nestle
nestleட்விட்டர்

ஏழை நாடுகளில் விற்கப்படும் நெஸ்ட்லேவின் சர்க்கரை அளவு அதிகரிப்பு.. ஆய்வில் பகீர் தகவல்!

ஏழை நாடுகளில் விற்பனையாகும் பால் பொருள்கள் உள்பட குழந்தைகளுக்கான உணவில்தான் அதிக சர்க்கையை சேர்க்கப்படுவதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

’போர்ன்விட்டா’ போன்ற பானங்கள் 'ஹெல்த் டிரிங்க்ஸ் அல்ல’!

சமீபகாலமாக, குழந்தைகளுக்கான உணவுப் பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதுவடன், அதுகுறித்த செய்திகளும் பேசுபொருளாகி வருகின்றன. இந்தியாவில், ’ஹெல்த் டிரிங்க்ஸ்’ என்ற பெயரில் விற்கப்படும் பல தயாரிப்புகள் உண்மையாக ஆரோக்கியமானது இல்லை என பல வருடங்களாக மக்கள் மத்தியில் கருத்து நிலவி வருகிறது. இந்த நிலையில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் (NCPCR) நடத்திய விசாரணையின் அடிப்படையில், ’போர்ன்விட்டா போன்ற பானங்கள் 'ஹெல்த் டிரிங்க்ஸ் அல்ல’ என்று கண்டறியப்பட்டது.

ஏனென்றால், இந்திய உணவுச் சட்டங்களில் 'ஹெல்த் டிரிங்க்ஸ்' என்ற வார்த்தை வரையறுக்கப்படவில்லை. இதையடுத்து, மத்திய வணிகர் மற்றும் தொழில்துறை அமைச்சகம் கடந்த வாரம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், ‘அனைத்து இ-காமர்ஸ் நிறுவனங்களும் தங்களது இணையதளங்களின் ஆரோக்கிய பானம் (ஹெல்த் டிரிங்க்) பட்டியலில் இருந்து போர்ன்விட்டா உள்ளிட்ட பானங்களின் பெயர்களை நீக்க வேண்டும்’ என அதிரடி அறிவிப்பை கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி வெளியிட்டிருந்தது.

இதையும் படிக்க: மசூதியை நோக்கி அம்பு விடுவதுபோல் செய்கை.. சர்ச்சையில் சிக்கிய பாஜக வேட்பாளர்.. யார் இந்த மாதவி லதா?

nestle
மதுரை: குழந்தைக்கு வாங்கிய குளிர்பானத்தில் ரப்பர் பொருள் - பொறுப்பின்றி பதிலளித்த மேலாளர்!

நெஸ்ட்லேவில் அதிக சர்க்கரை: ஆய்வில் தகவல்

இந்த நிலையில், குழந்தைகளுக்கான உணவுப்பொருட்களில் மிகப்பிரபலமான நெஸ்ட்லேவும், அடுத்த சர்ச்சையைச் சந்தித்துள்ளது. ஸ்விஸ் புலனாய்வு அமைப்பு, சர்வதேச குழந்தைகள் உணவு அமைப்பு இணைந்து நடத்திய ஆய்வறிக்கையை ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ’ஏழை நாடுகளில் விற்பனையாகும் பால் பொருள்கள் உள்பட குழந்தைகளுக்கான உணவில்தான் அதிக சர்க்கையை சேர்க்கப்படுகிறது. பிற நாடுகளில் குறைந்த அளவே காணப்படுகிறது. இந்த விஷயத்தில் நெஸ்ட்லே இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த அறிக்கையில், ‘உலகளவில் விற்பனையாகும் குழந்தைகளுக்கான உணவுப்பொருள்களில் சேர்க்கப்படும் சர்க்கரை அளவு 11 சதவீதம் அளவுக்குக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், சுவை, தரம் பாதுகாப்பு மாறாமல், சர்க்கரை அளவு குறைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் விற்பனையாகும் செர்லக் என்ற குழந்தை உணவுகளில் ஒரு கிண்ணத்துக்கு 3 கிராம் சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கிறது. இதுவே தாய்லாந்தில் 6 கிராமாகவும், எத்தியோப்பியாவில் 5.2 கிராமாகவும், தென்னாப்பிரிக்காவில் 4 கிராமாகவும் உள்ளது. அதுவே, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் பூஜ்ஜியமாக உள்ளது. இந்த இரட்டை நிலைப்பாட்டை அந்நிறுவனம் எப்போதும் நியாயப்படுத்த முடியாது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

இதையும் படிக்க: பாஜகவுக்கு 1 வாக்கு அளித்தால் 2 வாக்குகள் பதிவாகிறதா? கேரள மாதிரி வாக்குப்பதிவில் அதிர்ச்சி புகார்!

nestle
மீண்டும் எழுந்த சிக்கல்! குழந்தைகளின் பிரபல இருமல் மருந்து.. 6 ஆப்ரிக்க நாடுகளில் விற்க தடை!

அதிக சர்க்கரை: விளக்கம் அளித்த நெஸ்ட்லே!

ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்க நாடுகளில் விற்பனையாகும் குழந்தைகளுக்கான உணவுப் பொருள்கள் பெல்ஜிய ஆய்வுக்கூடத்தில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தைகளுக்கு அதிகப்படியான சர்க்கரையைக் கொடுப்பது உடல்பருமன் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்குக் காரணமாக அமையும் என்பதால் இந்த விவகாரம் உலக அளவில் பேசுபொருளாகி இருக்கிறது.

ஆனால், இந்த விவகாரத்திற்கு நெஸ்லே இந்தியா செய்தித் தொடர்பாளர் பதிலளித்துள்ளார். அவர், “எங்கள் சிறுதானியப் பொருட்கள், புரதம், கார்போஹைட்ரேட்டுகள், வைட்டமின்கள், தாதுக்கள், இரும்புச்சத்து போன்ற ஊட்டச்சத்து தேவைகளை குழந்தைப் பருவத்தில் சரியான முறையில் வழங்குவதை உறுதி செய்வதற்காக உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதை நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறோம். எங்கள் தயாரிப்புகளின் தரத்தை மேம்படுத்த விரிவான ஆராய்ச்சியைப் பயன்படுத்துகிறோம். கடந்த 5 ஆண்டுகளில், நாங்கள் ஏற்கெனவே 30 சதவிகிதம் வரை சேர்க்கப்பட்ட சர்க்கரை அளவைக் குறைத்துள்ளோம். நாங்கள் எங்கள் போர்ட்ஃபோலியோவை தொடர்ந்து மதிப்பாய்வு செய்துவருகிறோம். அதன்படி, சேர்க்கப்பட்ட சர்க்கரைகளின் அளவை மேலும் குறைக்க எங்கள் தயாரிப்புகளைப் புதுப்பிக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: இஸ்ரேலுடன் ஒப்பந்தம் வேண்டாம்’ CEO அறையில் உள்ளிருப்பு போராட்டம்-28 ஊழியர்களை நீக்கம் செய்த கூகுள்!

nestle
உயிரை கொல்லும் நச்சு பொருள் பஞ்சுமிட்டாயில் கலப்பா; உணவுத்துறை அதிகாரிகள் சொல்லும் வேதிப்பொருள் எது?
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com