அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்
அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்pt web

ரஷ்யா அருகில் நிலைநிறுத்தப்படும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள்; உத்தரவிட்ட ட்ரம்ப்.. நேரடி மோதலா?

ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவ் உடனான வார்த்தைப் போரை அடுத்து, ரஷ்யாவிற்கு அருகில் இரண்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
Published on

தான் அதிபரானால் ஒரே நாளில் உக்ரைன் ரஷ்யா போரை நிறுத்துவேன் என கடந்தாண்டு கூறியிருந்தார் ட்ரம்ப். ஆனால் பதவிக்கு வந்து 6 மாதங்களுக்கு மேலாகியும் போர் நின்றபாடில்லை. மாறாக போரின் தீவிரம் அதிகரிக்கவே செய்துள்ளது. புடினுடன் ட்ரம்ப் பல முறை தொலைபேசியில் பேசியும் புடின் கழுவும் மீனில் நழுவும் மீனாக உள்ளார். சிறப்பு தூதர்களை கொண்டு 3ஆம் நாடுகளிலும் பேச்சுவார்த்தை நடத்தியும் புடின் இறங்கிவரவில்லை. ‘புடினுக்கு என்னவோ ஆகிவிட்டது... உக்ரேனிய மக்களை கொன்று குவிக்கிறார்’ என்ற ரீதியில் சமூக தளத்தில் புலம்பினார் ட்ரம்ப். ரஷ்யாவுக்கு பொருளாதார தடைகளை விதிப்பதாகவும் எச்சரித்தார். ஆனால் புடினிடம் எதுவும் பலிக்கவில்லை. போரை நிறுத்துமாறு ட்ரம்ப்பின் நெருக்கடி அதிகரித்துவரும் நிலையில் அவரை நேரடியாக கடுமையாக விமர்சித்து வருகிறார் ரஷ்ய முன்னாள் அதிபரும் பாதுகாப்பு கவுன்சிலின் தற்போதைய துணைத் தலைவருமான மெட்வடேவ்.

ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவராக இருக்கும் மெட்வெடேவ் கடந்த வியாழன் அன்று அமெரிக்காவை எச்சரிக்கும் வகையில் கருத்தொன்றை வெளியிட்டிருந்தார். அதில், மாஸ்கோ இன்னும் சோவியத் சகாப்த அணுசக்தித் தாக்குதல் திறன்களைக் கொண்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று தெரிவித்திருந்தார்.

அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்
‘The Kerala Story’ படத்திற்கு தேசிய விருது ஏன்? நடுவர்கள் விளக்கத்தால் வெடித்த சர்ச்சை!

இதற்கு தனது ட்ரூத் சோசியலில் பதிலளித்திருந்த டொனால்ட் ட்ரம்ப், “ரஷ்ய முன்னாள் அதிபரும், ரஷ்ய பாதுகாப்புக் கவுன்சிலின் துணைத் தலைவராகவும் இருக்கும் டிமிட்ரி மெட்வதடேவின் சில ஆத்திரமூட்டும் கருத்துகளை அடுத்து - அவை வெறும் வார்த்தைகளாக இல்லாமல் அதன் பின்னால் வேறு ஆபத்துகள் இருக்கக்கூடும் என்பதற்காக - நான் இரண்டு ‘அணு’ நீர்மூழ்கிக் கப்பல்களை தேவையான பகுதிகளில் நிலைநிறுத்த உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்திருக்கிறார். மேலும், வார்த்தைகள் மிக முக்கியமானது எனத் தெரிவித்திருக்கும் ட்ரம்ப், இவை எதிர்பாராத விளைவுகளுக்கு வழிவகுக்கும் எனத் தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையே ட்ரம்ப் நிலை நிறுத்தச் சொன்னது அணுசக்தி என்ஜின்களைக் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்களையா அல்லது அணு ஏவுகணைகளைக் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்களையா என்பதை உறுதிப்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல், நீர்மூழ்கிக் கப்பல்களின் இருப்பிடத்தினையும் ட்ரம்ப் வெளியிடவில்லை.

அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்
சிராஜ் எனும் ’தீ’ரன்.. வெளிநாட்டு மண்ணில் 800 ஓவர்கள்.. 5 மடங்கு விக்கெட்டுகள்!

இருதரப்புக்கும் இடையேயான இந்த வார்த்தை யுத்தம் கடந்த மாதம் 28 ஆம் தேதி தொடங்கியது. அன்று காலை ஸ்காட்லாந்தில் பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரைச் சந்தித்த ட்ரம்ப் தொடர்ந்து, ரஷ்ய அதிபர் வ்லாடிமிர் புதின் உக்ரைனுடன் அமைதி ஒப்பந்தத்தைச் செய்யக்கூடிய காலக்கெடுவை 50 நாட்களிலிருந்து இரு வாரங்களுக்குக் குறைப்பதாக அறிவித்திருந்தார். இதற்கு பதிலளித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த டிமிட்ரி, “ட்ரம்ப் 2 விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும். 1. ரஷ்யா என்பது இஸ்ரேலோ அல்லது ஈரானோ அல்ல. 2. ஒவ்வொரு எச்சரிக்கையும் ஒரு அச்சுறுத்தல்தான் மற்றும் போரை நோக்கிய ஒரு படி” எனத் தெரிவித்திருந்தார். ஆனால், நீர்மூழ்கிக் கப்பல்களை நிலை நிறுத்துவது தொடர்பாக ட்ரம்ப் கருத்து தெரிவித்த நிலையில், அது தொடர்பாக கிரெம்ளினோ அல்லது மெட்வெடேவோ எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அணுசக்தி என டிமிட்ரி குறிப்பிட்டிருக்கும் நிலையில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான அணுசக்தி பலங்களை ஒப்பிட்டுப்பார்ப்பது அவசியமாகும். உலகிலிருக்கும் மொத்த அணு ஆயுதங்களில் அமெரிக்காவும் ரஷ்யாவும் மட்டும் 87% ஆயுதங்களை வைத்திருக்கின்றன. ஜனவரி 2025 ஆய்வு ஒன்று, ஒன்பது நாடுகள் மட்டுமே மொத்தம் சுமார் 12,241 அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்திருக்கிறது. 2025 ஆம் ஆண்டு நிலவரப்படி, அமெரிக்க கடற்படை 71 நீர்மூழ்கிக் கப்பல்களை கொண்டிருக்கிறது. அனைத்தும் அணுசக்தியால் இயக்கப்படுகின்றன. இது உலகளவில் இருக்கும் நீர்மூழ்கிப் படைகளில் மிகப்பெரியதாகப் பார்க்கப்படுகிறது. அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில், ரஷ்யாவிடம் அணுசக்தியால் இயங்கும் 30 நீர்மூழ்கிக் கப்பல்களே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்
’கொடூரத்தின் உச்சம்..’ - காசாவில் நிவாரண உதவிக்காக காத்திருந்த 1,373 மக்கள் கொலை!

இதற்கிடையே உக்ரைனுடன் போரை நிறுத்துமாறு ட்ரம்ப் விதித்த கடைசி கெடு ஒரு வாரத்தில் முடிவுக்கு வருகிறது. பல நாடுகளில் போரை நிறுத்தியதாக பெருமிதம் கொள்ளும் ட்ரம்ப்பின் சொல் புடினிடம் எடுபடுமா...காத்திருக்கிறது உலகம்...

அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்
தூத்துக்குடி | மனைவியை கொலை செய்துவிட்டு எஸ்கேப் ஆன CRPF வீரர்.. சென்னையில் ஹாயாக சுற்றியபோது கைது!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com