\
Israels Political Twist Gadi Eisenkot to Replace Netanyahu
benjamin netanyahureuters

இஸ்ரேலில் புதிய அரசியல் திருப்பம்.. நெதன்யாகுவுக்கு மாற்றாக காடி ஐசன்கோட்?

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, வலதுசாரி மற்றும் தேசியவாதக் கட்சிகளை ஒன்றிணைத்து ஒரு வலுவான தேசிய அரசை அமைக்கும் தனது நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
Published on: 

இஸ்ரேலில் 120 உறுப்பினர்களைக் கொண்ட நெசெட் (Knesset) நாடாளுமன்றத்திற்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், இறுதித் தேர்தல் முடிவுகளின்படி, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அணியோ அல்லது எதிர்க்கட்சியோ அரசாங்கத்தை அமைக்கத் தேவையான 61 இடங்களைப் பெறவில்லை. சிஎன்என் தகவலின்படி, 120 உறுப்பினர்களைக் கொண்ட நெசெட்டில் நெதன்யாகுவின் வலதுசாரி அணி 53 இடங்களையும், மிதவாத யஷார் கட்சித் தலைவர் காடி ஐசன்கோட் தலைமையிலான எதிர்க்கட்சி 48 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

benjamin netanyahu
benjamin netanyahureuters

மீதமுள்ள 19 இடங்களை அரபு தலைமையிலான கட்சிகள் வென்றுள்ளன. இதனால் இஸ்ரேல் அரசியல் நிச்சயமற்ற நிலையை எதிர்கொண்டுள்ளது. தேர்தல் முடிவுகளால் நாட்டில் தொங்கு நாடாளுமன்றம் உருவாகியுள்ளதுடன், அடுத்த அரசாங்கத்தை அமைப்பதில் அரபு நாடுகள் தலைமையிலான கட்சிகளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

Israels Political Twist Gadi Eisenkot to Replace Netanyahu
நெதன்யாகுவுக்கு செக்.. ஆட்சியைக் கையில் எடுத்த அரபு கட்சிகள்.. மாற்றத்துக்கு தயாராகும் இஸ்ரேல்!

இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, வலதுசாரி மற்றும் தேசியவாதக் கட்சிகளை ஒன்றிணைத்து ஒரு வலுவான தேசிய அரசை அமைக்கும் தனது நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். இது இஸ்ரேலிய அரசியலில் தனது கூட்டணியை வலுப்படுத்தவும், பெரும்பான்மையை நிரூபிக்கவும் அவர் மேற்கொள்ளும் முக்கிய அரசியல் வியூகமாகப் பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், அரபுக் கட்சிகளின் ஆதரவை நிராகரித்துள்ளார்.

மறுபுறம், எதிர்க்கட்சி கூட்டணி, விரைவில் அதிகாரப் பரிமாற்றத்தை உறுதி செய்வதையும், இஸ்ரேல் மற்றொரு தேர்தலை எதிர்கொள்வதைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. நாட்டின் 38வது அரசாங்கத்தை அமைப்பது குறித்து 'சேஞ்ச்' அணியின் தலைவர்கள் விவாதித்து ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, யஷார் கட்சியின் தலைவர் காடி ஐசன்கோட்டைத் தங்கள் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த எதிர்க்கட்சிகள் அணிதிரள ஒப்புக்கொண்டுள்ளன. இதன்மூலம், அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கும் பெஞ்சமின் நெதன்யாகுவின் பதவிக்காலத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்குமான முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.