷோர் நடிப்பில் உருவாகியுள்ள `மெல்லிசை' படத்திலிருந்து வார்த்தை தனித்தனி பாடல் வெளியாகியுள்ளது.
சாம்பியன் படம் மூலம் விரைவில் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார் அனஸ்வரா ராஜன். முதல் படம் வெளியாகும் முன்பே இரண்டாவது தெலுங்கு படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார் அனஸ்வரா. மகேஷ் அப்படத்தை இயக்குகிறார்.
பவன் கல்யாண் நடித்துள்ள `உஸ்தாத் பகத் சிங்' படத்தின் Dekhlenge Saala பாடல் வெளியாகியுள்ளது.
மோகன்லால் நடித்துள்ள `Vrusshabha' படத்திலிருந்து அப்பா வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.
அனிருமா ஷர்மா, நேஹா இயக்கியுள்ள `Four More Shots Please' சீரிஸின் கடைசி சீசன் டிரெய்லர் வெளியாகியுள்ளது. டிசம்பர் 19ம் தேதி அமேசான் தளத்தில் வெளியாகிறது இந்த சீரிஸ்.
Amar Singh Chamkila படத்திற்கு பிறகு இம்தியாஸ் அலி மற்றும் தில்ஜீத் கூட்டணி புதிய படத்தில் இணைந்துள்ளது. இப்படத்தில் தில்ஜீத் சார்ந்த காட்சிகள் நிறைவடைந்துள்ளது.
Kitao Sakurai இயக்கத்தில் உருவாகி வரும் படம் `Street Fighter'. இப்படத்தின் Sneak Peek தற்போது வெளியாகியுள்ளது. படம் அடுத்தாண்டு அக்டோபர் 16 வெளியாகவுள்ளது.