\
Putin and Trump
Putin and TrumpReuters

தொடரும் போர் | ஈரானுக்கு துணையாக இருப்பது யார்? பின்வாங்கும் US-க்கு ரஷ்யா எச்சரிக்கை!

ஹார்முஸ் நீரிணை கட்டுப்பாடு, பொருளாதாரத் தடைகள், அணு ஆயுத அச்சுறுத்தல் ஆகியவற்றால் பதற்றம் உயரும் நிலையில், ராணுவ அழுத்தம் நிலைமையை மோசமாக்கும் என அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.
Published on: 

செய்தியாளர் - M. மீரா

அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலால் தொடங்கிய ஈரான் போர் ஏழு மாதங்களாக நீடிக்க, கத்தார் மூலம் ட்ரம்ப் நிர்வாகத்துக்கு ஏழு நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டன. போரை நிறுத்துதல், முடக்கப்பட்ட நிதியை விடுவித்தல், ஹார்முஸ் நீரிணை திறப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால், ட்ரம்ப் இந்த முன்மொழிவை ஏற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், அமெரிக்கா தற்போது ஹார்முஸ் நீரிணையில் கட்டுப்பாட்டை வைத்திருப்பதாகவும், ஈரான் பொருளாதாரரீதியாக அழுத்தத்தில் இருப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

donald trump
donald trumpreuters

Fox News-க்கு அளித்த பேட்டியில், ஈரானுடனான போர் விரைவில் முடிவடையும் என்றும், மோதல் முடிந்ததும் எண்ணெய் விலை கணிசமாகக் குறையும் என்றும் அவர் கூறியுள்ளார். ஈரான் அணு ஆயுதத்தைப் பெறுவதைத் தடுப்பதே அமெரிக்காவின் முக்கிய நோக்கம் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், ’நவம்பர் மாத இடைக்காலத் தேர்தலுக்கு முன்பாக அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்துமா’ என்ற கேள்விக்கு, ’இல்லை’ என்று அவர் பதிலளிக்கவில்லை. ஆனால், அத்தகைய நடவடிக்கை குறித்து உறுதியான முடிவையும் அவர் தெரிவிக்கவில்லை. ஈரானின் பொருளாதாரம் ஏற்கெனவே மோதல் மற்றும் பொருளாதாரத் தடைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சியும், மோதல் தீவிரமடைந்தாலும் ஈரான் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் என்று கூறியுள்ளார். அதேநேரத்தில், உண்மையான தூதரக பேச்சுவார்த்தைக்கு ஈரான் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Abbas Araqchi
Abbas AraqchiReuters

இந்நிலையில் அமெரிக்காவுக்கு ரஷ்யா கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. பல ஆண்டுகளாக ஈரான் மீது அழுத்தம் கொடுத்தும் அதன்மூலம் எதிர்பார்த்த மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை என்றும், மேலும் ராணுவ அழுத்தத்தை அதிகரிப்பது நிலைமையை மோசமாக்கும் என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

Putin and Trump
பிரிட்டனுக்குக் குறி..? தாக்குதல் நடத்தத் திட்டம்..? விரிவடையும் ஈரான் போர்?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ரஷ்யாவின் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது. வியன்னாவில் உள்ள சர்வதேச அமைப்புகளுக்கான ரஷ்யாவின் பிரதிநிதி மிகைல் உல்யானோவ், அமெரிக்கா பல ஆண்டுகளாக ஈரானின் பொருளாதாரம் சரிவடையும் என எதிர்பார்த்து அழுத்தம் கொடுத்து வருவதாகக் கூறியுள்ளார்.

Mikhail Ulyanov
Mikhail Ulyanovreuters

அவர் தனது X பதிவில், அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதற்குப் பதிலாக தூதரக ரீதியான பேச்சுவார்த்தைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அமெரிக்கா, பாரசீக வளைகுடா நாடுகள் மற்றும் சர்வதேச சமூகத்தின் நலனுக்கு அமைதியான பேச்சுவார்த்தைதான் சிறந்த தீர்வாக இருக்கும் என்றும் ஈரானை பின்வாங்க வைக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, ரஷ்யா மற்றும் ஈரான் இடையிலான உறவு குறித்த மற்றொரு முக்கிய தகவலும் வெளியாகியுள்ளது. ரஷ்ய அரசு தயாரித்ததாகக் கூறப்படும் 44 பக்க ஆவணம், 2024 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார, எரிசக்தி, நிதி மற்றும் அணுசக்தி ஒத்துழைப்பை அதிகரிக்கும் திட்டத்தை முன்வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Putin and Trump
பேச்சுவார்த்தைக்கு No சொன்ன ட்ரம்ப்.. ஹார்முஸை கண்ணிவெடிகளால் நிரப்பிய ஈரான்?

இந்த 44 பக்க திட்டம் தற்போதைய போர் தொடங்குவதற்கு முன்பே தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனவே, அதில் குறிப்பிடப்பட்ட அனைத்து திட்டங்களும் தற்போது நடைமுறையில் உள்ளனவா அல்லது போர் காரணமாக அவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளனவா என்பது தெளிவாகவில்லை.

முன்னதாக CNN-வெளியிட்ட செய்தி அறிக்கையின்படி , ரஷ்யா தனது அதிநவீன செயற்கைக்கோள் கட்டமைப்புகள் மூலம் அமெரிக்க ராணுவத்தின் கப்பல்கள், விமானங்கள் மற்றும் வீரர்களின் இருப்பிடம் மற்றும் நகர்வுகள் குறித்த தகவல்களை ஈரானுக்கு வழங்கியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியிருந்தனர்.

US air base in Middle east
US air base in Middle east Reuters

குறிப்பாக, ரஷ்யாவின் செயற்கைக்கோள்கள் மூலம் கிடைக்கும் தகவல்கள், அமெரிக்க ராணுவ இலக்குகளை அடையாளம் காண ஈரானுக்கு உதவியிருக்கலாம் என கூறப்படுகிறது.

இவ்வாறு அமெரிக்க அழுத்தத்துக்கு மத்தியிலும் ஈரான் பின்வாங்கப் போவதில்லை என ரஷ்யா தெரிவித்திருப்பது, ஈரான் உடனான அதன் நீண்டகால பொருளாதார, எரிசக்தி, அணுசக்தி மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு இரு நாடுகளின் உறவை மேலும் முக்கியத்துவம் பெறச் செய்துள்ளது

Putin and Trump
US-க்கு தண்ணி காட்டிய சீனா.. 1,300 ஷிப்மென்ட் முழுக்க ஆயுதங்கள்.. அசுரபலம் பெற்ற ஈரான்?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com