அடுத்தடுத்து பாய்ந்த குண்டுகள்.. அமெரிக்க அதிபர் கென்னடியை கொன்றது யார்? நீளும் 60 ஆண்டு மர்மம்!

60 வருடத்திற்கு முன்பு நவம்பர் 22ம் தேதி, மக்களை பார்த்துக்கொண்டே சந்தோஷமாக கையசைத்துக்கொண்டு காரில் பயணம் செய்த அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடியை இரண்டு துப்பாக்கி குண்டுகள் துளைத்தன.
john f kennedy
john f kennedyfile image

ரத்த வெள்ளத்துல தன் மனைவி ஜேக்லின் கென்னடி மீது சுருண்டு விழுந்தார் ஜான் எஃப் கென்னடி.. அங்கு கூடிய ஒட்டுமொத்த மக்களும் அலறி ஓடுடினார்கள். அடுத்த அரைமணி நேரத்தில் ஜான் எஃப் கென்னடி இறந்துவிட்டதாக அறிவிக்கப்படுகிறது..

இந்த கொலை எப்படி நடந்தது.. யார் சுட்டார்கள், 60 வருடம் ஆகியும், இன்னும் மர்மமே நீடிக்க காரணம் என்ன போன்ற கேள்விகளுக்கு விடைதேடி பயணிக்கிறது இந்த சிறப்புத் தொகுப்பு.

1960ல் நடந்த தேர்தலில் வெற்றிபெற்று அமெரிக்காவின் 35வது அதிபராக மாறிய கென்னடி, மக்கள் நலத்திட்டங்களால், வெகுவா பாராட்டப்படார்.. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகள், கல்வியில புதுமையான திட்டங்கள் என்று மக்களால் பாராட்டப்படும் அதிபரா ஜொளித்தார் கென்னடி. குறிப்பிட வேண்டிய விஷியம் என்னவெனில், இயல்பிலயே நல்ல பேச்சாற்றல், எழுத்தாற்றலோடு திகழ்ந்த கென்னடி, தன்னுடைய Profiles in Courage என்கிற புத்தக்கத்திற்கு புலிட்சர் விருது பெற்றார்.

john f kennedy
சேலம்: லாட்டரி சீட்டு விற்பனை செய்த EX MLA-வின் மனைவி! கையும் களவுமாக கைதுசெய்த காவல்துறை!

புலிட்சர் விருது வென்ற ஒரே அமெரிக்க அதிபர்!

அமெரிக்க அதிபர்கள் வரலாற்றிலேயே, புலிட்சர் விருது வாங்கியது கென்னடி மட்டும்தான். அதுமட்டும் இல்ல, மிக இளம் வயதிலேயே அதிபராக பதவியேற்றதும் கென்னடிதான். சோகம் என்னவெனில், மிக இளம் வயதிலேயே உயிரிழந்த, அதாவது கொல்லப்பட்ட அதிபரும் கென்னடிதான்.

பனிப்போர் தீவிரமடைந்த நேரத்தில், சோவியத் ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே அணு ஆயுத போர் பதற்றம் ஏற்பட்ட நேரம் அது. இந்த போரை தவிர்க்க அணுகுண்டு வைத்திருந்த பிரிட்டன், ரஷ்யா நாடுகளோடு சமாதானமாக பேசி, 1963 ஆகஸ்டில், அமைதி ஒப்பந்தம் கையெழுத்திட்டார் கென்னடி. இதற்கு உலக அளவில், பாராட்டுகள் குவிந்தது. அத தொடர்ந்து அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க இருந்த நிலையில், உள்ளூரிலேயே சுற்றுப்பயணத்தை தொடங்குறார் கென்னடி.

john f kennedy
த்ரிஷா குறித்து சர்ச்சை பேச்சு: மன்சூர் அலிகான் நாளை ஆஜராக காவல்துறை சம்மன்

சரி நவம்பர் 22ம் தேதி நடந்தது என்ன?

டிரேட் மார்ட் என்கிற இடத்திற்கு சென்று உரையாற்ற வேண்டிய கென்னடி, தன்னுடைய மனைவி மற்றும் டெக்சாஸ் கவர்னரோடு சேர்ந்து ஓபன் காரில் பயணித்தார். ஆராவாரமாக சுற்றி நின்ற மக்கள் வெள்ளத்தில் அவர்களை பார்த்து கையசைக்க, காரும் பொருமையாக நகர்ந்தது. சரியாக 12.30 மணிக்கு 3 தோட்டாக்கள் சுடப்படுகிறது. ஒரு தோட்டா கென்னடியின் முதுகில் பட்டு அவரை துளைத்துக்கொண்டு முன் இருந்த டெக்சாஸ் கவர்னரின் உடலையும் துளைக்கிறது. மற்றொரு புல்லட், கென்னடியின் தலையில் பட்டு, அவரோட மூளையை துளைக்கிறது. ரத்த வெள்ளத்தில் சுருண்ட கென்னடி, மனைவியின் மடியில் சாய்ந்தபடி சுயநினைவை இழக்கிறார்.

