கடலூர் | "ஊரை விட்டுக் கிளம்பு" இருளர் சமுகத்தைச் சேர்ந்த தம்பதியை மிரட்டிய ஊராட்சி மன்ற தலைவர்!

கடலூரில் இருளர் சமூகத்தைச் சேர்ந்த நபரை ஊராட்சிமன்ற தலைவர் மிரட்டும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஊராட்சிமன்ற தலைவர் மிரட்டும் வீடியோ காட்சி
ஊராட்சிமன்ற தலைவர் மிரட்டும் வீடியோ காட்சிfile image

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பெரிய காட்டுப்பாளையம்  கிராமத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு அரசு தொகுப்பு வீடு இருளர் சமூகத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திரன் உயிரிழந்ததால் அவரது மகன் வடிவேலு அந்த வீட்டைப் பூட்டி வைத்து விட்டு வெளிமாவட்டத்திற்கு கூலி வேலைக்குச்  சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த வீடு புதர் மண்டி கிடந்ததால் அந்த இடத்தை அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு ஒதுக்கலாம் என ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு வடிவேல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆத்திரமடைந்த  ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம், வடிவேலுவை மிரட்டியுள்ளார்.

ஊராட்சிமன்ற தலைவர் மிரட்டும் வீடியோ காட்சி
22 ஆண்டுகளுக்குப் பிறகு தடம் பதித்த தமிழ்நாடு ஹாக்கி அணி - இந்திய அணியில் இடம் கிடைக்குமா?

இதனால் இச்சம்பவம் தொடர்பாக காடாம்புலியூர் காவல் நிலையத்தில் வடிவேல் புகார் அளித்துள்ளார். புகாரைப்  பெற்றுக் கொண்ட  போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமலே அலட்சியமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வடிவேலு தரப்பில் போலீசாரை கண்டித்து போராட்டம் அறிவித்துள்ளனர்.

 வடிவேலுவை  மிரட்டும் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம்
வடிவேலுவை மிரட்டும் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம்

இந்த போராட்ட அறிவிப்புக்குப்பின், ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஊராட்சிமன்ற தலைவர் மிரட்டும் வீடியோ காட்சி
கோவை: மதுபோதையில் இளைஞரின் நெஞ்சைக் கடித்துக் காயம் ஏற்படுத்திய திமுக நிர்வாகி - நடந்தது என்ன?

இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம், வடிவேலு குடும்பத்தை மிரட்டுவது போலான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இது குறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் நாம் கேட்டபோது, "நான் அந்த இடத்தினை அங்கன்வாடி மையத்திற்குத்தான் கேட்டேன். அது புதர் மண்டி கிடப்பதால் அதனை மக்கள் பயன்பாட்டுக்குக்  கொண்டுவரத் திட்டமிட்டேன். மற்றபடி எந்தவிதமான மிரட்டலும் நான் விடுக்கவில்லை" என்றார். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com