\
donald trump
donald trumpreuters

அமெரிக்க தேர்தலில் ட்விஸ்ட்! ட்ரம்ப்புக்கு அதிர்ச்சி கொடுத்த மக்கள்! தோல்விக்கு இதுதான் காரணம்!

அமெரிக்க தேர்தலில் ட்ரம்ப்பின் கட்சி மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளது. இந்தத் தோல்விக்கு இதுதான் காரணம் என அமெரிக்கத் துணை அதிபர் JD Vance பகிரங்கமாகத் தெரிவித்திருக்கிறார். அப்படி தேர்தல் தோல்விக்குக் காரணமாக அவர் கூறியது என்ன? பார்க்கலாம்.
Published on: 
Summary

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சி தோல்வியடைந்து, ஜனநாயகக் கட்சி இரு அவைகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் ட்ரம்ப் ஆட்சிக்கு அடுத்த இரண்டு ஆண்டுகள் சவால்களால் நிறைந்ததாக இருக்கும்.

செய்தியாளர் - ராஜ்குமார். ர

அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் முக்கியமான தேர்தல்தான் இடைக்காலத் தேர்தல். அந்த வகையில், நவம்பர் 3ஆம் தேதி நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்தத் தேர்தலில் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சியைத் தோற்கடித்து எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஜனநாயகக் கட்சி கட்டுப்பாட்டைக் கைப்பற்றியுள்ளது. இதனால் ட்ரம்ப் தலைமையிலான அரசுக்கு அடுத்த இரண்டு ஆண்டுகள் அரசியல் ரீதியாகப் பல்வேறு சவால்கள் காத்திருக்கின்றன.

Indentured Servants’ Slur: India Hits Back at US Over Vance’s Remarks
JD vance Reuters

இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சி பின்னடைவைச் சந்தித்ததற்கு முக்கியக் காரணமாக, அமெரிக்க மக்கள் மத்தியில் ட்ரம்ப் ஆட்சி மீதான அதிருப்தி இருந்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, பணவீக்கம் மற்றும் அரசின் கொள்கைகள் ஆகியவை வாக்காளர்களின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தியதாகப் பார்க்கப்படுகிறது.

donald trump
தோல்வியை தழுவிய ட்ரம்ப் கட்சி| மாபெரும் வெற்றிபெற்ற எதிர்க்கட்சி.. அமெரிக்க தேர்தலில் அதிரடி மாற்றம்
donald trump
இஸ்ரேலில் புதிய அரசியல் திருப்பம்.. நெதன்யாகுவுக்கு மாற்றாக காடி ஐசன்கோட்?

இந்தச் சூழலில்தான் அமெரிக்கத் துணை அதிபர் JD Vance வெளியிட்டுள்ள கருத்து கவனம் பெற்றுள்ளது. குடியரசுக் கட்சியின் தோல்வி குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அவர், 'நாம் தோல்வியடைந்ததற்கான காரணம் 'போர்' என நேரடியாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவது மட்டுமல்லாமல், வாழ்க்கைச் செலவு மற்றும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது, அமெரிக்காவின் நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளிலும் குடியரசுக் கட்சி கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

donald trump
donald trumpreuters

இதற்கிடையே, ட்ரம்ப் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்றும், தான் போட்டியிட்டிருந்தால் குடியரசுக் கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார். ஆனால், தேர்தலுக்குப் பிறகு வெளியான வாக்காளர் கருத்துக் கணிப்புகளில், சுமார் பாதி வாக்காளர்கள் ட்ரம்ப் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தும் நோக்கிலேயே இந்தத் தேர்தலில் வாக்களித்ததாகத் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு, அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ட்ரம்ப் கட்சி சந்தித்துள்ள பின்னடைவு அந்நாட்டின் அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும், ட்ரம்ப்பின் நெருங்கிய அரசியல் கூட்டாளியான துணை அதிபர் JD Vance-ஏ, ஈரான் போரைத் தேர்தல் தோல்விக்கான காரணமாகச் சுட்டிக்காட்டியிருப்பது சர்வதேச அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

donald trump
முடிவுக்கு வரும் ட்ரம்ப்பின் ஆட்டம்.. வெளியான அமெரிக்கத் தேர்தல் முடிவுகள்.. குஷியில் எதிர்க்கட்சி!
donald trump
இஸ்ரேலில் ஆட்சியைப் பிடிக்க குறுக்கு வழி.. எதிர்க்கட்சியுடன் கைக்கோர்க்கும் நெதன்யாகு?