கைது செய்யப்பட்ட CRPF வீரர்pt web
குற்றம்
தூத்துக்குடி | மனைவியை கொலை செய்துவிட்டு எஸ்கேப் ஆன CRPF வீரர்.. சென்னையில் ஹாயாக சுற்றியபோது கைது!
தூத்துக்குடியில் மனைவியை கொலை விட்டு சென்னையில் சுற்றித்திரிந்த CRPF வீரரை பிடித்து தூத்துக்குடி மாவட்ட போலீசாரிடம் ஒப்படைத்த சென்னை தேனாம்பேட்டை போலீசார்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே தாளவாய்புரத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (41). இவர் CRPF வீரராக பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு விடுமுறையில் தமிழ்ச்செல்வன் ஊருக்கு சென்றபோது கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து இரவில் தூங்கிக் கொண்டிருந்த மனைவி உமா மகேஸ்வரியை கொலை செய்துவிட்டு சி ஆர் பி எப் வீரர் தலைமறைவானார். தலைமறைவான CRPF வீரர் தமிழ்ச்செல்வன் குறித்து ஏரல் போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.
இந்த நிலையில், காவல்துறை இடையே தகவல் பகிரப்பட்டதன் காரணமாக சென்னையில் சுற்றித்திரிந்த சி ஆர் பி எப் வீரர் தமிழ்ச்செல்வனை தேனாம்பேட்டை போலீசார் பிடித்து தூத்துக்குடி போலீசரிடம் ஒப்படைத்துள்ளனர்.