அடுத்த 7 நிமிடத்தில், ஹாஸ்பிட்டலிற்கு கொண்டு போனாலும், தீவிரமான காயத்தால் 30 நிமிடங்களிலேயே கென்னடி உடலில் இருந்து உயிர் பிரிந்தது. அறிவிப்பால் அமெரிக்க மக்கள் ஒட்டுமொத்தமாக, கண்ணீர் கடலில் மூழ்கினார்கள். அடுத்த ஒரு மணி நேரத்தில் லீ ஆர்வே ஆஸ்வல்டு என்கிற முன்னாள் கடற்படை ஊழியர் கைது செய்யப்படுகிறார். 6 மாடி கொண்ட கட்டடத்தில் இருந்த ஆஸ்வல்ட்தான் கென்னடியை சுட்டார் என்று சொல்லப்பட்டது. கைது செய்யப்பட்ட ஆஸ்வல்ட் அடுத்த 2 நாட்களில், ஹோட்டல் உரிமையாளர் ஒருவரால், 24ம் தேதி சுட்டுக்கொல்லப்படுகிறார்.இந்த விவகாரத்தில், ஆஸ்வல்ட் ஐ சுட்ட ரூபிக்கு, வாழ்நாள் சிறை அறிவிக்கப்பட்டாலும், அடுத்த 4 வருடங்களிலேயே சிறையில் இருந்தபடி அவரும் உயிரிழந்தார்.

john f kennedy
கடலூர் | "ஊரை விட்டுக் கிளம்பு" இருளர் சமுகத்தைச் சேர்ந்த தம்பதியை மிரட்டிய ஊராட்சி மன்ற தலைவர்!

வாரன் கமிஷன் சொல்வது என்ன?

2,500க்கும் மேற்பட்ட நேர்காணல்கள், ஆயிரக்கணக்கான விசாரணைகளை மேற்கொண்ட வாரன் கமிஷன், கென்னடியின் கொலையில், வெளிநாட்டு அல்லது உள்நாட்டு சதியெல்லாம் கிடையாது. நாட்டின் முக்கியமான விவகாரம் என்பதால், இன்னைக்கு வரைக்கும் பல தகவல்கள் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.. கென்னடியை சுட்ட ஆஸ்வல்ட், ஆஸ்வல்ட் ஐ சுட்ட ரூபி இவர்களின் மரணத்தோடே கென்னடி கொலையின் உண்மைகள் புதைக்கப்பட்டதாக பத்திரிகைகள் எழுதின. அதுதான் நிதர்சனமான உண்மை.. தொடக்க காலத்தில் ஒரே புல்லட் தான் 2 பேரையும் காயப்படுத்தியது என்று பேசப்பட்டாலும், நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலமாக சுடப்பட்ட 3 புல்லட்களில், 2 புல்லட் கென்னடிய துளைத்தது உறுதியானது..

இந்த விவகாரத்தில் சோவியத் யூனியன் உள்ளிட்ட நாடுகளை குற்றம்சாட்ட விரும்பவில்லை என்று சொன்ன வாரன் கமிஷன், கொலைக்கான காரணம் ஆஸ்வல்ட் மட்டும்தான் என்று கூறியது. இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட கருத்து கணிப்பில், 65 சதவீதமான அமெரிக்கர்கள், கென்னடியை சுட்ட ஆஸ்வல்டுக்கு வெளிநாட்டு தொடர்பு இருக்கிறதென்று நம்புகிறார்கள், 29 சதவீதமான மக்கள் ஆஸ்வல்ட் ஒரு தனி மனிதனாகத்தான் இந்த வேலைய செய்திருக்கிறார் என்று நம்புகிறார்கள்.

இந்த நேரத்தில் கென்னடியின் ஒரு உரையை நினைவுகூறலாம். அதிபரான பிறகு பேசிய கென்னடி, “நாடு உனக்கு என்ன செய்யமுடியும்னு கேட்காதிங்க.. உங்களாக நாட்டுக்கு நாட்டுக்கு என்ன செய்யமுடியும்னு கேளுங்க” என்று பேசினார்.

கென்னடியின் இந்த வார்த்தைகள்தான் நாட்டுப்பற்றுக்கு நல்லதொரு உதாரணமாக இருக்கிறது. வரலாற்றில் ஒருசில தலைவர்கள் மட்டும்தான் எப்போதுமே நினைவில் நிற்பார்கள். அப்படி அமெரிக்க மக்களாக மறக்க முடியாத நாயகன்னா அது, கென்னடிதான்..

- யுவபுருஷ்

john f kennedy
ரஜினி முதல் அஜித் வரை.. மன்சூர் அலிகான் சர்ச்சை பேச்சை தொடர்ந்து வைரலாகும் நடிகர்களின் பேச்சுகள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com